CATEGORIES
فئات
உடல் நலக்குறைவால் காலமான அகமது படேல் இறுதி சடங்கில் ராகுல் பங்கேற்பு
உடல் நலக்குறைவால் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலில் உடல் குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 4 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் எளிமையாக நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் பவனி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது.
இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட 'ஒரே நாடு; 'ஒரே தேர்தல்' முறை அவசியம்
• அரசியலமைப்பு சாசன தின விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
300 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் ஞானவேல்ராஜாமீதான விசாரணைக்கு தடை
ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி நிதி நிறுவன முறைகேடு வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் ஒரேநாளில் 90 மில்லியன் கனஅடி உயர்வு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நேற்று ஒரே நாளில் 90 மில்லியன் கனஅடி நீர் வந்து சேர்ந்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க நிபந்தனைகள் நாளை முதல் தளர்வு
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து (எல்விபி) வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 27-ம் தேதி முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மழைநீர் புகுந்தது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தை சுற்றி தேங்கி நிற்கும் மழை வெள்ளம்.
அலைகளின்றி அமைதியுடன் காணப்படும் ராமேசுவரம் கடல்
அலைகள் சீற்றம் ஏதுமின்றி அமைதியாக குளம் போலக் காட்சியளிக்கும் பாம்பன் கடல் பகுதி.
முதல்வர் பழனிசாமி நடவடிக்கையால் தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு
லட்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 10 பேரும், தமிழக முதல்வரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் - புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கிறது 'நிவர்' புயல்
தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் 93.76% ஆக உயர்வு
நாடு முழுவதும் நேற்று 37,975 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 6 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று மீண்டும் 40,000-க்கு கீழ் குறைந்திருக்கிறது. இதுவரை 91,77,840 | பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86,04,955 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று 42,314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நரிக்கும் நரிக்கும் கல்யாணமாம்!
காட்டில் கோளோ என்ற ஆண் நரி இருந்தது. அது மிகவும் கெட்டிக்கார நரி. எப்போதும் சிங்கராஜாவுடன்தான் இருக்கும். அங்கேயே அறிவு நிறைந்த போளோ என்ற பெண் நரியும் இருந்தது. மற்ற பிராணிகளுக்கு உதவி செய்வது அதற்கு மிகவும் பிடிக்கும். கோளோவுக்கும் போளோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஏரிக்கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க கூடுவாஞ்சேரி, செம்பாக்கம், நன்மங்கலம் ஏரிகளில் 2 அடி நீர் குறைப்பு
பொதுப்பணித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-க்கு தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின்
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக திமுக தேர்தல் பிரச்சாரம் நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
22 அடியை தொட்ட பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்
காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்
அரியலூர், பெரம்பலூரில் நவ. 27-ல் முதல்வர் பழனிசாமி ஆய்வு
புயல், மழை எச்சரிக்கை காரணமாக அரியலூர், பெரம்பலூரில் வரும் 25-ம் தேதிக்கு பதில் 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நிவர்' தீவிர புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசுத் துறைகள் - 7 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் நிறுத்தம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. பயணத்தை தவிர்க்க மக்களுக்கு வேண்டுகோள். புயல் நாளை கரையை கடக்கும்
நிவர் புயல் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு
நிவர் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கவிஞர் சுரதாவின் 100-வது பிறந்த நாள் தமிழக அமைச்சர்கள் மரியாதை
உவமைக் கவிஞர் சுரதாவின் 100-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இன்று திருமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னையிலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் புறப்பட்டு காலை 10.30 மணியளவில் திருப்பதி விமான நிலையம் வந்தடைகிறார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் பேருக்கு சிகிச்சை
நாடு முழுவதும் நேற்று 44,059 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,39,865 ஆக உயர்ந்துள்ளது. இதில் 85,62,641 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,43,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,33,738 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட வாரிசு அரசியல் உள்ளது: திருநாவுக்கரசர்
திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: அரசு விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்தது சரியல்ல.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் 25-ம் தேதி ஆய்வு
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்கிறார்.
பிஹாரிலும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் மத்திய அமைச்சர் கிரிராஜ் வலியுறுத்தல்
பிஹாரிலும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.
கரோனா தொற்றில் இருந்து 85 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாடு முழுவதும் நேற்று 45,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,95,806 ஆக அதிகரித்துள்ளது. இதில் 85,21,617 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகின் 100 சிறந்த நகரங்கள் பட்டியலில் 62-வது இடத்தில் டெல்லி
உலகின் 100 நகரங்களுக்கான (2020 2021) தரவரிசைப் பட்டியலை கனடாவின் வான்கூவர் நகரைச் சேரந்த ரெஸோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.300 கோடி செலவில் வாயலூர் தடுப்புச்சுவரை தடுப்பணையாக மாற்ற திட்டம்
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக நடவடிக்கை
தமிழ் மொழி புறக்கணிப்புக்கு எதிராக வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அதை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்போம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.