CATEGORIES
Kategoriler
ரணில் எதிர்ப்பு
புதிய ஜனநாயக முன்னணியில் கூட்டணி வகிக்கும் கட்சிகளின் அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியலில் ரவி
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 'சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
“ஊழலை எதிர்க்க அனுரவுக்கு தோள் கொடுப்போம்”
நாட்டின் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்றும் புதிய பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் எனவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
150 உறுப்பினர்கள் வெளியேற்றம்
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமார் 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் மீது நடவடிக்கை எடுப்போம்"
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய JOG மக்கள் சக்தி மதிக்கிறது.
லொஹான் தம்பதிக்கு விளக்கமறியல் நீடிப்பு
பதிவு செய்யப்படாத இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை (18) நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு தேர்தலுக்கு தயாராகும் ஆணைக்குழு
நாட்டின் பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இம்மாதம் 27ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.
தேசிய பட்டியல் தெரிவு பொருத்தமானதல்ல
இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர் பீடம் நேற்று கூடி வெளியிட்ட தேசிய பட்டியல் தெரிவு பொருத்தமானதல்ல. அது ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி
பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் ஜனாதிபதி நிரூபித்துள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் திங்கட்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஓய்வு பெறும் கிறிஸ்டினாடோ ரொனால்டோ?
ஓய்வு நடைபெற வேண்டுமானால், அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெற வேண்டுமென போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சென். லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற நான்காவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சிகிச்சை
ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது
கத்தி குத்தில் எண்மர் பலி
வூக்ஸி நகரில், 21 வயது இளைஞர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில், 8 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவலைப்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று சனிக்கிழமை (16) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி
வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி விபத்து; ஒருவர் பலி
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரகஸ்மன்ஹந்திய வீதியின் கடுவில அணைக்கட்டு பகுதியில் சனிக்கிழமை (16) மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேட்பாளரின் வீடு மீது தாக்குதல்
திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேச்சை குழு ஒன்றில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.இத்ரீஸின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
"பெண்கள் தலைமைத்துவம் உயர்வதை பார்க்க முடியும்”
அரசியலில் தான் எடுத்துள்ள முதல் அடியின் மூலம், பாராளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் அதிகமான பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு உயர்வதை சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்க முடியும் என்று பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதியான அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் ஐவர் கைது
இலங்கைக்கு மேற்கே 110 கடல் மைல் தொலைவில் போதைப்பொருள் கடத்திய இலங்கையின் பல நாள் கப்பலுடன் 5 சந்தேகநபர்கள் ஞாயிற்றுக்கிழமை(17) கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
“தீர்க்கப்படாத பிரச்சினைகளை அனுர அரசாங்கம் தீர்க்கும்”
நாட்டில் நடந்து முடிந்த தேர்தல்களில் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.
பணியிடங்களுக்கு திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில் சேவை
பொதுத் தேர்தல் கடமைகளுக்காக நீண்ட வார விடுமுறை முடித்து விட்டு தங்களது பணியிடங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்கத் ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
IMF இன் மூன்றாவது குழு இலங்கைக்கு விஜயம்
இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளது.
பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை
எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய விரிவுரைகள், பிரத்தியேக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்ற பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்
வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்ற பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது, அதனைச் சுமந்திரன் வாங்க மறுத்தார்.
பாராளுமன்றத்தில் 21 பெண் பிரதிநிதிகள்
நாட்டின் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், 21 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“ஓய்வு பெற போவதில்லை”
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கும் என தாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் சரியாகக் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷக்ஷ் தெரிவித்துள்ளார்.
"அனுபவம் தேவையில்லை”
இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்தாலும், வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
"புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியே தீருவோம்"
இலங்கையின் புதிய அரசியலமைப்பை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமனம்
நாட்டின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இன்று திங்கட்கிழமை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.