CATEGORIES
Kategoriler
ஸ்ரீரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த ஊஞ்சல் உற்சவ விழா திங்கள்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இன்றுமுதல் கடற்கரையிலிருந்து வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை
தண்டவாளம் அமைக்கும் பணியால் கடந்த ஓராண்டுகாலமாக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட வேளச்சேரி பறக்கும் ரயில்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் கடற்கரையிலிருந்து இயக்கப்படவுள்ளன.
440 அரசுப் பள்ளிகளில் ரூ.745 கோடியில் பணிகள்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ரூ.745 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிரிப்டோ காயின் மோசடி: 6 பேர் கைது
பணத்தை கிரிப்டோ காயினாக மாற்றித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பணியிடத்தில் நேர்மை அவசியம்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி
பக்கவாத பாதிப்புகளுக்கு நவீன கேத் லேப் தொடக்கம்
பக்கவாத பாதிப்புகளுக்கான அதி நவீன இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) சென்னை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
மன்னிப்பு கோரினார் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர்
திருவேற்காடு கோயில் ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் க.வளர்மதி மன்னிப்பு கேட்டு அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’: நவ.4-இல் திறந்துவைக்கிறார் முதல்வர்
கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.4-ஆம் தேதி திறந்து வைப்பார் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை
ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார்
வயநாட்டின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு இன்னும் உதவவில்லை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு இன்னும் உதவவில்லை என்று கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (அக். 29) தொடங்கி வைக்கிறாா்.
இந்தியாவின் சிறந்த வங்கி: எஸ்பிஐ-க்கு சர்வதேச விருது
இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை (எஸ்பிஐ) அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதார பத்திரிகையான 'குளோபல் ஃபைனான்ஸ்' தேர்வு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்: ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கு தடுப்புக் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏவின் பையில் துப்பாக்கி கிட் தோட்டாக்கள் இருந்ததால் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன்: ரூ.372 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.372.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு வீரவாள் பரிசு
தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்க்கு பொதுச்செயலர் புஸ்ஸி என். ஆனந்த் வீரவாளை பரிசாக வழங்கினார்.
காலமானார் முன்னாள் எம்எல்ஏ மா.தண்டபாணி
வேடசந்தூர் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.தண்டபாணி (படம்) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு: பாமக, தமாகா கோரிக்கை
தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டுமென பாமக, தமாகா ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நிகழாண்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நலனை தவெக முன்னெடுக்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
ஹரியாணாவுக்கு சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலிலிருந்து ஹரியாணா மாநிலம் அம்பாலாவுக்கு திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தொழிலதிபரிடம் கொகைன் பறிமுதல்
சென்னையில் தனியாா் ஹோட்டலில் தங்கியிருந்த தொழிலதிபரிடமிருந்து கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை முக்கிய ஏரிகளில் 41% நீர் நிரம்பியது
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.
'சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி விரைவில் திறப்பு’
சிந்தாதிரிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி விரைவில் திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
ரூ.12,000 கோடி கூடுதல் கடன்
சீனாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவில் மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது.
இஸ்ரேல் தாக்குதலை குறைத்து மதிப்பிடக் கூடாது
ஈரான் தலைமை மதகுரு கமேனி
ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஸ்கர் 500 ரன்கள்
ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் நாடுக்கு எதிரான ஆட்டத்தில் சத்தீஸ்கர் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஆள்குறைப்பு இல்லை: மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சர்வதேச பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 24 பதக்கங்கள்
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியர்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
மும்பை - ஒடிஸா ஆட்டம் 'டிரா'
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், மும்பை சிட்டி எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.