CATEGORIES
Kategoriler
மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு
57 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு
தில்லியில் 127 டிகிரி வெயில்!
இந்தியாவிலேயே அதிகபட்சம்
மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு சிஏஏ-இன் கீழ் குடியுரிமை: மத்திய அரசு தொடக்கம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்கும் பணிகளை மத்திய அரசு புதன்கிழமை தொடங்கியது.
காங்கிரஸுடனான கூட்டணி நிரந்தரமில்லை: கேஜரிவால்
'பாஜகவை வீழ்த்துவதற்காக மட்டுமே காங்கிரஸுடன் ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துள்ளோம். மற்றபடி இது நிரந்தரக் கூட்டணி இல்லை’ என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.
மோடியின் கன்னியாகுமரி 'தியான' பயணத்துக்கு எதிர்ப்பு
பிரதமா் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி தியான பயணம் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புதன்கிழமை புகாரளித்தது.
ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை
சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.
நடால் முதல் சுற்றிலேயே தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.
‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்
‘மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய அக்னிபத் திட்டம் தூக்கியெறியப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு
தனது முன்னாள் மேலாளா் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குா்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து தீா்ப்பளித்தது.
பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே
‘மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்துவிட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை
சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் அரசுப் பணியாளர், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக பாடத்திட்டத்தில் தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது
ஆளுநர் ஆர்.என்.ரவி
யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி
3 பேர் கைது
இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிர்ப்பு
டிஜிபி பதிலளிக்க உத்தரவு
இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 31-க்குள் ஆதாருடன் ‘பான்’ இணைக்க வேண்டும்: வருமான வரித் துறை
மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிா்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை செவ்வாய்கிழமை அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நிபுணர் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்
பிரதான வழக்கின் தீா்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசரமாகப் பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு
மிஸோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் அதை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.
‘நிலச்சரிவில் இறந்தவர்கள் 2,000 பேர்’
பப்புவா நியூ கினியா அரசு