CATEGORIES
Categories
பெண்ணின் பெருமை
'பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்று வள்ளுவரும், 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்று கவிமணியும் பெண்மையைப் போற்றியிருக்கிறார்கள்.
தென் இந்தியப் பெண் சாதனையாளர் விருது!
கூத்தபிரான் என்ற பெயர் யாருக்கும் மறந்திருக்காது. ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்த் தூண்களில் ஒருவர். அவருடைய மருமகள் மீரா ரத்னம் அவர்களுக்கு இந்த ஆண்டு விருது ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
தி.ஜானகிராமன்
தரையில் இறங்கும் விமானங்கள் படித்துவிட்டு இன்று வரை என் எழுத்தை சிலாகித்துப் பேசுபவர்களும், பாராட்டுபவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் நான் மிகவும் மதிக்கும் போற்றிக் கொண்டாடும் எழுத்தாளர்களில் இருவர் என்னைப் பாராட்டி எழுதிய கடிதங்களை மறக்கவே முடியாது.
கலாம் இட்ட கட்டளை!
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இசையுலகில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் நாதஸ்வர தம்பதியர் ஷேக் மெஹபூப் சுபானியும், அவரது மனைவி காலிஷாபி மெஹபூப்பும்.
உரையாடல் கடிதங்கள்
கடிதங்கள் உரையாடுமா? அது சாத்தியம் என்பதைக் காட்டுவது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு கடிதக் கோப்பு. இரு மனிதர்களிடையே எழுதப்பட்ட கடிதங்கள் நாட்டின், ஒரு காலகட்டத்தின் கலாசார, சமுதாயக் கதையையே சொல்லக் கூடியவை.
அம்மாவைப் பற்றி என்ன எழுதுவது?
பக்கத்து வீட்டு சாரதாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் தங்கம்மா.... அவள் பேச்சில்தான் எத்தனை தன்னம்பிக்கை!"
இசை ஞானியார்
தமிழர் வாழ்வில் சமயம் பண்டுதொட்டே பங்கு பெற்றுள்ளது. சங்க காலத்திற்குப் பிறகு வளர்ச்சி குன்றிய சைவ சமயம் பல்லவப் பேரரசர் காலத்தில் மறுமலர்ச்சி பெற்றது.
அனுசரித்துப்போ!
வரதராஜன் கொள்கைப் பிடிப்பு உடையவன். குறிப்பாக அவன் திருமணத்திற்கு முன் அவன் மேற்கொண்டிருந்த குறிக்கோள்கள் அவனுடைய விருப்பம் போலவே நிறைவேறின.
வங்கியில் போடும் பணத்திற்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டு!
இடம், நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி மற்றும் அஞ்சலக டிபாசிட்டுகள், அரசாங்க பாண்டுகள் என பணத்தை பத்தை முதலீடு செய்ய பல பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் எது சரி என்பது அவரவர் மொத்த பண இருப்பு, வயது, தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் மனோபாவம் ஆகியவற்றைப் பொறுத்தது.
ஸ்ரீஅன்னை
ஐந்து வயதுச் சிறுமியாக இருந்தபோதே இறையுணர்வு கைவரப் பெற்றவர் அன்னை.
யோகி ராம்சுரத்குமார் என்னும் தெய்வீகம்
"பல மகான்கள் தோன்றலாம்; ஆனால் இந்த மாதிரிப் பிச்சைக்காரர் ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்" என்பது பகவான் தன்னைப் பற்றி அறிவித்துக் கொண்ட அரிய செய்தி.
நான் பாடிக்கொண்டே இருப்பேன்...வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
எம் ஜி ஆர், சிவாஜி, கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கில் என்டிஆர் இவர்களுடனான இசை அனுபவத்தை மேலும் சொல்லத் தொடங்கினார் வாணி ஜெயராம்.....
திருச்சி
திருச்சி டவுன் ரயில்வே ஸ்டேஷன் சிறியதுதான். ஒரே ஒரு கவுன்ட்டர் டிக்கெட் கொடுப்பதற்காக. ஸ்டேஷன் மாஸ்டர் அறை. முதல் நடைமேடையில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. தரையில் சிமெண்ட் தளம். சில சிமெண்ட் பெஞ்சுகள் மர நிழலில். மூன்றே மூன்று நடை மேடை தான். நடை மேடை என்றால் சரல் மண் தான். நான் சொல்லும் வர்ணனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலை.
ஜவந்திரை
முன்பெல்லாம், அதாவது அறுபத்தைந்து, எழுபது வருஷங்களுக்கு முன்பு, எங்கள் கிராமம் காட்டுப் புத்தூரில், தீபாவளி சமயம் கோலாட்டக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து 'ஜவந்திரை' என்றொரு அபூர்வத் திருவிழா நடக்கும். ஊர்ப் பெரியவர்களின் அனுமதியுடனும், உதவியுடனும் சிறு பெண்கள்தான் இவ்விழாவை நடத்துவார்கள்.
மதுவுக்கு எதிராக ஒரு போராட்டம்!
குடி நோயாளியான தந்தை, வறுமையில் போராடும் தாய், அல்லல்படும் குழந்தைகள், அவமானப்படும் டீன் ஏஜ் மகன்களும் மகள்களும், வயதான பெற்றோர்கள். வீடுகளுக்குள் வறுமை சண்டை இன்னும் இன்னும் சித்ரவதைகள்...
தி. ஜானகிராமன்
என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துலகின் பிதாமகர். பீஷ்மர். துரோணாச்சாரியார். ஏகலைவனாக இருந்தே இவரிடமிருந்து எழுதக் கற்றுக்கொண்டோம். இவரை வாசித்து வாசித்தே எழுதப் பழகினோம்.
கிரிக்கெட் சாதனை: உள்ளத்தனையது உயர்வு!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணம். பல நிர்வாக இயக்குனர்கள் விடாமுயற்சியையும் சிக்கலான தருணங்களில் முடிவு எடுக்கும் விதத்தையும் இதிலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று வியந்து பாராட்டினர். விளையாட்டு வீரர்கள் தோல்வியைக் கண்டு துவளுவதில்லை. இலக்கை மறப்பதில்லை. முயற்சியை விடுவதில்லை. இது எந்த விளையாட்டுக்கும் பொருந்தும்.
சேவை விருட்சம் டாக்டர் சாந்தா!
“உடல் நலிந்து, உள்ளம் சோர்ந்து, அச்ச உணர்வுடன் நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனையின் வாயிலை அடையும்போது, அவர்களின் ஒரு பாகமாக நாம் ஆகிவிடுவதுதான் அவர்களுக்கு நாம் காட்டக்கூடிய சரியான ஆதரவாக அமையும்”.-டாக்டர் சாந்தா
காஞ்சிப் பெரியவர் இட்ட கட்டளை
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது ஸ்ரீ மாதா டிரஸ்ட். இந்தப் பெயரைச் சூட்டி, டிரஸ்ட்டின் மகத்தான சமூகப் பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்.
கல்கி விருது விழா!
கல்கி அவர்களுக்குப் பிடித்தமான நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு. "காய்ச்சல் வந்தபோது, மருத்துவரிடம் போனேன். மருத்துவர் பிழைக்க வேண்டுமல்லவா? அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போனேன். மருந்துக் கடைக்காரர் பிழைக்க வேண்டுமல்லவா? மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். அதை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏனென்றால், நான் பிழைக்க வேண்டுமல்லவா?"
கடைசிப் பொடி மட்டை
நான் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்த போது, என் குடும்பம், நகர உயர்தரப் பள்ளியின் வட புறத்திலிருந்த கர்ணக் கொல்லை அக்கிரஹாரத்துக்கு இடம் மாறிவிட்டது. காரணம், என் அத்தை.
உத்தமர்களை வணங்கும் உத்தமர்
ஐந்து ஆறுகள் ஓடும் அழகான இடம். ஐம்புலன்களையும் அடக்கி மனதை அமைதியாக்கும் ராமநாமத்தை எப்போதும் தியானிக்கும் ஒரு ஆசாரசீலர்.
ஆவணமாகிய அறுபது!
மார்கழித் திங்கள் மலர்கின்ற ஒவ்வொரு ஆண்டும் மதி நிறைந்த இலக்கிய உலகில் ஒரு கேள்வி எழுந்து நிற்கும். இந்த ஆண்டு சாகித்திய அகாதமி பரிசு யாருக்கு என்பதுதான் அந்தக் கேள்வி.
அம்மா!
லசரா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திருமதி லாசரா, அதாவது ஹைமாவதி லாசரா அப்படி இல்லை.
அமெரிக்காவில் மலர்ந்த புதிய சகாப்தம்!
அமெரிக்காவில் புதிய சகாப்தம் மலர்ந்திருக்கிறது. துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண்மணியான திருமதி கமலா ஹாரிஸ் பதவியேற்றிருக்கிறார்.
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
தொழில் துறையில் இந்தியா சிமெண்டின் சாதனையை விளக்கும் “காபி டேபிள் புக்”
சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது 72 ஆண்டு நீண்ட வளர்ச்சிப்பாதை மற்றும் அதன் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசனின் 50வது ஆண்டுகளுக்கான தொடர்பினையும், என்.சீனிவாசனின் திறமை மிக்க நிர்வாகத்தால், தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்கூறும் "காபி பேபிள் புக்"கை வெளியிட்டுள்ளது.
ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 1921 பிப்ரவரி 12 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 1927இல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இதனை வடிவமைத்தவர்கள் எட்வின் லூடென் மற்றும் ஹெர்பர்ட் பேகர். ரூ 83 லட்சம் செலவில் உருவான இக்கட்டிடத்தை அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு 1927 ஜனவரி 18ஆம் தேதி திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும்....
மகாத்மா காந்தி தாய்மொழி பற்றியும் கல்வியில் அதன் அத்தியாவசியம் பற்றியும் மிக ஆணித்தரமான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
தீபம் நா. பார்த்தசாரதி
முற்றிலும் இலக்கியத்தரமான எழுத்துக்களை மட்டுமே படிப்போம், ஜனரஞ்சக எழுத்துகளை ஏறெடுத்தும் பாரோம் என்கின்ற வாசகர்கள் சிலர். புரியாத இலக்கிய எழுத்துக்களின் பக்கம் திரும்பக் கூட மாட்டோம். எங்களுக்குப் புரிகின்ற சாதாரணப் பத்திரிகைகளே போதும் என்கின்ற வாசகர்கள் பலர்.