CATEGORIES
Kategorier
மணலி ‘பயோ கேஸ்’ ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
மணலியில் உள்ள ‘பயோ கேஸ்’ தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆலையை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவைத் தேர்தல் பணி: அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 3.50 கோடி மோசடி: 2 இளைஞர்கள் கைது
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ. 3.50 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

எண்ணூரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
எண்ணூரில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் ஹேமந்த் (19) ஞாயிற்றுக்கிழமை கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

உள்ளாட்சித் தேர்தல் மசோதா நிறைவேற்றம்
இலங்கையில் தடைப்பட்டதுள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் மகளிர் விடியல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
சென்னையில் மகளிர் விடியல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு: ஏப்ரலில் உச்சநீதிமன்றம் விசாரணை
1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் விசாரிக்க உள்ளது.
ஜெய்சங்கருடன் கத்தார் அரசர் இருதரப்பு பேச்சு
இருநாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்த கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை
மத்திய அமைச்சர் எல்.முருகன்
இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை (பிப். 18) நடைபெறவுள்ளது.

தேசிய பாரா தடகள போட்டிகள்: சென்னையில் இன்று தொடக்கம்
23-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
பாரதியார் பல்கலை.யில் தொலைநிலை, இணைய வழி பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை, தொலைநிலை, இணையவழிக் கற்றல் பிரிவுகளில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெளிச் சந்தையில் 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு அனுமதி
கோடைகால மின் தேவையைச் சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின் சார வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனு மதி வழங்கியுள்ளது.
புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இரு இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை காணொலி காட்சி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மனு பாக்கருக்கு பிபிசி விருது
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது', துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
சட்டவிரோத மருந்து விற்பனை: 76 மருந்தகங்களின் உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த 59 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் தமிழ்ச் சங்கத்தில் பிப். 23-இல் அகத்தியர் விழா
அஸ்ஸாம் தமிழ்ச் சங்கம், மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி ஆகியவை சார்பில் அகத்தியர் விழா, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள கிரிஜானந்தா சௌத்ரி பல்கலைக்கழகத்தில் பிப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை சிறுமிக்கு பாலியல் கொடுமை: போக்ஸோவில் 2 இளைஞர்கள் கைது
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் 2 இளைஞர்களைக் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அடையாறு புற்றுநோய் மையத்தில் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிகிச்சை பெறவும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சச்சின் அரை சதம்; கேரளம் - 206/4
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், குஜராத் துக்கு எதிராக கேரளம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்துள்ளது.

கோல் இந்தியா நிகர லாபம் 17% சரிவு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 17.4 சதவீதம் சரிந்துள்ளது.
சுவாசத் தொற்று: முகக்கவசம், தடுப்பூசி அவசியம்
தமிழகத்தில் தற்போது சுவாச பாதிப்பு, இன்ஃப்ளூயன்ஸா வகை காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதியவர்களுக்கும் இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி, முகக் கவசம் அவசியம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண்!
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்துள்ளார்.
பிரபல ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: தனிப்படைகள் அமைத்து விசாரணை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 41,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 41,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதாக மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மத்திய இணை அமைச்சர் ஹரிஷ் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கஞ்சா சாக்லெட் விற்பனை: ஒடிஸா இளைஞர் கைது
சென்னை சென்ட்ரலில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்ததாக ஒடிஸா இளைஞர் கைது செய்யப்பட்டார்.

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான கட்டணமில்லா சிறப்பு வழிகாட்டுதல் முகாமுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.
வங்கி வைப்புத் தொகை காப்பீட்டை ரூ.5 லட்சத்துக்கு மேல் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீட்டை இப்போது உள்ள ரூ.5 லட்சம் என்பதில் இருந்து உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலர் என்.நாகராஜு தெரிவித்தார்.