CATEGORIES
Kategoriler
குற்றச்சாட்டுகள் மீதான பொது விசாரணைக்குத் தயாரா?
‘வெளிநாட்டு நிதி முதலீடுகளை ஒப்புக்கொண்டுள்ள இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதபி புரி புச், இவ்விவகாரம் தொடா்பான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா’ என ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
கவிதா ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜவுளித் தொழிலை காக்க உரிய நடவடிக்கைகள் தேவை
தமிழகத்தில் ஜவுளித் தொழிலை காக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ரா தாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் படித்தால் மட்டுமே கல்லூரிகளில் சேர்க்கை
சென்னை வளா்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், அண்ணா பல்கலையின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம் ஆகியவை சாா்பில் இரண்டாம் உலகத் தமிழ் வளா்ச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேர் கைது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே நிலத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 2 பேரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்துக்கு ரூ.380 கோடி
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்துக்கு இதுவரை ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
புதை சாக்கடைக்குள் இறங்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
ஆவடியில் புதை சாக்கடைக்குள் இறங்கியபோது மயக்கமடைந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் கோபியின் குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை சா.மு.நாசர் எம்எல்ஏ திங்கள் கிழமை வழங்கினார்.
சென்னை குடிநீர் இணைப்பு கட்டமைப்புகளைக் கண்காணிக்க புதிய வசதி
சென்னை குடிநீர் வாரிய இணைப்பு கட்டமைப்புகளை கண்காணிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மின்சார ரயில்கள் சேவை குறைப்பு: மேலும் 4 நாள்களுக்கு நீட்டிப்பு
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடையாததால், தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கேரள அரசு முடிவு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பிகார் கோயில் நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்
பிகார் மாநிலம், ஜெஹனாபாத் மாவட்டத்தில் உள்ள பாபா சித்தேஸ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்; 16 பேர் காயமடைந்தனர்.
4 மாநகராட்சிகள், 3 நகராட்சிகள் உதயம்
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் மற்றும் 3 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பிரபலமாகும் இந்திய சைவ உ சைவ உணவுகள்!
பாகிஸ்தானின் தொழில்துறை மற்றும் பொருளாதார மையமான கராச்சி நகரம், உணவுப் பிரியர்களுக்கு உணவுத் தலைநகரமாகவும் மாறியுள்ளது.
புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
வங்கதேச உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு
அமெரிக்கா முதலிடம்; 6 பதக்கங்களுடன் திரும்புகிறது இந்தியா
பயங்காவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர்
நேபாள அதிபர், பிரதமருடன் இந்திய வெளியுறவுச் செயலர் ஆலோசனை
நேபாள அதிபா், பிரதமா் உள்ளிட்டோரை இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா
வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
அதானி முறைகேடு நிறுவனங்களில் செபி தலைவருக்குப் பங்கு
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றச்சாட்டு
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு பரிசோதனை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பு: கே.அண்ணாமலை கண்டனம்
தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இளைஞர்களின் ஆற்றல் உத்வேகமளிக்கிறது
இளைஞர்களின் ஆற்றல் உத்வேகமளிப்பதாக இருக்கிறது என்று ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி கலை, பண்பாட்டு திரைப்படங்களை காணலாம்
நூலகத் துறை புதிய முயற்சி
நாடு முழுவதும் 500 மையங்களில் நடைபெற்ற முதுநிலை ‘நீட்' தேர்வு
எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெற்றது.
தமிழகத்தில் ஆக.17 வரை கனமழை நீடிக்கும்
விழுப்புரத்தில் 220 மி.மீ. மழை பதிவு|
'அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பில்லை'
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் அவசியம்
109 பயிர் ரகங்கள் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி
விமானத்திலிருந்த 61 பேரும் உயிரிழப்பு
பிரேசிலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் இருந்த 61 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
3 ரஷிய பிராந்தியங்களில் 'பயங்கரவாத' உஷார் நிலை
ரஷிய எல்லைக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து 5 நாள் காலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டின் மூன்று பிராந்தியத்தில் 'பயங்கரவாத' உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.