CATEGORIES
Kategorier
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.
பண்ணைக் குட்டை அமைத்தல் பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்தல் குறித்து செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு கண்டுணர்வு பயணம் மேற்கொண்டனர்.
சோலையாறு அணை 2வது முறையாக நிரம்பியது
தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டில் சோலையாறு அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தல்
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கடிதம்
வீரிய ஆமணக்கு விதை உற்பத்தி, மரவள்ளி மாவுப்பூச்சி கட்டுப்பாடு களப்பணி ஆய்வு
சேலம் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட விவசாயிகள் பயனுறும் வகையில், வயல்வெளி செயல் விளக்கம் செய்து காண்பிக்க மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர உர மேலாண்மைத் திடலுக்கு உலக உணவுப் புரட்சிக்கான விஞ்ஞானி பாராட்டு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு 'இயற்கைவள மேலாண்மை சாத்தியங்களும் வாய்ப்புகளும்' என்ற சர்வதேச கருத்தரங்கு ஆகஸ்ட் 23 முதல் 27 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கருத்தருத்தரங்கினை இயற்கைவள மேலாண்மை இயக்குநர் அர.சாந்தி மற்றும் அவருடன் பணிபுரியும் விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டுள்ளனர்.
தினம் ஒரு மூலிகை செங்காம்பு வெற்றிலை
செங்காம்பு வெற்றிலை ஓர் பார்வை
தமிழ்நாட்டின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து தமிழ்நாட்டில் வேளாண் ஏற்றுமதியை அதிகரித்தல் தொடர்பான நிகழ்ச்சி 26.8.2021 அன்று நடைபெற்றது.
கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்பின் மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை மலையோர மாவட்டங்களில் மட்டும் அதிகமாக பெய்து வந்தது. ஜூலை மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த மழை பின்னர் விட்டுவிட்டு பெய்தபடி இருந்தது.
வெற்றிலை விலை உயர்வு
வெற்றிலை மகசூல் குறைவால், விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த 3 நாட்களுக்கு முன் ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.15 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேயிலையில் கொப்பள நோய் அதிகரிப்பு
வால்பாறையில், தேயிலை செடிகளை தாக்கும் கொப்பள நோயை கட்டுப்படுத்த செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.
தானியங்கள் சேமித்து பாதுகாக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021 2022) தானியங்கள் சேமித்து பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் அ.பழனியப்பா, முன்னிலையில் பணம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் விராலிமலை, திருமயம் மற்றும் பொன்னமராவதி வட்டாரத்தின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்ப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடகுடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் குறுங்காடு வளர்ப்புத் திட்டம் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யூரியா உரம் ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையத்தில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாசிப்பயறு விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம், பாப்பான் குளம் பாசிப்யறு விதைப் பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தராமான, நல்ல விதைகள் என்பது நல்ல முளைப்புத்திறன், ஈரப்பதம், இனத்தூய்மை, கலவன்கள் இல்லாமல் ஒரே நேரத்தில் சீரான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் உள்ளிட்ட பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழக மாவட்டங்களில் 29ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 29ம் தேதி வரையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் ரூ.4.33 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் செவ்வாய்க்கிழமை ரூ.4.33 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
அட்மா திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் இடுபொருட்கள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இராம. சிவக்குமார், வேளாண்மை இணை இயக்குநர், இரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) புதுக்கோட்டை, மாடி தோட்டம் அமைக்கும் கிட் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கன மழையால் மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை வேளாண் அமைச்சர் அறிவிப்பு
பயிர்களுக்கு இயற்கை இடர்பாடு காரணமாக இழப்பு ஏற்பட்டால் நஷ்டஈடு தொகை வழங்கப்படும் என, வேளாண் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கிராமப் புறங்களில் நிலைத்த வளர்ச்சியை விரைவில் எட்டமுடியும் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் தகவல்
கிராமப் புறங்களில் நல்லொதொரு சூழல்கள் நிலவுவதால் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பை பெருக்குவதோடு அங்கேயுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து அவற்றின் பலன்களை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தால் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதாரத்தையும் நீண்டக் காலத்திற்கான வளர்ச்சியையும் விரைவிலே எட்ட முடியும் என சென்னை நபார்டு வங்கியின் மாநிலப் பொது மேலாளர் வேங்கடகிருஷ்ணா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கிராமங்களில் நீடித்த வாழ்வாதாரம் பற்றிய நடந்த இரண்டு நாள் கருத்தரங்கின் நிறைவு விழா பேருரையில் தெரிவித்தார்.
58.25 கோடி கொவிட் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 58.52 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. திங்கள் கிழமை காலை 8 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,25,49,595 முகாம்களில் 64,69,222 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது
கடலூர் மாவட்டம், லால்பேட்டையில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.
விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் சரிவால் வெற்றிலைக்கு தட்டுப்பாடு
ஆண்டிப்பட்டியில் வெற்றிலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளது.
நேந்திரனுக்கு விலை இல்லை விவசாயிகள் கவலை
ஓணம் பண்டிகையின் போது, நேந்திரன் வழைக்கு நல்ல விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இயற்கை தாவரப்பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்த யோசனை
இராமநாதபுரம் விவசாயிகள் பொதுவாக பயிர் சாகுபடியில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.