CATEGORIES
Kategoriler
நெல் சாகுபடியில் எலிகளை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை, மே 3 நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை வழங்கினார்.
தேனீ வளர்ப்பு குறித்து களப் பயிற்சி
கோவை, மே 3 கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஆனைமலையில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஆனைமலை சோமந்துறையில் உள்ள விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்கள்.
தென்னை வேர் டானிக் பயன்பாடு செயல்முறை விளக்கம்
சேலம், மே 3 "ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்" என்ற சிறப்புக்குரிய தென்னையை சாகுபடி பயிராகக் கொண்ட சேலம் மாவட்டம் வீரகவுண்டனூரை சேர்ந்த விவசாயியின் வயலை திருவண்ணாமலை மாவட்டம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மற்றும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டக்குழு, ஏத்தாப்பூர் வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர்.
தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளருடன் கலந்துரையாடல்
புதுக்கோட்டை, மே 3 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மோகன் லால், திருனேஷ்குமார், வசந்த ராஜன், கௌதம், ஆனந்த், சுபாஷ், ஆனந்த் ஆகியோர் பேராவூரணியில் தங்கிகளப்பயிற்சி மேற்கொண்டு, விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
தென்னை நார் தொழிற்சாலையை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை, மே 3 புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண் கல்லூரியைச் சேர்ந்த இருதியாண்டு பயிலும் மாணவிகள் உ.அபிநயா, ச.ஐஸ்வர்யா, க.ஜெயப்பிரியா, வே.ஆதித்தியா, சீ.மதுமிதா, பூ.பவித்ரா, ர. பவித்ரா, ர.சுஜித்ரா, செ. பபிதா, செ.சுமித்ரா ஆகிய 10 பேர் கொண்ட குழு கடந்த 3 மாதங்களாக ஆலங்குடியில் தங்கி, வேளாண் அனுபவப் பணியை மேற்கொண்டு வந்தனர்.
கொள்முதல் நிறுத்தத்தால் ஏலக்காய் விலையில் சரிவு
தேனி, மே 3 வடமாநிலங்களில் கரோனா பரவல் காரணமாக ஏலக்காய் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் விலை சரிவவை சந்தித்துள்ளது.
மண் மாதிரி சேகரம் செய்தல் செயல்முறை விளக்கம்
சேலம், ஏப்.30 சேலம் மாவட்டம், வீர கவுண்டனூரைச் சேர்ந்த விவசாயியின் வயலை திருவண்ணாமலை மாவட்டம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மற்றும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டக்குழு, ஏத்தாப்பூர் வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர்.
பயறு வகை பயிர்களில் கடின விதைகளை நீக்கும் தொழில்நுட்பம்
வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை
தேமோர் கரைசல் குறித்து செயல்விளக்கம்
தேமோர் கரைசல் குறித்து செயல்விளக்கம்
எலுமிச்சை விலை உயர்வு
சென்னை, ஏப்.30 தேவை அதிகரிப்பால், எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்து வருகிறது.
ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் செயல்விளக்கம்
ஈரோடு, ஏப்.30 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் கழனி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அமைந்துள்ளது.
வாழையில் பூச்சி மேலாண்மை
கரூர், ஏப்.27 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குமாரமங்கலம் எனும் கிராமத்தில் வாழை விவசாயியான கண்ணன் என்பவரின் வயலில் வாழை பயிரில் பூச்சி மேலாண்மை பற்றி நாமக்கல் மாவட்டம் பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் செயல்முறை விளக்கம் கொடுத்தனர்.
போதுமான உரம் கையிருப்புள்ளது வேளாண் துறை தகவல்
காஞ்சிபுரம், ஏப்.27 சொர்ணவாரி சாகுபடி பருவத்திற்கு தேவையான உரம் இருப்புள்ளது என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
பிளம்ஸ் சீசன் தொடக்கம்
திண்டுக்கல், ஏப்.27 கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளம்ஸ் சீசன் களைகட்டியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் தயாரிப்பு (Silage) செயல் விளக்கம்
திருச்சி, ஏப்.27 திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை பகுதியில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துறையூர்) மாணவர்கள் ர.ரஞ்சித்குமார், சே. ரோகித், த.சதிஷ்குமார், ச.சிவா, ஸ்ரீ ஹரிராஜ். சி, அ.ஸ்ரீராம், ர. வருண்குமார், விக்னேஷ் மு , விக்னேஷ்வரன். செ. சுச்சி அருண். ப, யுவராஜ். சீ, வாசு. சீ ஆகியோர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் தயாரித்தல் முறையை பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினர்.
தென்னை மரத்தைத் தாக்கும் நோய்கள் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள்
மொட்டு அழுகல் நோய்: இந்நோயானது ஃபைட்டோப்தோராபால்மிவோரா என்ற பூசணத்தால் தோற்று விக்கப்படுகிறது. இந்நோய் பொதுவாக தென்னை வளரும் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
சர்கார் உடுப்பத்தில் விவசாயிகள் கலந்தாய்வு
நாமக்கல், ஏப்.27 புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், சர்கார் உடுப்பத்தில் கிராம வளங்கள் குறித்த விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நுங்கு வரத்து குறைந்தது
சிவகங்கை, ஏப்.27 சிங்கம்புணரியில் கரோனா பரவல் காரணமாக நுங்கு விற்பனைக்கு வராததால், நுங்கு பிரியர்கள் அவற்றை தேடி அலைகின்றனர்.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு
தேனி, ஏப்.27 பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த சாரல் மழையால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. 117.09 அடியானது.
காளான் வளர்ப்பு பயிற்சியில் வேளாண் மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஆலங்குடியில் தங்கி களப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எள் விதையில் விதை நேர்த்தி செய்யும் முறை
திருவண்ணாமலை, ஏப்.27 விருத்தாசலம் வட்டாரம், புதுக்கூரைப் பேட்டை எனும் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வாழவச்சனூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவிகளான யூ ஜெசியா, ம. இந்துமதி, நீ.பிரீத்தா, ம.கனிமொழி, ஜெ.கீர்த்தனா, பெ.பிரியங்கா, மா.சூரிய கலா, கு.தெய்வானை, நெ.வின்சி, ப.ரசிகப் பிரியா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராம மக்கள் உதவியோடு கிராம வரைபடம் மற்றும் கிராம வள வரைபடத்தை வரைந்தனர்.
ஊரடங்கில் விதிமுறைப்படி தேயிலை உற்பத்தி
ஊட்டி, ஏப்.27 நீலகிரியில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, தேயிலை உற்பத்தி நடந்தது.
இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறைகள்
புதுக்கோட்டை, ஏப்.27 புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் இலை வண்ண அட்டை பயன்படுத்தி நெற்பயிரில் தழைச்சத்து மேலாண்மை பற்றி செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இணைஇயக்குநர் ஆய்வு
இனத்தூய்மை பண்ணை மற்றும் அங்ககப்பண்ணையில் இணை இயக்குநர் ஆய்வு நடத்தினார்.
விதை நிலக்கடலை தட்டுப்பாடு மானிய விலையில் வழங்க கோரிக்கை
விதை நிலக்கடலைக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீரவரத்து உயர்ந்துள்ளது.
முருங்கைக்காய் கிலோ ரூ.5க்கு விற்பனை
விருவீடு பகுதியில் முருங்கைக்காய் அதிக விளைச்சல் மற்றும் போக்குவரத்து சிரமங்களால் கிலோ ரூ.5க்கு விற்பதா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முந்திரி தொழிலகத்தில் வேளாண் மாணவிகள் பயிற்சி
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், காரமடை ஒன்றிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக, கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் கவுண்டம்பட்டி எனும் கிராமத்தில் மண் புழு உரம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயி அறிவழகன்.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம்
இவ்வுலகின் நிலையான உணவுப் பயிரான நெற்பயிரை சாகுபடி பயிராகக் கொண்ட சேலம் மாவட்டம், தென்னங்குடி பாளையத்தை சேர்ந்த விவசாயியின் வயலை அ.மோகன் கிருஷ்ணா சௌதிரி எனும் நானும், என் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டக் குழு நண்பர்கள் 9 பேரும் பார்வையிட்டோம்.