CATEGORIES
Kategorier
விவசாயிகள்மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
மீண்டும் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா
நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் மீண்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
தனுஷ் சிறந்த மனிதர்: பாராட்டிய ‘ரோபோ' சங்கர்
தனுஷ் மிகச் சிறந்த மனிதர் எனப் பாராட்டியுள்ளார் நடிகர் ‘ரோபோ’ சங்கர்.
மனத்தின் குரலுக்குச் செவிசாய்த்த இசைக்கலைஞர்
பியானோ இசைக் கலைஞரும் ஆசிரியருமான 34 வயது பர்விந்தர்ஜீத்தின் இசை ஆற்றல், அக விருப்பின் விடாமுயற்சியால் பெறப்பட்டது.
சட்ட மறுப்பு இயக்கம் நடத்தப்போவதாக இம்ரான் கான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: சிறையிலிருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த வாரம் பேரணி நடத்த தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் பணம்
இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.
மாய உலகின் மோசடிக்காரர்கள்
2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் 1.45 மில்லியனுக்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் உள்ளிட்ட இணையக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
சாங்கியில் பயணிகள் போக்குவரத்து 2025ல் உச்சம் தொடும்: அமைச்சர்
சாங்கி விமானப் போக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது எனவும் சாங்கியின் பயணிகளும் விமானப் போக்குவரத்தும் கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தின் எண்ணிக்கையை 2025ல் விஞ்சும் என்றும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
$127.6 மில்லியன் நன்கொடை வழங்கிய அறநிறுவனம்
செல்வந்தர் லோ டக் வோங் பெயரில் தொடங்கப்பட்ட அறநிறுவனம், சிங்கப்பூரில் ஆக அதிக நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் தீவிர நோய் சிகிச்சைக்கு உதவி புதிய சமூக நிதித் திட்டம் தொடக்கம்
புற்றுநோய், பக்கவாதம், இதயநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு ஆளாகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கும் நோக்கில், ‘வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிட்டிகேர் நிதி’ திட்டம் (Migrant Worker Criticare fund) தொடங்கியுள்ளது.
2025ல் அதிக தனியார் வீடுகள்
புக்கிட் தீமா டர்ஃப் சிட்டியில் உள்ள இரு புதிய வீடமைப்புப் பேட்டைகள், முன்னாள் கெப்பல் கோல்ஃப் மைதானம் ஆகியவை உட்பட 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், தனியார் வீடமைப்புக்கான அதிகமான நிலங்கள் வெளியிடப்பட உள்ளன.
நான்கு நேரடிப் பேருந்துச் சேவைகள் அறிமுகம்
புத்தாண்டில் புதிய பாதை: வடகிழக்கு வட்டாரவாசிகளுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதிகள்
“மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு புட்டின் பாராட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகமே முன்னோடி: ஸ்டாலின்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோலாகலமாக நடைபெற்றது நாக சைதன்யாவின் திருமணம்
நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
வலைத்தளவாசிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2'
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
தொன்மை, கலாசாரம் ஒளிரும் ஆக்ரா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா நகரம், தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இடமாகக் கருதப்படுகிறது.
கலிஃபோர்னியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு; சுட்டவன் தன்னையும் சுட்டுக் கொண்டான்
கலிஃபோர்னியா கல்லூரியில் இரண்டு குழந்தைகளைச் சுட்டுக் காயப்படுத்திய துப்பாக்கிக்காரன் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.
பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது
பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (டிசம்பர் 3) அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி, அதன் சுற்று வட்டாரங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை $18.52 மில்லியன் மோசடி
இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), 1.17 பில்லியன் ரூபாய் (18.52 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள எல்லை தாண்டிய இணையக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட மோசடி தொடர்பில், தலைநகர் டெல்லி, அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 10 இடங்களில் புதன்கிழமையன்று (டிசம்பர் 5) சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (டிசம்பர் 5) அனுசரிக்கப்பட்டது.
ஃபெங்கல் புயல் பாதிப்பு இழப்பீட்டை உயர்த்தும்படி தலைவர்கள் வலியுறுத்து
தமிழகத்தில் ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட பெருமழையை அடுத்து, மாநிலத்தின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
படிப்படியாக முடிவுக்குவரும் காசோலைப் பயன்பாடு 2025 மத்தியில் இரு மின்னியல் கட்டண முறைகள் அறிமுகம்
சிங்கப்பூரில் காசோலைப் பயன்பாடு படிப்படியாக முடிவுக்குவரும் நிலையில், புதிதாக இரண்டு மின்னியல் கட்டண முறைகள் (EDP, EDP+) அறிமுகம் காணவிருக்கின்றன.
சிங்கப்பூரின் வேதியியல், எரிசக்தித் துறைகளுக்குப் பயனளிக்கும் படிம எரிபொருளைக் கைவிட உதவும் $31 மி. மதிப்பிலான திட்டம்
சிங்கப்பூரில் அமைந்திருக்கும் மேம்பட்ட ஆய்வு, கல்விக்கான கேம்பிரிட்ஜ் நிலையம் (Cares), இங்குள்ள வேதித் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் எரிசக்திக் கட்டமைப்புகளும் படிம எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது தொடர்பான இரண்டு ஆய்வுத் திட்டங்களை வழிநடத்துகிறது.
யுனெஸ்கோ கலாசார மரபுடைமைப் பட்டியலில் 'கெபாயா' உடை
தென்கிழக்காசியப் பாரம்பரிய உடையான ‘கிபாயா’ யுனெஸ்கோவின் கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (டிசம்பர் 4) பராகுவே நாட்டின் தலைநகர் அசுன்சியோனில் நடைபெற்ற அமர்வில் இது அறிவிக்கப்பட்டது.
சீனாவின் அரசாங்க வேலைகளில் சேர மக்கள் பெரும் எண்ணிக்கையில் போட்டி
சீனாவில் அரசாங்க வேலைகளுக்கான போட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்நாட்டில் மில்லியன்கணக்கான பட்டதாரிகள் நிச்சயமற்ற தன்மை நிறைந்த கடினமான வேலைச் சந்தையில் நிலையான வேலைவாய்ப்பை நாடுகின்றனர்.
சிங்கப்பூர் பொதுச் சேவை உலகின் ஆகச் சிறந்தது: ஆய்வு
சிங்கப்பூரின் பொதுச் சேவை உலகின் தலைசிறந்தது என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
தென்கொரிய அதிபரிடம் விசாரணை தொடங்கியது
ராணுவ ஆட்சியை திடுதிடுப்பென்று அறிவித்ததன் தொடர்பில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான விசாரணையை அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கி உள்ளனர்.
பிள்ளைக் கவனிப்பில் பெற்றோருக்கு வழிகாட்டி பராமரிப்பு எல்லைகளைப் பரிந்துரைக்கும் குறிப்பேடு
பிள்ளைகளின் அன்றாடப் பராமரிப்பில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தமான எல்லைகள் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்பேட்டை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.