CATEGORIES
فئات
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் பிப்.18-ம் தேதி விவசாயிகள் ரயில் மறியல்
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி வரும் 18ம் தேதி நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தயாராவதாக உள்துறை அமைச்சகம் பதில்
புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார்.
வீட்டு பெண்களையே சமாளிக்க முடியவில்லை ஜெகன் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
அமராவதி : ஜெகன்மோகன் ரெட்டியால் தனது வீட்டில் உள்ள பெண்களையே சமாளிக்க முடியவில்லை. இவர் எப்படி மாநில பிரச்சினையை சமாளிப்பார்? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சென்னையில் முக்கிய ஆலோசனை வாக்குப்பதிவை ஒரேகட்டமாக நடத்த வேண்டும்
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தல்
12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
சென்னை, தூத்துக்குடி உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறை முகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
பிப்ரவரி 17 முதல் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் முதல்வர் பிரச்சாரம்
முதல்வர் பழனிசாமி வரும் 17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரியில் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் புதிய கட்சி ஆந்திர முதல்வரின் தங்கை அறிவிப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தனது வீட்டுக்கு முன்பு நேற்று கூடிய ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்த முடிவு
மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
குலாம் நபி ஆசாத் இடத்தை நிரப்புவது கடினம் பிரியாவிடை நிகழ்ச்சியில் மோடி கண்ணீர் மல்க பாராட்டு
மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இடத்தை நிரப்புவது கடினம் என பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் மல்க பாராட்டு தெரிவித்தார்.
கரோனா தடுப்பூசியை தயக்கமின்றி போட்டுக் கொள்ளலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: கரோனா தடுப்பூசியால் இதுவரை சிறிய அளவில் கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்பதால் தயக்கமின்றி போட்டுக் கொள்ளலாம் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்பில்லை
புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1.48 லட்சமாக குறைந்தது
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 11,831 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,08,38,194 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,05,34,505 பேர் குணமடைந்துள்ளனர்.
திடீர் வெள்ளப்பெருக்கால் கடும் சேதம் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 39 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்
இதுவரை 26 உடல்கள் மீட்பு
மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்
விவசாய சங்க தலைவர்கள் அறிவிப்பு
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் எப்போதும் தொடரும் என உறுதி போராட்டத்தை கைவிட வேண்டும்
டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்பியதற்காக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலாவின் உறவினர்கள் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசியின் 6 சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டது
இன்று பணிகள் தொடங்கும் என சென்னை ஆட்சியர் அறிவிப்பு
சசிகலா இன்று சென்னை திரும்புகிறார்
அதிமுக அலுவலகம், ஜெ. நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக காத்திருக்கிறோம்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து
உத்தராகண்டில் பனிப்பாறை உடைந்து ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 10 பேர் சடலமாக மீட்பு
100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அச்சம் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு
குறு, சிறு தொழில்களுக்கு சலுகை இல்லை ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு தொழில்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காஜிபூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
• மோசமான சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு
இந்திய எல்லை தவறாக சித்தரிப்பு உலக சுகாதார அமைப்பு விளக்கம்
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வரைபடத்தில் இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரித்துள்ளதாக மத்திய அரசு அளித்த புகாரை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்கம் வெளியிட்டுள்ளதாக நேற்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்காரு அடிகளாருடன் சந்திப்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காரில் அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு - சசிகலா மீது டிஜிபியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை எதிர்த்து, டிஜிபி திரிபாதியிடம், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
விதிகளை மீறியதாக கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கியது ட்விட்டர்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான படத்தை ட்விட்டரில் வெளியிட்ட சர்வதேச பாப் பாடகி ரிஹானா, 'ஏன் இதுபற்றி யாரும் பேசுவதில்லை?' என்று பதிவிட்டிருந்தார்.
ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் ராஜஸ்தான் காங்கிரஸ் மாணவர் பிரிவு
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நன்கொடை வசூலித்து வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புகள் நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டின் 14-ம் தவணையை வழங்கியது மத்திய அரசு
ஜிஎஸ்டி காரணமாக மாநிலங்கள் சந்திக்கிற வரி வருவாய் இழப்பை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால், சிறப்பு சாளர முறையில் கடனாக பெற்று தவணை அடிப்படையில் (வாரம் ரூ.6 ஆயிரம் கோடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. மொத்தம் ரூ.1.10 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது.