CATEGORIES
Categories
ஸ்ரீ அரவிந்தர் ஆற்றிய பணி
ஸ்ரீ அரவிந்தர் குழந்தைப் பருவத்தைத் தாண்டாத ஏழு வயதிலேயே தந்தை அவரைக் கல்வி கற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் 14 வருடங்கள் அங்கே தங்கி இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தார்.
தரம் நிறைந்த தமிழ் பால்!
தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாக 45 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கும் எங்கள் G.K.டெய்ரி (தமிழ்பால்) நிறுவனம் 1973 ஆம் ஆண்டு G.K.பால் பண்ணை என்ற பெயரில் துவங்கப்பட்டது.
கரோனா வருங்கால்...
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரே சொல்லி விட்டாரே, பிறகு எதற்கு கரோனாவையே நினைத்து கவசம் அணிந்த முகத்தை கவலை தோய்ந்த முகமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதனால் உண்டாகியுள்ள அனுகூலங்களை ஆராய்ந்து ஆனந்தப் படலாமே!
விளம்பர உளவியல்
முன்பு கிரிக்கெட் உலகக் கோப்பைப் பந்தயத்தை நடத்திய பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பு எது? இக்கேள்விக்குப் பதில் பலருக்கும் தெரியவில்லை என்றால் ஆச்சரியம் எதுவும் இல்லை.
கணித மேதை ராமானுஜன் வாழ்வில் சென்னைத் துறைமுகத்தின் பங்கு
ராமானுஜனின் வாழ்வில் மெட்ராஸ் துறைமுகமெனும் நிறுவனத்தின் பங்கு மிகவும் சிறப்பானது. வறுமையில் பிறந்து, வறுமையிலேயே வாழந்து கொண்டிருந்த ஒரு மேதையை கணித இயலில் இனங்கண்டு உலகரங்கில் ஏற்றிய பெருமை இத்துறைமுகத்தையே சாரும்.
ஓவிய மேதை கோபுலு
ஓவிய மேதை கோபுலு அவர்கள் கும்பகோணம் ஓவியப் பள்ளியில் முறையாகப் பயின்றவர். இவரது ஓவியங்களைப்பார்த்து மகிழ்ந்தார் மாலி! தான் பணிபுரிந்து கொண்டிருந்த ஆனந்த விகடன் பத்திரிகையிலேயே ஓவியராக இணையும்படிச் செய்தார். மாலி அவர்களையே கோபுலு தனது குருவாகவும் வரித்துக் கொண்டார்.
இசையால் இணைவோம் - ஆர்கே கன்வன்ஷன் பத்தாம் ஆண்டு விழா
"துளுவைத் தாய் மொழியாகக் கொண்ட நூல் கிருஷ்ண தேவராயர் என்னும் மன்னர் தெலுங்கில் ஆமுக்த மால்ய தா என்று ஒரு இயற்றினார். அது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஆண்டாள் திருவரங்கனை மணம் புரிந்த வரலாறு.
ஆன்லைன் மாணவர்களுக்கு 'ஏகலைவன்'!
"அந்த நல்ல பள்ளியில் என் மகனுக்கு எல்.கே.ஜியில் சேர்க்க இடம் இல்லைன்னுட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியலை" - "பேசாம கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல சேர்த்து டேன்" தபால் வழியில் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இப்படி ஒரு ஜோக் சொல்வார்கள்.
சரஸ்வதி சபதம்
பள்ளிப் படிப்பினை முடித்த அந்த மாணவியை, அடுத்து இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ப்பதற்காக சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய அப்பா. ஆனால், பல்கலைக் கழகத்தில் அவருக்கு அட்மிஷன் கொடுக்கவில்லை.
ஆசிரியரும் மாணவனும்
கைலாசபுரம் ஒருகாலத்தில் கிராமமாக இருந்தது. நாளடைவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நகரமாக மாறிவிட்டது. அதில் ரவி மளிகை கடை என்று ஒரு மளிகைக் கடை தோராயமாக அறுபது வருடங்களுக்கு மேலாக ஜனங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கிக் கொண்டிருந்தது. தற்சமயம் அதுவே ரவி பல்பொருள் அங்காடி யாகி, ஜனங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படிச் செய்தது.
இசை விற்பன்னர்கள்
அப்போதும் சரி. இப்போதும் சரி. பல சங்கீத வித்வான்கள் பாடுவதில் மட்டும் அல்ல. பேச்சிலும் விற்பன் (pun)னர்கள். பல பொருள் படும்படி பேசி விடுவார்கள்.
'கொரானாவுக்கு' ஆயுர்வேத மருத்துவத்தின் வழியே தீர்வு!
உலகையே அச்சுறுத்தி, ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. நமது பாரம்பரிய சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குறிப்பாக இந்த நோய்க்கென்று மருந்துகள் குறிப்பிடப்படவில்லை யென்றாலும், இதற்கான மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் நல்ல முறையில் தீர்வு பெற்று ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்புவதை நடைமுறையில் காண்கிறோம். டாக்டர் எஸ்.பரத் நரேந்திரா ஆயுர்வேத மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று சென்னையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கிறார். கொரானா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
நினைவில் நிற்கும் கதாசிரியை லஷ்மி
வெகு காலமாகத் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களிடம் சென்று 'உங்களுக்கு டாக்டர் திரிபுரசுந்தரியைத் தெரியுமா?' என்று கேட்டுப் பாருங்கள்; அவர்கள் ஒரு கணம் விழித்தாலும் கொஞ்சம் ஆழ்ந்து படிக்கும் வாசகர்களானால் ' கதாசிரியை லக்ஷ்மி தானே?' என்று உடனே பதில் தந்து விடுவார்கள். வாசகர்களிடேயே, குறிப்பாகப் பெண் வாசகிகள் மத்தியில், இன்றும் கூட மிகவும் பிரபலமாக இருக்கும் கதாசிரியை 'லக்ஷ்மி'.
நல்லாசிரியர்
நம் வீட்டு ஹால் அழகாக இருக்கலாம். கடையில் பார்க்கும் மேசை அழகாக இருக்கலாம். அந்த மேசை நம் வீட்டு ஹாலில் போட்ட பிறகு அழகாக இருக்குமா என்பது வேறு விஷயம்' அமரர் தேவன் எழுதிய ராஜத்தின் மனோரதம் புத்தகத்தில் மிகவும் ரசித்த வரிகள்.
நகைச்சுவையே உன் பெயர் ஐ.ரா.சுந்தரேசனா?
திரு ஜ.ரா. சுந்தரேசன் மாதா, பிதா குரு, தெய்வம் என்ற வரிசைப்படியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
நீர் மூழ்கிக் கப்பல் தமிழர்!
சின்னமருது தீனதயாள பாண்டியன்
நோயும் நிவாரணமும்
நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் மருந்துகளை விட ஆன்ம பலமும், இறைவனிடம் சரணாகதி அடைவதும் மிகப் பெரிய பலனைத் தந்து நோயை முழுவதுமாக விரட்டி அடிக்கும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள். நம் ஸ்தூல உடலுக்குக் கவசமாகவும், காவலாகவும் ஒரு சூட்சும உடல் இருக்கிறது என்றும், இந்தக் கவசம் ஆன்ம பலத்தோடு திகழ்ந்தால், எந்த நோயும் எளிதில் இதைத் தாண்டி வர முடியாது என்றும் அவர்கள் விளக்கி இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் மராட்டிய ஆவணம்
மோடி என்னும் சொல் காதில் விழுந்ததும் மனத்தில் எழுவது பாரதப் பிரதமரின் உருவம் தான். ஆனால் மோடி என்னும் பெயரில் ஓர் எழுத்துரு உள்ளது. அந்த மோடி என்னும் ரகசிய எழுத்துருவில் அமைந்த ஆவணங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
தருவதைத்தான் பெறுகிறோம்
டாக்டர் ஆக வேண்டுமென்றால், டாக்டர் படிப்பு படிக்க வேண்டும். வக்கீல் ஆக வேண்டுமென்றால், சட்டம் படிக்க வேண்டும். அவரவர் செய்யும் தொழிலைச் சரிவரச் செய்ய, ஒவ்வொருவரும் அவர்கள் ஈடுபடும் துறையில் அறிவு பெறவேண்டும். அப்படியென்றால் குழந்தையைப் பெற்று வளர்த்தெடுக்கும் பெற்றோர், பெற்றோரியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
சாயிதியானம்
ஷிர்டி சாயி பாபாவின் மகிமை என்றால் அது அவரது அற்புதங்கள். அதைவிடச் சிறப்பு அவரது தோற்றம்.
ஸ்வரங்கள்
உலுக்கப்பட்டதுபோல அவள் விழித்துக்கொண்டாள். சில விநாடிகள் எங்கே இருக்கிறோம் என்று விளங்காமல் பார்த்தாள். அவளுடைய வீட்டில் தான், வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலியில். பட்டப்பகலில் தூங்கியிருக்கிறாள். இரவில் வராத தூக்கம்.
மறைந்துகொண்டு வரும் ஒரு கலை
மனிதர்களுக்கு ஒரு மொழியுடன் தொடர்பு மூன்று நிலைகளில் ஏற்படுகிறது பேசுதல், படித்தல், எழுதுதல். பலருக்கு பல மொழிகள் முதல் நிலையோடு நின்று விடும். மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்து, அந்த மொழியில் பேசும் திறமை இல்லாமல் இருப்பவர்களும் உண்டு.
நான் பார்த்த சு.ரா.!
சிறு வயதிலிருந்தே, அம்பி, அம்பி' என்று சுந்தர ராமசாமி மாமாவைப் பற்றி மிகுந்த பாசத்துடனும், பெருமையுடனும் கூறியே வளர்த்தவர் என் அம்மா சு.ராவை விட ஒரு வயதே மூத்தவரான சகோதரி மீனா.
காலத்தை வெல்லும் கணினித் தமிழ்
பேராசிரியர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
கே.பி.சுந்தராம்பாள்
ஓரு காலத்தில் சங்கீத வித்வான்கள் கர்நாடக இசையைப் பாமரர்கள் ரசிக்கமாட்டார்கள் என்று கருதி வந்தனர். அத்தகைய தவறான கருத்தைத் தகர்த்தெறிந்தவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி. சுந்தராம்பாளும்.
கொரானா காலத்தில் மனோரீதியான பிரச்சினைகள்...
மனோதத்துவ நிபுணர் நப்பின்னைசேரன் நேர்காணல்
கால்பந்துக் கடவுள்!
உலகக் கால்பந்து கோப்பை இறுதி ஆட்டத்தை 1986ம் ஆண்டு டிவியில் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. தூர்தர்ஷன் முதன் முதலில் நேரடியாக ஒளிபரப்பிய கால்பந்து ஆட்டம் என்று நினைக்கிறேன். நமக்கு சம்பந்தமில்லாத விளையாட்டு, பரிச்சயமில்லாத விதிமுறைகள், தொடர்பில்லாத தேசங்கள், புரியாத பெயர்கள் என்று நாமெல்லாம் ஏதோ ஒரு உலகத்தில் இருந்தாலும் மரடோனா என்ற அந்த ஒற்றை மனிதனுக்காக இந்தியாவே பார்த்த கால்பந்து ஆட்டம் அது.
கல்வித்துறையில் ஒரு சாதனை!
சமஸ்க்ருத மொழி பற்றிய சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டிருந்தாலும், இன்று, இந்த மொழி பயின்றவர்கள் உலகளவில் பாராட்டப்படுவதும், உயர் பதவிகளைப் பெறுவதும் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் உயர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
மகரிஷி ரமணரை தரிசித்தேன்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி திருவண்ணாமலையில் ஆசிரம ஹாலில் தலையணையில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். காலை 11 மணி. ஒரு அணில் வந்து அவருடைய இடது முழங்கையில் உட்காருகிறது. பக்கத்திலிருக்கும் தொன்னையில் பாதாம், பிஸ்தா, கல்கண்டு, உலர்ந்த திராட்சை முதலியவை பக்தர்கள் கொடுத்தது இருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தன் இடது உள்ளங்கையில் போடுகிறார். அதை அணில் கொத்தி தின்று விட்டுப் போகிறது. இது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி.
சாகா வரம் பெற்ற ச.து.சு.யோகியார்
மகாகவி, பாலபாரதி, சங்ககிரி துரைசாமி சுப்ரமணிய யோகியார் (ச.து.சு. யோகியார்) இந்த நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், பன்மொழி அறிஞர். இவர் எழுதி வெளி வந்த "தமிழ்க் குமரி", இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. யோகாப்பியாசம் செய்ததால் அவருக்கு யோகியார் என்ற பெயரும் ஏற்பட்டது.