CATEGORIES
Kategorier
விமானப் படைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
எழுத்தறிவுத் திட்ட தேர்வு: 5 லட்சம் பேர் பங்கேற்பு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் - காவல் துறை கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், பூந்தமல்லியில் பொதுமக்கள் - காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பூண்டி ஏரிக்கரையில் 8 கி.மீ. தொலைவு நடைபாதை அமைப்பு
'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தில் பொதுமக்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில், பூண்டி ஏரியில் 8 கி.மீ. தூரம் நடைபாதை சுகாதார வாசங்களுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 9 விமானங்களின் சேவை திடீர் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தாமிரவருணியில் கழிவுநீர் கலப்பா?
தாமிரவருணி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
ஆவடியில் ரூ.15 லட்சத்தில் மீன் அங்காடி சீரமைப்பு பணி
அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
தமிழ்த் திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (நவ. 9) இரவு காலமானார்.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்
தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கும்
பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் உயர் கல்வி வரையிலான கல்விச் செலவை முழுமையாக தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் தீப் சிங் கில் என்ற அர்ஷ் தல்லா அந்த நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்; பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
6 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் நவ.15 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரத்தில் கடல் விமான சோதனை ஓட்டம்
ஆந்திரத்தில் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட கடல் விமானத்தின் சோதனை ஓட்டம்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.143.84 கோடியாக அதிகரித்துள்ளது.
காஸா போர்: மத்தியஸ்த முயற்சிகளைக் கைவிட கத்தார் முடிவு
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தற்காலிகமாகக் கைவிட கத்தார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் சரிவு
கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
டிரம்ப்புக்காக ஆயத்தமாகும் ஐரோப்பா!
உலகின் மிக சக்திவாய்ந்த பதவி என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்பவர்கள் எடுக்கும் முடிவுகள், சர்வதேச அளவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிவு
கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,213 கோடி டாலராக சரிந்துள்ளது.
விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, ஸொமாட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் ஸொமாட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
5-ஆவது சுற்றில் டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர் பிரிவு 5-ஆவது சுற்றில் டிரா செய்தார் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகைசி. அதேவேளை சேலஞ்சர்ஸ் பிரிவில் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்ற பிரணவ், முதன்முறையாக டிரா கண்டார்.
இறுதி ஆட்டத்தில் கோகோ கெளஃப் - ஸெங் மோதல்
டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ஒலிம்பிக் சாம்பியனும் சீனாவின் ஸெங் குயின்வென்னும் மோதுகின்றனர்.
டிராவில் முடிந்தது ஐஎஸ்எல் தொடரின் 1,000-ஆவது ஆட்டம்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 1,000-ஆவது ஆட்டம் என்ற சிறப்புடன் நடைபெற்ற சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
ஜாமீன் மனு மீதான முடிவை ஒரு நாள் தாமதிப்பதும் அடிப்படை உரிமையை கடுமையாக பாதிக்கும்
'ஜாமீன் மனு மீதான முடிவை எடுக்க நீதிமன்றங்கள் ஒரு நாள் தாமதிப்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிபதிகள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
உ.பி.: 'நீட்' பயிற்சி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
இரு ஆசிரியர்கள் கைது
காலிஸ்தான் ஆதரவாளர்கள் அனைவரும் சீக்கியர்கள் அல்ல: கனடா
ஒட்டாவா, நவ.9: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகளவில் உள்ளனர்; ஆனால் அவர்கள் அனைவரும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கரோனா முறைகேடு: எடியூரப்பா மீது வழக்கு தொடர நீதி விசாரணை ஆணையம் பரிந்துரை
கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்
பெரு நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ஏழைகளுக்கு அளிக்கப்படும்
முதலாளிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள கடன் தள்ளுபடிக்கு இணையான நிதி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டில் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.