CATEGORIES
Kategorier
சேலம் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
சேலம் ஆவின் பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
திருக்கோயில்களின் ரூ.6,847 கோடி சொத்துகள் மீட்பு
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வங்கக் கடலில் புயல் சின்னம்?
சென்னை, நவ. 8: வங்கக் கடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 9, 10) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக சுற்றுலா வணிக வாய்ப்பு: பிரிட்டன் நிறுவனங்களுக்கு அழைப்பு
புது தில்லி, நவ.8: தமிழகத்தில் சுற்றுலா சார்ந்த வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள பிரிட்டன் சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்ததுள்ளது.
திமுக கூட்டணி வலிமையாக உள்ளது
காரைக்குடி, நவ. 8: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி வலிமையாவும், உறுதியாகவும் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பு ரத்து
புது தில்லி, நவ. 8: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1967-இல் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு வெள்ளிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
சென்னை, நவ. 8: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்புக்கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்
அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.171 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு: நவ.25-க்குள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு நவ.25-ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் நடத்தி முடிக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை
மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணிக்கு உரிய ஆணையங்களின் அனுமதி பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உறக்கம் ஓர் அருமருந்து!
உறக்கமின்மை என்பது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமான ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உள்ளத்திற்கும், உடலுக்கும் தேவையான ஓய்வைத் தருகிறது. அதனால் நாம் உடலிலும், மனதிலும் புத்துணர்ச்சியைப் பெறுகிறோம்.
அண்ணல் காந்தியுடன் ஓர் அரிய சந்திப்பு
மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் அதிகம் பரவாத காலத்தில், ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் காந்தி இடம் பிடித்தார். போரில்லா உலகத்தை உருவாக்கப் பாடுபட்டார். 'மகாத்மா' என்று உலக மக்களால் நேசிக்கப்பட்டார்.
சிறைக் காவலர்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களா?
விசாரணை நடத்த உள்துறைச் செயலருக்கு உத்தரவு
தொடர்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை
அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
சென்னை - தில்லி விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி
சென்னையிலிருந்து தில்லிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் 8 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேச்சு: விசிகவிலிருந்து 2 நிர்வாகிகள் இடைநீக்கம்
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து 2 நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மழைக் காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித் தொகை
நெசவாளர்களுக்கு மழைக்காலத்தில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கூறினார்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்
ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு
கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
சென்னை, நவ.8: அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்
மக்கள் நலத்திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி
திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.செல்வராஜ் (66), திருப்பதியில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கோவை வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவையில் இரு நாள்கள் நடைபெற்ற பன்னாட்டு வாங்குவோர்-விற்போர் சந்திப்பு நிகழ்வில் ரூ.115.35 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு வழக்கு: 3 பேரை காவலில் விசாரிக்க அனுமதி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை 6 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் என்ஐஏ வுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் கொலை எதிர் வீட்டுக்காரர் கைது
சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிர் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடி, நவ. 8: பூந்தமல்லியில் ஆக்கிரமித்து வைத்திருந்த நகராட்சிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு பெங்களூரு இளைஞர் கைது
பெங்களூரு இளைஞர் கைது
ஐ.நா.விருது: சுகாதாரத் துறைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை, நவ.8: தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைக்கப்பெற்ற ஐ.நா. விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் காண்பித்து மக்கள் நல்வாழ்வுத் துறையினர் வாழ்த்து பெற்றனர்.
பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி!
சென்னை, நவம்பர் 8: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வர் நேரில் சென்று பேச்சாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.