CATEGORIES
Categories
ஜன.10-க்குள் 1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை அமைச்சர் காந்தி
வேலூர், டிச.14: பொங்கல் பண்டிகைக்காக 1.77 கோடி குடும்பங்களுக்கு காலதாமதமின்றி ஜன. 10-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டம் மீது காங்கிரஸால்தான் தாக்குதல் - மக்களவையில் பிரதமர் மோடி
‘‘அரசியலமைப்பை உருவாக்கியவர்களும், உச்ச நீதிமன்றமும் பலமுறை வலியுறுத்தியபடி, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாடுபடுகிறோம்’’ என மக்களவையில் அரசியலமைப்பு சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 329 ஏரிகள் நிரம்பின
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 1821.40 மி.மீட்டர் மழை பெய்த நிலையில், பொதுப்பணித் துறை ஏரிகள் - 119, ஊரக வளர்ச்சி முகமை பராமரிப்பில் உள்ள 210 ஏரிகள் என மொத்தம் 329 ஏரிகள் நிரம்பின.
மழை வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்
நெல்லை தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு திருச்சியில் குடியிருப்புகளை சூழ்ந்தது மழைநீர்
நவம்பரில் குறைந்த சில்லறை பணவீக்கம்
முந்தைய அக்டோபர் மாதத்தில் 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயர்ந்த நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த நவம்பரில் 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சரிந்து மீண்டது பங்குச்சந்தை சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.
விலை உயரும் டாடா வர்த்தக வாகனங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன விலை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
ரஷியாவை தாக்க அமெரிக்க ஆயுதங்கள்: டிரம்ப் எதிர்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகர்க்க அல்-அஸாதின் அமைச்சர் உதவி?
சிரியாவிலுள்ள ராணுவ நிலைகளைத் தாக்கி, அங்குள்ள தளவாடங்களை இஸ்ரேல் அழிப்பதற்கு, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் அதிபர் அல்-அஸாதின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உதவியிருக்கலாம் என்று மத்திய கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க செய்தி ஊடகமான 'தி மீடியா லைன்' தெரிவித்துள்ளது.
எஸ்பிஆர் சிட்டியில் காட்சியகம்: ஜோயாலுக்காஸ் ஒப்பந்தம்
சென்னையின் மிகப் பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட டவுன்ஷிப்பான எஸ்பிஆர் சிட்டியில், முன்னணி நகை விற்பனை நிறுவனமான ஜோயாலுக்காஸ் பிரம்மாண்டமான காட்சிக்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திரையரங்கு நெரிசலில் பெண் உயிரிழப்பு; கைதான நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்
தெலங்கானாவில் புஷ்பா-2 சிறப்புக்காட்சியைப் பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அத்திரைப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுனை மாநில காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இன்று தொடங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட்
முன்னிலைக்கான முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா
கோப்பையை கைப்பற்றிய கதாநாயகன்
தவறுகளே விளையாட்டின் விறுவிறுப்பு
விவசாயியை கைவிலங்குடன் அழைத்து வந்த விவகாரம்: சிறை வார்டன் இடைநீக்கம்
தெலங்கானாவில் விவசாயியை கைவிலங்கு போட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் சிறை வார்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆர்.ஜி.கர்.மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்
ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோருக்கு சியால்டா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
கனடாவில் 3 இந்திய மாணவர்கள் கொலை: விரிவான விசாரணைக்கு இந்தியா வலியுறுத்தல்
கனடாவில் கடந்த வாரத்தில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனைவி குடும்பத்தினர் துன்புறுத்தலால் பொறியாளர் தற்கொலை: வரதட்சிணை சட்டங்களை சீர்திருத்த உச்சநீதிமன்றத்தில் மனு
பெங்களூரில் மனைவி குடும்பத்தினர் துன்புறுத்தலால் பொறியாளர் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சீர்திருத்தங்களை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
2025 மகா கும்பமேளா: நாட்டின் கலாசார அடையாளம் புதிய உச்சம் பெறும்
பிரதமர் மோடி
மனித உயிர் விலைமதிப்பற்றது
விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை
சுகாதார மையங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சை: அரசின் பதிலைக் கோரும் உச்சநீதிமன்றம்
சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விஷ முறிவு மற்றும் பாம்புக்கடிக்கான சிகிச்சையை உறுதி செய்வது தொடர்பான மனு குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விஷயத்தில் சுதந்திரத்துக்கு பிந்தைய 60 ஆண்டுகளில் செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் செய்து சாதனை படைத்துள்ளோம் என்று மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
சாகர்மாலா திட்ட நிதியுதவி மூலம் தமிழகத்தில் 8 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன
சாகர்மாலா திட்டத்தின் நிதியுதவி மூலம் தமிழகத்தில் 8 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் மத்திய கப்பல், துறைமுகங்கள், நீர்வழிப்போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்தார்.
மஹுவா மொய்த்ராவுக்கு ரிஜிஜு எச்சரிக்கை
நீதிபதி லோயா அவரது காலத்துக்கு முன்பாகவே மறைந்துவிட்டார் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்தால் மக்களவையில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
குழந்தை உணவில் கூடுதல் சர்க்கரையைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
குழந்தைகளின் ஊட்டச்சத்து உணவில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு: கொள்கை வகுக்கக் கோரி வழக்கு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கக் கொள் கையை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தல்: திரிணமூல் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ரிதாபிரதா பானர்ஜி போட்டியின்றி தேர்வானார்.
சரத் பவார் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவார் மற்றும் பிரபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் டிச.16-இல் சந்திப்பு
துணை மருத்துவம் பயின்றோர் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர்
துணை மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்தவர்களும் கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
கொடைக்கானலில் மண் சரிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பழனி, சிறுமலை, பன்றிமலை, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மரம், பாறைகள் உருண்டு விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது.