CATEGORIES
Kategoriler
கலைகளும், கலைஞர்களும்
முற்காலத்தில் ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் இசையும் நடனமும் முக்கியப் பங்கு வகித்தன. ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய ஆலயங்களில் கூட நாட்டியச் சிற்பங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த நடனத்துக்கு சிவபெருமான் நடராஜராக தில்லையில் ஆடிய ஆனந்தத் தாண்டவமே மூல முதல் நடனமாக இருந்திருக்கிறது.
கனவு மெய்ப்படுமா?
கனவு காணுங்கள் என்றார் அப்துல்கலாம். கனவு காண உறங்க வேண்டும். தூங்கிக் கொண்டே இருந்தால் முன்னேறுவது எப்படி?' என்று பகடி பேசுகவர்களும் உண்டு. கனவுகள் உண்மையை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன? அறிவியல் இது குறித்து என்ன கூறுகிறது?
இரண்டு நியூயார்க் அனுபவங்கள்
வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் எல்லோரும் முதலில் ஆசைப்படுவது அமெரிக்காதான்...! அந்த அமெரிக்காவிலும் பலரின் விருப்பம் நியூயார்க்காகத் தான் இருக்கும். உலக வர்த்தகத் தலைநகர், உலகச் செழிப்பின் ஒட்டுமொத்த பிரம்மாண்டம், உலக இனங்களின் குவியல் என்று எல்லாருக்கும் நியூயார்க் மீது எப்போதுமே ஒரு மோகம்.
அவர் ஒரு குறிஞ்சி மலர்!
திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. அவர் தமிழ் வித்துவானாகத் தேர்வு பெற்றவர். பொதுவாகத் தமிழ்ப் புலவர்கள் மிகச் சிறப்பாகக் கட்டுரைகள் எழுதுவார்கள். ஆனால் கதைகள் எழுத வராது. இதில் விதிவிலக்காக டாக்டர் மு. வரதராசனாரும், நா.பா.வும் கதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.
அருள்மிகு பாகம்பிரியாள்
நம் நாட்டின் கலாசாரத்தையும், பாரம்பரிய த்தையும் பிரதிபலிக்க புராணங்கள் கூறும் பழமையான கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று அம்பாள் அருள் பாலிக்கும் பாகம்பிரியாள் கோவில். சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையான இத்திருக்கோயில். தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை எனும் ஊரிலிருந்து 15.கி.மீ தொலைவில் திருவெற்றியூர் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ அன்னை இணைத்து வைத்த இடைவெளிகள்
மனித சரீரத்தில் உள்ள ஐம்புலன்களையும் உள்ளுணர்வுடனும் பிரக்ஞையுடனும் இணைத்து, அதன் பின்னர் அவ்வாறு இணைக்கப் பட்ட விழிப்புணர்வை ஆன்மாவுடன் இணைத்தார் ஸ்ரீ அன்னை. மனிதனின் மனத்தை அதி மானஸ உணர்வுடன் இணைத்தார்.
பாத யாத்திரை என்னும் பக்தி மார்க்கம்!
வேங்கடவனின் கீதமிசைக்கு வேவேடந்தாங்கல்கள் உலகெங்கும் கிளைவிட்டுப் பரவியிருக்கின்றன. அங்கே பல குரல்களில் இசை மிழற்றும் பக்திப் பறவைகளின் ஒரே ராகம் கோவிந்தன் நாமமே. அத்தகைய வேடந்தாங்கல்களில் ஒன்றுதான் சென்னை பெரம்பூரிலிருக்கும் ஸ்ரீ வேங்கடேச பக்த சமாஜம்.
பத்திரிகை நந்தவனத்தில் ஒரு மலர்!
தமிழறிஞர் பி.ஸ்ரீ.யின் பேரன். திசைகள் பத்திரிகையில் பணிபுரிந்தவர்.
தெரிந்த பாடல்கள் தெரியாத விளக்கங்கள்!
தண்ணீர் தன் வழியைத் தானே தேடிக் கொள்ளும் தண்ணீருக்கு மட்டும் அல்ல. எல்லாத் திறமைசாலிகளுக்கும் பொருந்தும். ஒரு சிறிய டைவெளி கிடைத்தால் போதும். தங்கள் திறமையை அழகாக வெளியில் கொண்டு வருகிறார்கள். அதைப் பலரும் ரசிக்கும் படியும் செய்கிறார்கள்.
ஐந்தாண்டுகளில் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் நூற்றாண்டு!
எனது தந்தை பேராசிரியர் இராதாகிருஷ்ணன் புலன் அழுக்கற்ற அந்தணாளன். காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் மீது எல்லையற்ற ஈடுபாடு. காரணம் எங்களது தாத்தா மடத்தில் கணக்கு வழக்குகளை நன்முறையில் பரா மரித்து ஈட்டிய ஊதியத்தால் வளர்ந்த குடும்பம். மேலும் மஹாபெரியவரின் பாதுகைகளைக் குல பொக்கிஷமாகப் பெற்ற குடும்பம்.
சாதுர்யத்தின் மறுபெயர் பிரணாப்!
உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவருமே பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், அந்தப் பெயரும், புகழும் எல்லோருக்கும் கை கூடுவதில்லை. அப்படிக் கைகூடியவர்கள் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள். அவர்களுள் ஒருவர் சமீபத்தில் காலமான பிரணாப் முகர்ஜி!
போர்பந்தர் வந்துதித்த நித்திலம்
வெள்ளாட்டுப் பால் குடித்து வேர்க்கடலை தின்ற வெறும்தள்ளாக் கிழவனெனத் தள்ளாதீர் தள்ளாமல்சீரான கீதைவழி சென்றுபின் வீழ்கையிலும்ஹேராம! என்றோதி னான்!
எஸ்.பி.பி. என்றொரு சகாப்தம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு எ நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள் பலரும் அவர் மிகச் சிறந்த இசைக் கலைஞர் என்று சொன்னதோடு நிறுத்தவில்லை. அவர் மிகச் சிறந்த மனிதர் என்பதையும் சேர்த்தே சொன்னார்கள். எஸ்.பி.பி. தம் உயர்ந்த பண்பு நலத்தால் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டார்.
எந்தை
ஒருவன் எந்த விஷயத்தைப் பற்றியும் புறவயமான சமநிலை நோக்குடனும், கச்சிதமான மொழியுடனும் எழுத முயலலாம்.
எண்ணித் துணிக!
ஓரு யானை இறந்துவிட்டது. வழக்கப்படி, கிங்கரர்கள் அதை கொண்டு வந்து, 'எம தர்மராஜன் சபையில் நிறுத்தினார்கள்.
இதழியல் ஆய்வாளர் மா.ரா. அரசு
அண்மையில் காலமான தமிழறிஞர் மா.ரா. அரசு, நான் தினமணிகதிரில் பணிபுரிந்த காலத்திலிருந்தே எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர்.
இசையால் மக்களை இணைத்தவர் மகாத்மா!
அண்ணல் காந்தி ஒர் அரிய மனிதர்; அற்புதப் பிறவி. அவர் வாழ்ந்தது ஓர் தவ வாழ்க்கை. எளிமையின் இலக்கணமே அவர். உடையில் எளிமை, உணவில் எளிமை, செலவில் சிக்கனம், ஆசை அவர் அறியாத ஒன்று, புலன் அடக்கம், அவரது உடன் பிறப்பு, உழைப்பும் சேவையுமே அவரது இரு கண்கள்; பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லை அவருக்கு . முற்றும் துறந்த முனிவரின் வாழ்க்கையே அவர் வாழ்ந்தது.
புஸ்தகா மின் நூலகம்
அனைத்துத் துறைகளும் கணினி மயமாகிவிட்ட 'டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது. வாசகர்கள் விரும்பும் நூல்களை வீட்டில் இருந்தபடியே கணினியில் விரல் சொடுக்கித் தேர்ந்தெடுத்து, படிக்கும் வழக்கம் தற்போது அனைவரிடமுமே வரவேற்புப் பெறத் தொடங்கி விட்டது.
புதிய கல்விக் கொள்கையில் கல்வி மொழியும் மொழிக் கல்வியும்
மொழி, மனிதனின் அகவிழி என்றால் மிகையாகாது. ஏனென்றால் மொழியால் தான் கண்ணுக்குத் தெரியாதவற்றைக் கூட நாம் காண முடியும்; உணர முடியும்.
வியக்க வைத்த விழா!
கடலில் விழுந்த எல்லோரும் முழுகுவது இல்லை. சிலர் தத்தளித்துக் கரை ஏறுகிறார்கள். சிலர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆழம் சென்று முத்து எடுத்து வருகிறார்கள். அதை இப்போது ஊரடங்கு காலத்தில் நாம் பார்க்கிறோம்.
பாரதி நூல் பதிப்பும் முல்லை முத்தையாவும்
தமிழ் நூல்களின் பதிப்புத் துறையில் எதிர்நீக்கல் முத்தையா ஆவார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் புதுமையான முறையில் பலரும் மெச்சும்படிப் பதிப்பித்தவர் என்ற பெருமையையும் முத்தையா பெற்றவர்.
புதுவையில் மலர்ந்த காயத்ரி
பண்டைய நாட்களில் வேதபுரி என்று அறியப்பட்ட புதுவை சில நூற்றாண்டுகள் ஃபிரஞ்சுக்காரர் ஆட்சியின்கீழ் இருந்தது. ஆங்கிலேயரின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பித்த மகாகவி பாரதி 1908ம் ஆண்டு புதுவையில் தஞ்சம் புகுந்தார்.
தோனி வித்தியாசமானவர் தான்!
'தல' என்று தமிழ் ரசிகர்களாலும் மஹி என்று சக விளையாட்டு வீரர்களாலும் தோனி என்று பலராலும் அறியப் படும் மஹேந்திர சிங் தோனி, கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி சுதந்திர தினத்தன்று வெளியானது.
சா.கந்தசாமியும் நாட்டியரங்கமும்
"உங்களை இவர் சந்திக்க விரும்புகிறார்" என்று நண்பர், எழுத்தாளர் சாருகேசி என் இல்லத்துக்கு சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைத்து வந்தவரைப் பார்த்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. வந்தவர் பிரபல எழுத்தாளர் சா. கந்தசாமி, எளிமையே வடிவானவர்.
பாலைவன ரோஜா
நான் குடந்தை அரசினர் கல்லூரியில் முதல் வகுப்புப் படிக்கும்போது, அவரை நான் வசித்த கீழைச் சன்னிதித் தெரு கோடியில் இருந்த மண்டபத்தில் சந்தித்தேன். அந்த மண்டபத்தில் ஜெய மாருதி வாசகசாலை என்று ஒன்று இயங்கிவந்தது. கோயில் மண்டபங்களில் தனியார் சொத்தாகப் போகாமல் தப்பித்த அதில் அவ்வாசகசாலை நடந்து வந்ததற்கு அவர்தான் காரணம்.
புதிய கல்விக் கொள்கை 2020 உயர்கல்வியில் வட்டார மொழிகளின் முன்னுரிமை
'400 ஆண்டுகளுக்கு முன்னால் வேறு விண்கோள் ஒன்றிலிருந்து மனிதனைப்போன்ற உயரறிவாளர் ஒருவர் பூமியில் குதித்து என்ன நடக்கிறது?' என்று பார்த்திருப்பாரேயானால், சீன, இந்தியப் பகுதிகளில் தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் அடையாளங்களை உயரமாகக் கண்டிருப்பார்; ப்பார்; அதற்குப் அதற்குப் பின் வந்த காலங்களில் தான் இப்பகுதிகள் தம் பாரம்பரிய அடையாளங்களை இழந்திருக்கின்றன ,' என்று 1979-ஆம் ஆண்டு இயல்பியலில் நோபல் பரிசு பெற்ற அறிவியலறிஞர் அப்துஸ் சலாம் ஒரு கட்டுரையில் வேதனைப் பட்டிருக்கிறார்.
கொரோனா கால நெறிமுறைகள்!
சிறு நீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு:
கல்வித்துறையில் ஒரு சாதனையாளர்...
கல்வித் துறையில் ஆசிரியர் பணி என்பது நாளைய தலைமுறை யினரை உருவாக்கும் பொறுப்புடையது 1945 இல் ஜப்பான் அணு குண்டால் அழிக்கப்பட்டபோது உடனடி வளர்ச்சி ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது கல்வித் துறையில்தான்.
கோவை ஞானி
கோவை ஞானி காலமானார் என்ற செய்தி கிடைத்தபோது, கோவையில் அவரைத் தேடிச்சென்று அவர் இல்லத்தில் இரண்டு மூன்று முறை சந்தித்த ஞாபகங்கள் நெஞ்சில் படமாய் ஓடின.
பாக்கியம் பெற்றேன்
பிப்ரவரி 29 ஆம் தேதி 1985ஆம் வருடம். அன்று எங்கள் அத்தையின் பிறந்த நாள். என் வாழ்க்கையில் நடந்த ஒரு இனிமையான நிகழ்ச்சி.