CATEGORIES
Kategorier
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலத்தை பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை மீட்டனர்.
மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பக் கெர், டெமிஸ் ஹஸ்ஸாபிஸ், ஜான் ஜம்பெர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
ரத்தன் டாடா (86) காலமானார்
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
போராட்டத்தைக் கைவிட வேண்டும்
சாம்சங் தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
ஹரியாணாவில் ‘இவிஎம்' குளறுபடி விசாரணை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
இலவச அரிசி திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
போட்டியாளர்களின் செயலிகளுக்கும் கூகுள் 'ப்ளே-ஸ்டோரில்' இடம்!
செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கூகுள் நிறுவனத்தின் ‘ப்ளே-ஸ்டோா்’ தளத்தில் அந்த நிறுவனத்தின் போட்டியாளா்களுடைய செயலிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர்: எஸ்.ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளுக்கும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
சல்மான் அகா சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
'இண்டியா' கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆராய்ந்து, இனி வரும் தேர்தல்களில் 'இண்டியா' கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ரஷீத் கட்சி படுதோல்வி
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீதின் அவாமி இதே ஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது.
தோல்விக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும்
ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கு யாா் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளாா்.
நல்ல நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி: பிரதமர்
ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜகக்கு கிடைத்த வெற்றி, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அக்.15-இல் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்
பருவ மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம்தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரூ.38,698 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.38,698 கோடி மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போதைப் பொருள் விற்பனையாளர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கம்: டிஜிபி
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்
அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருப்பூரில் நாட்டு வெடி வெடித்து குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
திருப்பூரில் வீட்டில் தயாரித்த நாட்டு வெடி வெடித்ததில் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது
அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.46,000 கோடி இறால் ஏற்றுமதி
இந்தியா ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால் மீன்களை ஏற்றுமதி செய்வதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறினார்.
சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம்
நாட்டில் புது மைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணைய பாதுகாப்பு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே': ஏ.ஆர். ரகுமான்
\"தேசிய திரைப்பட விருது பெற்றது பெருமை அளிப்பதாகவும், எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றும் \"பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.
பாஜக‘ஹாட்ரிக்' வெற்றி முதல்வராகிறார் ஒமர்
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.