CATEGORIES
فئات
ராமன் வழிபட்ட சிவாலயம்
மகான்கள் முக்தியடைந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அந்த இடத்தில் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து வழிபடும் வழக்கம் நிலவியது. அப்படியான முறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மணவூருக்கு கிழக்கே, செஞ்சிபானம்பாக்கத்துக்கு மேற்கேராமன் கோவில் சிவாலயம் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ரவீந்திரநாத் எம்.பி.
தேனி எம்பி ரவீந்திரநாத் தனது பிறந்த நாளை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த வாழ்த்து பெற்றார்.
நாட்டின் மிக இளம் வயது பெண் விமானி பெருமை பெற்றார் காஷ்மீரின் ஆயிஷா
நாட்டில் மிகவும் இளம் வயதில் விமானி ஆன பெண் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றுள்ளார்.
தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசிடம் இந்தியா கடும் கண்டனம்
• வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
அமைச்சர் துரைக்கண்ணு , பாடகர் எஸ்பிபி, மருத்துவர் வி.சாந்தாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்
மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்த நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
'மக்களுக்கு நல்லது செய்யும் யாருடனும் தேமுதிக கூட்டணி சேர வாய்ப்பு'
மக்களுக்கு நல்லது செய்யும் யாருடனும் தேமுதிக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
பாலம் கட்டுங்கள், சுவர் வேண்டாம் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்கிறோம்
சேலத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு
திருமணத்தில் பங்கேற்ற 17 பேருக்கு கரோனா
தஞ்சாவூரை அடுத்த நடுக்கடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட அதே ஊரைச் சேர்ந்த இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.
சிறந்த மாநிலமாகும் இலக்கை நோக்கி அரசு சிறப்பாக செயல்படுகிறது - தேசிய அளவில் விருதுகளை பெற்று தமிழகம் வெற்றி நடைபோடுகிறது
சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு
குமரியில் 4 ஆசிரியர்களுக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டம் செல்லங்கோணம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாட்டிலேயே முதல் முறையாக காஷ்மீரில் பனிக் குடில் உணவகம்
காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ள பனிக் குடில் உணவகம்.
டெல்லி கலவரம் தொடர்பாக வதந்தி - 6 பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கு
டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது.
கரோனா பாதித்த யுபிஎஸ்சி தேர்வர்கள் மனு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குடிமைப் பணித் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.
விருத்தாசலம் அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
சந்தன மர வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 70:30 விகிதாச்சாரத்தில் வனத்துறை, விவசாயிகளுக்கு சந்தன மரங்களை வளர்க்க அனுமதியளித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கல்
சென்னையில் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் வீல் சேர், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வருமான வரிவிதிப்பு வரம்பில் மாற்றமில்லை
• சம்பளதாரர்கள் ஏமாற்றம் தொடர்கிறது • 8 வழிச்சாலை திட்டத்துக்கு விரைவில் டெண்டர் • வீடு வாங்குவோர், முதியோருக்கு சலுகை
இந்தியாவின் தற்சார்பு பட்ஜெட்
• பிரதமர் மோடி பாராட்டு
அந்நிய முதலீடு உச்ச வரம்பு அதிகரிப்பால் காப்பீட்டு துறை பங்குகள் 12% உயர்வு
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 74 சதவீதமாக உயர்த்துவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் காரணமாக பங்குச்சந்தையில் காப்பீடுத் துறை சார்ந்த பங்குகள் 12 சதவீதம் வரை ஏற்றம் கண்டு வர்த்தகமாயின.
'புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவலை பரப்புகிறார் சரத் பவார்'
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம், "புதிய வேளாண் சட்டங்களானது குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி நடைமுறை ஆகியவற்றை ஒழித்துவிடும்" என பதிவிட்டிருந்தார்.
மம்தா மட்டுமே டிஎம்சி கட்சியில் இருப்பார் மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நேற்று பாஜகவில் சேர்ந்தார்.
செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட 5 பேரின் அடையாளம் தெரிந்தது
கடந்த 26-ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடைபெற்றபோது, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை திறக்கலாம் - கல்லூரிகள் பிப்.8 முதல் செயல்பட அனுமதி
பிப்.28 வரை கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் உத்தரவு
4 தலைநகரங்கள் அமைக்க வேண்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தல்
நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பிறந்த நாளையொட்டி வடக்கு கொல்கத்தா ஷ்யாம் பஜார் பகுதியிலிருந்து நகரின் சிவப்பு சாலையில் உள்ள நேதாஜி சிலை வரை முதல்வர் மம்தா தலைமையில் நேற்று பேரணி நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
முட்டை விலை 20 காசுகள் சரிவு கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் கண்டறியப்பட்டது. இதன் எதிரொலியாக கோழி இறைச்சி, முட்டை நுகர்வு குறையத் தொடங்கியது.
தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதம்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது கவலையளிக்கிறது: பாமக
பாமக தலைவர் ஜி. கே.மணி கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, பாமக, வன்னியர் சங்கம் சார்பில் 6-வது கட்டமாக, இன்று (29-ம் தேதி) 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மக்கள் திரள் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
பொன்னேரி அருகே வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் ஜோதி தரிசனம்
பொன்னேரி அருகே சின்னகாவனத்தில் உள்ள வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூசத்தை முன் னிட்டு நேற்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி டெல்லியின் சிங்கு பகுதி மக்கள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.