CATEGORIES
Kategorier

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?
தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், சுத்தமான குடிநீர் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு புதிய ஆட்சி முன்னுரிமை அளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
கேரள வங்கியில் கத்திமுனையில் ரூ.15 லட்சம் கொள்ளை
கேரளத்தில் தனியார் வங்கி ஒன்றில் கத்திமுனையில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் கிண்ணம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான கிண்ணம் (படம்) வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

கிளர்ச்சியாளர்கள்வசம் கவுமு விமான நிலையம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

கோப்பை வென்றது நியூஸிலாந்து
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
கேரளம்: கொடூர ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவர் அமைப்பினர்
கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவர் அமைப்பினர் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பெண் காவலர் பொய் பாலியல் புகார்: மகேஷ்குமார் மனைவி குற்றச்சாட்டு
வீடு கட்ட ரூ. 25 லட்சம் கொடுக்காததால் பெண் காவலர் பொய்யான பாலியல் புகார் அளித்துள்ளதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மகேஷ்குமாரின் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.

வாகை சூடும் அணிக்கு ரூ.19 கோடி ரொக்கப் பரிசு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பை வெல்லும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.19.41 கோடி வழங்கப்படவுள்ளது.

வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
ஊராட்சி செயலர் மற்றும் தூய்மைப் பணியாளர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சறுக்கினார் ஸ்வியாடெக்; அசத்தினார் ஆஸ்டபென்கோ
1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் ஆஸ்டபென்கோ இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது, இது 4-ஆவது முறையாகும். கத்தார் ஓபனில் இது அவரின் 2-ஆவது இறுதிச்சுற்று. அந்த சுற்றில் அவர், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா அல்லது அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவர்கள் நாயன்மார்கள்
ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவர்கள் நாயன்மார்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்குறள் ஆய்வு மையத் தலைவருமான முனைவர் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
சுற்றுச்சூழல் விதிகள் மீறல் விவகாரம்

மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதி
கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் புகழஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா நகரில் பயங்கரவாதிகள் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் படைவீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.

போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2025 சனிக்கிழமை (பிப். 15) தொடங்குகிறது.

விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள்; பெயர்களை வெளியிட்டது ஹமாஸ்
ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, தாங்கள் சனிக்கிழமை (பிப். 15) விடுவிக்கவிருக்கும் மூன்று பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
ராமநாதபுரம் அருகே பேருந்து மீது கார் மோதல்: மூவர் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
ரஷிய-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமர் மோடி
'ரஷிய-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது' என்று பிரதமர் மோடி கூறினார்.
சீன எல்லை விவகாரத்தில் மூன்றாவது தரப்பை அனுமதிக்க முடியாது
டிரம்ப் கருத்தை நிராகரித்தது இந்தியா

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு
விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

காசி தமிழ் சங்கமம் 'அனுபவ பகிர்வு' கட்டுரை போட்டி
ஆளுநர் மாளிகை அறிவிப்பு
பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை கோரி கடலூர் சாலையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
காதலர் தின கொண்டாட்டம்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த காதலர்கள்
காதலர் தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள கடற்கரை மற்றும் பூங்காக்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.