CATEGORIES
Kategoriler
நிலத்திலேயே வீணாகும் பழங்கள்
கள்ளக்குறிச்சி, மே 29 ஊரடங்கு காரணமாக பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, முலாம் பழங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் வீணாகி வருகின்றன.
சம்பா பருவத்திற்காக 384 டன் நெல் சுத்திகரிப்புப் பணி தீவிரம் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
ஈரோடு, மே 20 சம்பா பருவத்திற்காக 384 டன் நெல் சுத்திகரிப்புப் பணி தீவிரம் அடைந்துள்ளதாக, பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் பழங்கள் விலை உயர்வு
திருநெல்வேலி, மே 29 திருநெல்வேலிக்கு பழங்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.
15 கிலோ தக்காளி ரூ.80 விவசாயிகள் அதிர்ச்சி
15 கிலோ தக்காளி ரூ.80க்கு ஏலம் போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கிலும் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரம்
ஊட்டி, மே 28 கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கிராம்பு விலை அதிகரிப்பு
ஊட்டி, மே 28 குன்னூரில் கிராம்பு உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்து உள்ளது.
விவசாய இடுபொருட்கள் விற்பனைக்கு தடையில்லை
திருப்பூர், மே 28 ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.
மழையால் ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்
கோவை, மே 28 பருவமழை துவங்கியுள்ளதால், உரிய வழிமுறைகளை பின்பற்றி நீலநாக்கு நோய் தாக்குதலில் இருந்து ஆடுகளை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
நாக்பூர், மே 27 உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்து உள்ளனர்.
தோட்டக்கலை பொருட்கள் மீது கவனம் செலுத்தும் அபேடா
2வது காணொலி பொருட்காட்சி தொடக்கம்
வீணாகும் வாழைத்தார்கள் விவசாயிகள் கவலை
ஊரடங்கு காரணமாக, வாழைத்தார் அறுவடை செய்ய முடியாமல் வீணாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6,000 எக்டேரில் குறுவை சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6,000 எக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சராசரியை விட மழை அதிகம்
கோடை மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சராசரியை விட மழை அதிகம் பதிவாகியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இயல்பான அளவில் மழை பொழிந்துள்ளது.
குமரியில் 2 நாட்களாக கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அதிலும் யாஸ் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை கனமழை கொட்டியது. புதன்கிழமையும் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
தேயிலை விற்பனை ஒரு வாரத்தில் ரூ.5 கோடி சரிவு
குன்னூர் தேயிலை ஏலத்தில், ஒரே வாரத்தில், ரூ.5 கோடி வரை விலை சரிவடைந்தது.
மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கனமழையால் கடும் பாதிப்பு மேலும் 2 நாளுக்கு கனமழை நீடிக்கும்
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் புயல், கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கறிக்கோழி விலை கடும் சரிவு
திருப்பூர், மே 26 ஊரடங்கு காரணமாக, கறிக்கோழி கொள்முதல் விலை, ஒரே நாளில் ரூ.24 குறைந்ததால், பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.
ஊரடங்கால் முட்டைகோஸ் விவசாயிகள் பாதிப்பு
ஊட்டி, மே 26 கோத்தகிரி பகுதியில், தோட்டத்திலேயே முட்டைகோஸ்கள் அழுகியதால், விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.
தனியார் உரக்கடைகள் காலை 9 மணி வரை திறக்க அனுமதி
தஞ்சாவூர், மே 25 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள், விதை, பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அ. ஜஸ்டின் தெரிவித்து உள்ளார்.
முட்டை விலை 15 காசுகள் உயர்வு
நாமக்கல், மே 25 நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி சரிவடைந்து உள்ளதாலும், வெளிமாநிலங்களில் விற்பனை அதிகரிப்பாலும் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.5.05-ஆக திங்கள்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
கரோனா பொது முடக்கத்தால் கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு
திருப்பூர், மே 25 கரோனா பொது முடக்கத்தால், கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம்
சேலம், மே 25 சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய உணவுக்கழகம் சார்பில் இலவச தானியம்
கோவை, மே 25 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நலன் கருதி, உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் இலவசமாக வழங்குகிறது.
சொர்ணவாரி பருவத்தில் விவசாயிகள் ஆர்வம்
கடம்பத்தூர் ஒன்றியப் ஒன்றியப் பகுதிகளில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, சொர்ணவாரி பருவத்தில், சத்தரை, புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி, கூவம் உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் நெல் பயிரை ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர்.
சோளம் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற வேளாண் துறை ஆலோசனை
கோவை, மே 24 பொள்ளாச்சி விவசாயிகள் மானாவாரியாக சோளம் சாகுபடி செய்யும் போது, உயர் விளைச்சல் பெற வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
சிறு, குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்ய ஓர் அரிய வாய்ப்பு
மதுரை மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, தமிழ்நாடு டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு அடுத்த 60 நாட்களுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்க முன் வந்துள்ளது.
சின்ன வெங்காயம் அறுவடைப் பணிகள் தீவிரம் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரம், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட பிஏபி 3ம் மண்டல பாசன நிலங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். நீர் இருப்புக்கு ஏற்றவாறு காய்கறிகள், தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டது. அவ்வகையில் சின்ன வெங்காயம் சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
குன்னூரில் தேயிலைத்தூள் விலை சரிவு
ஊட்டி, மே 24 குன்னூரில் தேயிலைத்தூள் விலை கிலோவுக்கு ரூ.3 சரிவடைந்துள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம்
நாமக்கல், மே 22 நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.