CATEGORIES
Categorías
வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னை, நவ.15: சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை கட்டமைப்பு தொடக்கம்
சென்னை மியாட் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை கட்டமைப்பை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-இல் இலவச வழிகாட்டும் முகாம்
சென்னை, நவ.15: சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நவ.21-ஆம் தேதி தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் நடைபெறவுள்ளது.
மருந்தியல் துறையில் புத்தாக்க ஆராய்ச்சி அவசியம்
மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர்
ஆந்திர தொழிலாளியின் முதுகில் குத்தப்பட்ட கத்தி! நுட்பமாக அகற்றி உயிர் காத்த அரசு மருத்துவர்கள்
சென்னை, நவ.15: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தியை மிக நுட்பமாக அகற்றி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் காத்துள்ளனர்.
முக்கிய சாலைகள் விரிவாக்கம்: துணை முதல்வர் ஆலோசனை
சென்னை, நவ. 15: சென்னை நகரில் முக்கிய சாலைப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி
நவம்பர் 30-இல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி: சென்னை, பாலக்காடு ஐஐடி-க்கள் ஒப்பந்தம்
சென்னை, நவ.15: ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் தொடர்பாக சென்னை மற்றும் பாலக்காடு ஐஐடிக்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் விமானத்தில் இயந்திரக் கோளாறு: 250 பயணிகள் ஹோட்டலில் தங்கவைப்பு
சென்னையிலிருந்து சிங்கப்பூா் புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப துறைகளை மேம்படுத்த நடவடிக்கை
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அனைத்து துறைகளையும் மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் கூறினாா்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு
சென்னை, நவ.15: தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதைப் பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
புது தில்லி, நவ.15: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
திராவிட மாடல் ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
சென்னை, நவ. 15: மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இலங்கை அதிபர் கட்சி கூட்டணி அமோக வெற்றி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் (மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை) அமோக வெற்றி பெற்றது.
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.
பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பு சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பின் சோதனை வெற்றிகரமாக வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மேகாலயத்தின் ஹெச்என்எல்சி கிளர்ச்சி அமைப்புக்கு மத்திய அரசு தடை
மேகாலயா மாநிலத்தில் செயல்படும் ஹைனிவ் ரெப் தேசிய விடுதலை கவுன்சில் (ஹெச்என்எல்சி) கிளர்ச்சி அமைப்புக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
வாட்ஸ்ஆப்-க்கு தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மறுப்பதால், இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
வயநாடு நிலச்சரிவு தேசியப் பேரிடர் இல்லை
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என்று மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணி கைது
நாகபுரியில் இருந்து வியாழக்கிழமை கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக அது ராய்பூரில் தரையிறக்கப்பட்டது.