CATEGORIES
Kategoriler
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி 4-ஆவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் படுகாயம்
'சூப்பர் பவர்' இருப்பதாகக் கூறி கோவையில் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திங்கள்கிழமை குதித்த மாணவர் படுகாயம் அடைந்தார்.
11 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு
தமிழகத்தில் நவ.1- இல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரைவுப் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்
ஆண்களைவிட பெண்களே அதிகம்
டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்கிற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக?
தமிழக திரைத் துறையிலிருந்து வந்த பலரும் அரசியல் கட்சியைத் தொடங்கினாலும், அதில் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஹரியாணா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் சந்தேகம் ஆதாரமற்றது
ஹரியாணா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆதாரமில்லாத சந்தேகத்தை காங்கிரஸ் எழுப்பியுள்ளதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியது.
ரூ.426 கோடியில் 3,268 புதிய குடியிருப்புகள்
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.426 கோடியில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைவர்களுக்கு விஜய் நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மூலம் விஜய் தமது கட்சியினருக்கு நல்ல கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
2026 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி
தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: தினேஷ் கார்த்திக்
உரிய விழிப்புணர்வு, உடல் ஆரோக்கியம் இருந்தால் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்வு செய்த பாதை தெளிவாக இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை, நாகர்கோவிலுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்
தீபாவளியை முன்னிட்டு, மானாமதுரை, நாகர்கோவில், கோவைக்கு புதன்கிழமை (அக்.30) சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
520 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பட்டம் வழங்கினார்
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் ஏராளமானோர் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றதால் மாநகர மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிதி நிறுவன மோசடி: தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து கௌரவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட 1,050 பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
மாநகராட்சி கால்பந்து மைதானத்துக்கு இனி கட்டணம்
சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களை செயற்கை புல் விளையாட்டு திடலாக மாற்றி ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை தமிழிசை குற்றச்சாட்டு
சென்னையில் வெள்ளச் சேத தடுப்பு திட்டங்கள் முழுமை பெறவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.
மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்க கணினி
சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்கக் கணினிகளை மேயர் ஆர். பிரியா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.
ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.