மொழி ஒரு கருவி. மனிதன் மொழி கொண்டுதான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி காண்போம்.
தாய்மொழிக் கல்வியின் தேவை:
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்ப்படுத்துகின்றது.
தாய்மொழிச் சிந்தனை:
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துகளைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.
அறிஞர்கள் பார்வை:
உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார்.
சாகித் உசைன் (1938 ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது. டி.எஸ். கோத்தாரி குழுவும் (1964) தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.
கற்கும் திறன்:
This story is from the Thanga Mangai July 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai July 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.