CATEGORIES
Kategoriler
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
அமெரிக்க கார் தாக்குதல் தனிநபர் செயல்: எஃப்பிஐ
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜப்பார் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 59.11லட்சமாக உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ந்துள்ளது.
தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும், வர்த்தகத்துக்காகவும் தனியார் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்
தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் கைது செய்ய விடாமல் அவரின் பாதுகாவல் படையினர் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.
சநாதனத்தின் அர்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கர்
காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தர்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் மனைவிக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் வைரம்
பிரதமர் மோடியின் பரிசு
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி கண்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கருத்து
ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக இயல்புநிலை திரும்பவில்லை
முதல்வர் ஒமர் அப்துல்லா
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கேரள மாநிலம் காசர்கோடுமாவட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குஞ்ஞிராமனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிர்ப்பு
நகர் முழுவதும் போராட்டம் - பதற்றம்
மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா பதவியேற்பு
மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
ரயில்வே ‘குரூப்-டி’ பணிகளுக்கு கல்வித் தகுதி தளர்வு
லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ரயில்வே வாரியம் தளர்வு அளித்துள்ளது.
சாபஹார் துறைமுக மேம்பாடு: இந்தியா-ஈரான் ஆலோசனை
ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் வளர்ச்சி, வேளாண்மை மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பு ஆகிய பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவும் ஈரானும் விரிவான ஆலோசனை மேற்கொண்டன.
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மத்திய அரசு வெளியீடு
மத்திய அரசு வெளியீடு
மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு - எஸ்.ஜெய்சங்கர்
மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்
தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின் போது பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
மணிப்பூர்: போராட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் மீது தாக்குதல்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் காங்போக்பி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காயமடைந்தார்.
மேல்முறையீடு மனு தாக்கலில் நீண்ட தாமதம்: மத்திய அரசுக்கு சுய பரிசோதனை தேவை
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மத்திய அதிகாரிகள் மீது வழக்குப் பதிய சிபிஐக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை
மாநில அரசு அதிகார வரம்பினுள் இயங்கும் பல்வேறு துறை களில் நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மாநில அரசின் முன் அனுமதியை சிபிஐ (மத்திய குற்ற புலனாய்வு பிரிவு) பெறத் தேவையில்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மேம்பாலத்தில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர்
10 மணி நேரத்துக்குப் பிறகு அகற்றம்
சி-டெட் உத்தேச விடைக்குறிப்பு: நாளைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
மத்திய அரசு தகுதித் தேர்வின் (சி-டெட்) உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
மருத்துவ இடங்களை காலியாக விட முடியாது உச்சநீதிமன்றம்
மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரச் சேவைகள் துறை இயக்குநர் தலைமையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அரசு நியமித்தது.
சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு
சீனாவில் 'ஹெச்எம்பிவி தீநுண்மி (வைரஸ்) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.