CATEGORIES
فئات
நடிகர் ரஜினியின் 'அண்ணாத்த' வரும் 14 முதல் மீண்டும் படப்பிடிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த பின்னர், வரும் டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சியின் பெயர், கொடி போன்றவற்றையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். தற்போது நடித்து வரும் 'அண்ணாத்த' படப்படிப்பையும் முடித்து கொடுக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
மார்கழியை வரவேற்போம்
மார்கழி மாதத்தின் சிறப்பை மனித குலத்தவர் மட்டும் போற்றி பாடவில்லை. ஆயர் குலத்தில் அவதரித்து உலகை ரட்சித்த கண்ணனே பகவத் கீதையில் தனது சிறப்பைப் பற்றி பார்த்தனிடம் சொல்லும்போது முப்பத்தைந்தாவது சுலோகத்தில் மாதங்களில் தான் மார்கழி (மாஸாநாம் மார்க சீர்ஷோஹம்) என்று குறிப்பிடுகிறார்.
ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் கருத்து சொல்கிறேன் : பிரேமலதா
சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.
'நிவர்' புயல் பாதிப்புகள் குறித்த 2 நாள் ஆய்வு நிறைவு - முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை
தமிழகத்துக்கு உரிய நிவாரணத்தை பரிந்துரைக்க வலியுறுத்தல்
சுற்றுச்சூழல், வனத்துறையின் முன்அனுமதி பெற்று சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை தொடர அனுமதி
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய தீர்ப்பு
ஆ.ராசா உருவப் பொம்மை எரிப்பு அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல்
ராமநாதபுரத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவின் உருவப் பொம்மையை அதிமுகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கற்கள், செருப்புகளை வீசி கடும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி மாநகரம்
7 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுவை பேரவையில் விரைவில் தீர்மானம்
விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் நேற்று காங்கிரஸ், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 30 நிமிடங்களில் கரோனா தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனை
ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் புயல் பாதிப்புகளை 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு
புதுச்சேரி, கடலூர், வேலூர், மாவட்டங் களில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் 3,762 பாசன ஏரிகள் நிரம்பின பொதுப்பணித் துறை தகவல்
வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல்களால் பெய்த கனமழையால் தமிழகத்தில் 3,762 பாசன ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
சாதிவாரி விவரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் நியமனம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது
நாடு முழுவதும் நேற்று 32,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,77,203 ஆக அதிகரித்துள்ளது. இதில் 91,39,901 பேர் குணமடைந்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 'கோயிலுக்கோர் கோமாதா' திட்டம் தொடக்கம்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கோயிலுக்கோர் கோமாதா திட்டத்தை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலில் நேற்று தொடங்கி வைத்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகில் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, வரும் 10-ம் தேதி பகல் 1 மணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அண்மையில் தெரிவித்திருந்தார்.
எம்இ , எம்டெக் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்பு பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்
எம்இ, எம்டெக் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது.
ஆக்ரா மெட்ரோ ரயில் பணிகள் தொடக்க விழா உரிய காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் திறன்மிக்கது பாஜக அரசு
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இந்திய எல்லைக்குள் வழித்தவறி வந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறுமிகளை திருப்பி அனுப்பியது ராணுவம்
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் வழித்தவறிவந்த 2 சிறுமிகளை இந்திய ராணுவத்தினர் அந்நாட்டு அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.
மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா
சமீப ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவருகிறது. இன்டர்நெட் யுகத்துக்கு முன்பு பெரிய அளவில் சீனா வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு போட்டியாக இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அமெரிக்காவை விடவும் வலுவான பொருளாதாரமாக வளரும் சாத்தியங்களுடன் சீனா இருந்து வருகிறது. உலக நாடுகளின் சூப்பர் பவராக நினைத்துக்கொள்ளும் அமெரிக்கா அதற்குப் போட்டியாக வளரும் சீனாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. இதன் எதிரொலிதான் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா எடுக்க காரணமாக இருக்கிறது.
வேலூர் சிறையில் முருகன் 14-வது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவர்கள் கண்காணிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7.90 லட்சத்தை கடந்துள்ளது. இளைஞர்கள் உட்பட 11,793 பேர் உயிரிழந்துள்ளனர்.
பி. ஆர். அம்பேத்கர் நினைவு நாளில் காங். முன்னாள் தலைவர் ராகுல் புகழாரம்
இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பியாக பி.ஆர். அம்பேத்கர் போற்றப்படுகிறார். நாட்டின் சுதந்திரத்துக்காகவும் தலித் சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கரோனா தொற்றில் இருந்து 91 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாடு முழுவதும் நேற்று 36,011 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது. இதில் 91,00,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு: அரசு பணிக்கு காத்திருக்கும் 63 லட்சம் பேர்
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு, தொழிற்கல்வி முடிப்பவர்கள் தங்கள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தப் பதிவை புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும்.
கரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த உத்தரவு
தமிழகத்தில் உள்ள 33 கரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்னியருக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி சென்னையில் பாமக 3-வது நாளாக போராட்டம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது - ஜனவரியில் கட்சி தொடக்கம்
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம். ரஜினி அறிவிப்பு
முகக்கவசம் அணியாதவருக்கு சமூக பணி உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைப்பு
முகக்கவசம் அணியாதவர்களை கரோனா சிகிச்சை மையங்களில் சமூகப் பணியில் ஈடுபடுத்தலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4.22 லட்சமாக குறைந்தது
நாடு முழுவதும் நேற்று 35,551 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95,34,964 ஆக உயர்ந்துள்ளது. இதில் 89,73,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 4,22,943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் முரண்பாடு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சில மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. அடுத்த சில மாதங்களில் அவை பயன்பாட்டுக்கு வரவுள்ளன.