Prøve GULL - Gratis
திசைகாட்டி அரசாங்கம் “திக்குத் தெரியாது தடுமாறுகிறது”
Tamil Mirror
|March 24, 2025
நாட்டை ஆளும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரலாறு முழுவதும் பாட்டாளி வர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்தனர். நாட்டை அழித்தது முதலாளித்துவ வர்க்கமே என்று இவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர்.
-

ஆனால், முதலாளித்துவ வர்க்கம் என்று சொல்லப்பட்ட அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதையே செய்துள்ளன. அவ்வாறு செய்த நல்லனவற்றைக் கூட இவர்கள் குறை கூறித் திரிகின்றனர். தெளிவான அதிகாரம் கிடைத்தும் இன்று இவர்களால் எதையுமே செய்ய முடியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முதலாளித்துவ வர்க்க அரசு நியாயமான விலையில் அரிசியைப் பெற்றுக் கொடுக்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திசைகாட்டி அரசு 100 ரூபாய்க்கு மேலான விலையில் இன்று அரிசியை விற்பனை செய்து வருகிறது.
நாட்டை அழித்ததாக சொல்லப்படும் அரசாங்கங்கள் நியாயமான விலையில் தேங்காயை விற்கும் போது, உழைக்கும் வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லப்படும் திசைகாட்டி இன்று 100 ரூபாய்க்கும் அதிகமான விலையில் தேங்காயை விற்பனை செய்து வருகிறது. முதலாளித்துவ வர்க்க அரசாங்கங்கள் அவ்வப்போது உரிய நேரத்துக்கு உர மானியங்களை வழங்கி வந்தன. ஆனால், அறுவடை முடிந்ததுமே இந்த திசைகாட்டி அரசாங்கம் உர மானியத்தை வழங்கி வருகிறது. இந்த அரசாங்கத்தால் உரிய நேரத்துக்கு உரத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Denne historien er fra March 24, 2025-utgaven av Tamil Mirror.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror
10 கோடி பேரை தாக்கிய வெப்ப அலை
காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
1 min
July 28, 2025
Tamil Mirror
விபத்தில் இருவர் காயம்
வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று கொட்டகலை - ஹட்டன் பிரதான வீதியின் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min
July 28, 2025
Tamil Mirror
பிள்ளையானின் அலுவலகத்தில் சோதனை
யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004ஆம் ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி.) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர்.
1 min
July 28, 2025

Tamil Mirror
ஆற்றில் அடித்துச் சென்ற குழந்தை சடலமாக மீட்பு
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றிலிருந்து 4 வயதுடைய பெண் குழந்தை, சனிக்கிழமை (27) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
1 min
July 28, 2025
Tamil Mirror
மதுபோதையில் அடாவடி: NPP யின் அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது
மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சொரூபத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
July 28, 2025

Tamil Mirror
மக்கள் எதிர்ப்பு மத்தியில் மண் விநியோகம்
ஆம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் சனிக்கிழமை (26) அன்று இடம்பெற்றுள்ளது.
1 min
July 28, 2025
Tamil Mirror
உடுப்புத் துவைத்தவர் திடீர் மரணம்
உடுப்புத் துவைத்துக் கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
July 28, 2025
Tamil Mirror
மறையாத ஜூலைக் கலவர வடு
இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன.
3 mins
July 28, 2025

Tamil Mirror
சினை மானைக் கொன்ற நால்வருக்கு சிக்கல்
கலேவெல, மகுளுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களை இம்மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
July 28, 2025
Tamil Mirror
சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,000 பேரை இணைக்கத் திட்டம்
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 10 ஆயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min
July 28, 2025