CATEGORIES
Kategoriler
தாலி கொள்ளையா? மறுத்தது நிர்வாகம்
திருகோணமலை, திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரணிலின் அழைப்பை அரியநேத்திரன் அணி மறுத்தது
காரணத்த்தை எமக்கு அறிவித்திருக்கவில்லை. ஒரு திட்டமிடப்படாமல் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் அர்த்தம் இல்லை
இங்கிலாந்துக்கு எதிரான குழாமில் வன்டர்சே, நிஸங்க
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான குழாமில் சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வன்டர்சேயும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பதும் நிஸங்கவும் இடம்பிடித்துள்ளனர்.
பாடிய ஈரானிய பெண் கைது
பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார்.
பரிஸ் 2024 தங்கப் பதக்கப் போட்டியிலிருந்து வினீஷ் பொகட் ஓய்வு
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் சுயாதீனப் பிரிவு மல்யுதத்தின் இறுதிப் போட்டியிலிருந்து புதன்கிழமை (07) தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் வினீஷ் பொகட் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பதற்றம்
பிரித்தானியா சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப்பள்ளியில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
தொடரை வென்று, 27 ஆண்டு கால தாகம் தீர்த்த இலங்கை
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் "நாட்டைக் காப்பாற்றினார்"
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன
"கத்தியால் தாக்கியது பொய்”
பாராளுமன்ற உணவகத்தில் பணியாற்றும் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொள்ள முயற்சித்தமை குறித்த சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென்றும், ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ள விடயம் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
மொஹமட் ஷியாம் படுகொலை: அறுவருக்கு மரண தண்டனை உறுதி
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (08) உறுதி செய்தது.
“வகுப்பெடுபோர் குறித்து கவனம் செலுத்தவும்"
இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பியுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மன்னார் விவகாரத்தில் தவறுகள் நடந்திருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
சகல மருந்துகளும் கைவசம் உள்ளன
சுகாதாரத் துறையில் நிலவிய பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இறுதிப்படுத்தப்படும் திகதியை குறிப்பிடவில்லை
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதிப்படுத்தப்படும் திகதியை மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ உறுதியாகக் குறிப்பிடவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருவிழா இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எமில் விடுவிப்பு
முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் கல்பத்தேவாவை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய மரண தண்டனையிலிருந்து விடுதலை செய்து உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.
சஜித்தின் வெற்றிக்காக புதிய கூட்டணி உதயம்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 கட்சிகள் இணைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்
2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரானார் டிம் வோல்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 60 வயதான டிம் வோல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 2024: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை தவறவிட்ட அருண தர்ஷன
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை இலங்கையின் அருண தர்ஷன தவற விட்டுள்ளார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராகிறார் முகம்மது யூனுஸ்
பங்களாதேஷில் இடைக்கால அரசுக்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய றோஹித்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்திய அணித் தலைவர் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
“மக்கள் முட்டாள்கள் இல்லை”
எவ்வித கொள்கையும் இல்லாமல் கட்சிமாறி செயற்படுபவர்கள் கூறுவதனை கேட்பதற்கு மக்கள் முட்டாள்களல்ல.
பதில் இன்றேல் இரத்து செய்யவும்
கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்குக் கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நான் இந்த சபையில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை ஒன்று பதிலளியுங்கள்,இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
என் மீது அவதூறு கூறுகின்றனர்
அரசியலில் தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் தன்னைப்பற்றி அவதூறான வகையில் இணையத்தளங்களில் எழுதுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிறுத்த முயற்சி
வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
சஜித் அணியுடன் தயாசிறி கைகோர்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
1,700 ரூபாய் வேண்டும்’ 'வாக்குறுதியை நிறைவேற்றுவேன்'
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி, முன்னதாக வாக்குறுதி அளித்தவாறு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன்
‘அரகலய'வினருக்கு மொட்டு அழைப்பு
'அரகலய' போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை, தமது கட்சி சார்பில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.
ஆடையின்றி புகழ்பாடுகின்றனர்
ரணில் விக்ரமசிங்கவை சிறைக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம் என சூளுரைத்தவர்கள் இன்று ஆடையில்லாமல் ரணில் புகழ்பாடுகிறார்கள்.