CATEGORIES
Kategoriler
நிலக்கடலை அறுவடை பணி தீவிரம் மகசூல் இழப்பால் விவசாயிகள் கவலை
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. அத்துடன் கொப்பரை உற்பத்தி மற்றும் அதிலிருந்து தேங்காய் எண்ணை எடுப்பது போன்ற தொழில்களும் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மற்ற எண்ணை வித்து பயிர்களான நிலக்கடலை, எள் போன்றவற்றின் சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது.
தினம் ஒரு மூலிகை சீந்தில் கொடி ஓர் பார்வை
சீந்தில் கொடி தாவரப்பெயர் Tinospora Cardifolia வேறு பெயர்கள் சோம வள்ளி சாகா மூலி சஞ்சீவி ஆகாச வல்லி என்று கூறுவார்கள்.
படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை
மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை சார்பில், ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தினம் ஒரு மூலிகை - தொட்டாற்சுருங்கி ஓர் பார்வை
தொட்டாற்சுருங்கி தொட்டால் வாடி என்பதாகும். இந்த மூலிகை காந்த சக்தி உடையது.
வடமதுரையில் வெங்காயம் விலை குறைவால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, அய்யலூர், கொம்பேரிபட்டி, பழங்காநத்தம் , சுக்காம்பட்டி, புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதிக வருவாயை ஈட்டித் தரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் 1 கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விலைக்கு வாங்கி வெங்காயம் நடவு செய்தனர். நடவு நாட்களில் இருந்து 40 முதல் 50 நாட்களுக்குள் சாகுபடிக்கு வந்துவிடும்.
உடுமலை பச்சை மிளகாய் ஒட்டன்சத்திரத்தில் விற்பனை
பருவமழைக்கு பிறகு, உற்பத்தி உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஒட்டன்சத்திரம் சந்தைக்கு , உடுமலையிலிருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி மொத்த எண்ணிக்கை 52 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 52 கோடியைக் கடந்துள்ளது. நேற்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 59,97,068 முகாம்களில் 52,36,71,019 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு
திருநெல்வேலி, ஆக.11 திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தினம் ஒரு மூலிகை ஈஸ்வர மூலி ஓர் பார்வை
ஈஸ்வர மூலி பெருமருந்து தலைசுருளி தராசு கொடி என்று அழைக்கப்படும் வெண்குட்டம் விசம் முழிப்பான் ரத்தசோகை மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கால்நடைகளுக்கு பெரிதும் உதவுகிறது.
வடகாடு உழவர் உற்பத்தியாளர் குழுவில் விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
புதுக்கோட்டை, ஆக.11 புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், வடகாடு தோட்டக் கலை உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கான அங்ககப் பண்ணைகள் தெட்சிணாபுரம், திருவரங்குளம், காயம்பட்டி , நெடுவாசல் மாங்காடு, வடகாடு வெண்ணாவல் குடி, பசுவயல், அரையப்பட்டி மற்றும் கீழையூர் கிராமங்களில் அமைந்து உள்ளன.
பூச்சி மருந்துக்கடைகள் வைக்க பட்டயப்படிப்பு அவசியம் ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
ஈரோடு, ஆக. 11 உரம், பூச்சி மருந்துக்கடைகள் தொடங்கி நடத்துவதற்கு தனியாக ஓராண்டு வேளாண் படிப்பு (டிப்ளமோ) பட்டயச் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி. சின்னசாமி தெரிவித்தார்.
வால்பாறையில் தேயிலைத் தூள் விலை சரிவு
கோவை, ஆக.11 வால்பாறையிலுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் விலை சரிவடைந்துள்ளது.
பாகற்காய் விளைச்சல் சரிவு
சிவகங்கை, ஆக.10 சிவகங்கை மாவட்டம், பூவந்தி வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், ஆக. 10 கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
பசுமைக் குடிலில் கொய்மலர் மற்றும் காய்கறி சாகுபடி
திருச்சி, ஆக.10 விராலிமலை வட்டார விவசாயிககள் குடுமியான்மலை தோட்டக்கலை பண்ணைக்கு கண்டுணர்வு பயணம் மேற்கொண்டனர்.
வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை சரிவு
தேனி, ஆக.10 தேனிக்கு வெளிமாவட்ட வரத்து அதிகரிப்பால் கொய்யா சரிந்து கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினம் ஒரு மூலிகை கற்பூரவள்ளி ஓர் பார்வை
கற்பூரவள்ளி வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம். இது புதராக வளருகிறது, வாசனை மிக்கது, இதன் இலை தடிப்பாகவும், மெது மெதுப்பாகவும் இருக்கும்.
பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டம், கரூர் ரெயில்வே ஜங்சன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அவை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை குறைந்து கொண்டே வந்தது. கடந்த மாத இறுதியில் ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, 09.08.2021ல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நத்தம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் நாவல்பழம் விலை வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விளைச்சல் இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இனிப்பும் துவர்ப்பும் நிறைந்த நாவல்பழம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சீசன் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
சந்தையில் ஆடு, கோழிகள் விலை கடும் சரிவு
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
திராட்சை விலை உயர்வு
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது.
தொடரும் மழையால் சோலையாறு அணை முழுக் கொள்ளளவில் நீடிப்பு
சோலையாறு அணை தொடர்ந்து 15 நாட்களாக நிரம்பிய நிலையில் உள்ளதால், உள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மீன் வளர்ப்புக்கு மானியம்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை விரிவுபடுத்த மானியம் வழங்கப்படவுள்ளது.
மணமேல்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் (21-22) மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயிற்சி அறிவியியல் ரீதியான சேமிப்புத் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பின் கீழ் அறந்தாங்கியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கிற்கு விவசாயிகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரா.சரவணன் அழைத்துச் சென்றார்.
தில்லியில் வரும் 12ல் காவிரி குழு கூட்டம்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வரும், 12ம் தேதி, தில்லியில் நடக்கவுள்ளது.
மரவள்ளி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில், மரவள்ளி செடிகளில் மாவு பூச்சி தாக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் 04.08.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேந்திரன் வாழை விலை உயர்வு
நிலத்தடி நீர்மட்டம் சரிவால் வாழைக்கு போதுமான தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. எனவே ஒரு தாருக்கு சராசரியாக ஐந்து கிலோ மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.