CATEGORIES
Kategorier
சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை அன்று 103 அடியாக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொடைக்கானலில் ஆரஞ்சு விளைச்சல் அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடும் பனி நிலவுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மஞ்சள் விளைச்சல் அமோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்டாசி பட்டத்தில் பெய்த மழையால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது.
நெல் கொள்முதல் 25% ஆக உயர்வு
நடப்பு 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 24.98 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விவசாய சட்டங்கள் தொடர்பாக முடக்கம் நீடிப்பது வேதனை அளிக்கிறது
உச்ச நீதிமன்றம் கவலை
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருவாடனை, ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, நைனார்கோவில், முதுகுளத்தூர், திருப்புல்லானி, கமுதி, கடலாடி வட்டாரப் பகுதிகளில் நெற்பயிரானது அதிகமான பரப்பளவில் மானாவாரியாகப் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலையானது நெற்பயிரில் அதிக அளவில் நோய் தோன்றுவதற்கு மிகவும் சாதகமானதாக உள்ளது. தற்பொழுது, பாக்டீரியல் இலைக் கருகல் நோயின் தாக்குதல் திருவாடனை வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக தென்படுகிறது.
மழையால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தொடர் மழையால் 4,266 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 14,139 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 4,266 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளன.
கடல்சார் பொருளாதாரம், தற்சார்பு இந்தியாவுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கப் போகிறது
பிரதமர் மோடி பேச்சு
டெல்டா மாவட்டங்களில் அதிக மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
ஆண்டிபட்டியில் வாழை இலைகள் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்னை மரத்துக்கு காப்பீடு வேளாண் துறை ஆலோசனை
கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ள, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பப்பாளியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி கன்றுகள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்
கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக செழித்து வளர்ந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 500 லட்சம் டன்னைக் கடந்தது
நடப்பு 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 500 லட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொப்பரை கொள்முதல் விலை சரிவால் விவசாயிகள் கவலை
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு தினமும் டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காய்கறி விலை சரிவு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.
அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் குலைகள்
பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. பண்டிகையின் போது பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.
நெல்லை, தென்காசியில் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. வியாழக்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வியபாழக்கிழமை முழுவதும் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மாலையில் சில மணி நேரம் கனமழையும் பெய்தது.
அணைகள் நிரம்பியதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வராது
தமிழகத்தில் முக்கிய அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், நடப்பாண்டில், பாசனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
தில்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு
தில்லியில் கடுங்குளிர் வாட்டுகிறது.
நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் காலதாமதமாக திறக்கப்பட்டதால், குறைந்த விலைக்கு நெல்லை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர்.
தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
சென்னை புறநகர் பகுதிகளில் புதன்கிழமைம் இரவு மிதமான மழை பெய்தது.
கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூ வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 928க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் இந்திய உணவுக் கழகம் ஒப்பந்தம்
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு, சட்டீஸ்கர் மாநில அரசுடன் இந்திய உணவுக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த மாதம் புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மரவள்ளிக் கிழங்கு அறுவடை தீவிரம்
தம்மம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திசுவாழை வளர்ப்புத் திட்டத்தில் விவசாயிக்கு 2,500 வாழைக் கன்றுகள்
கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 2,500 வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
தொடர் மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்
சீர்காழி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.