CATEGORIES
فئات
மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநர்கள்
மத்திய - மாநில அரசுகள் இடையே வலுவான பாலமாக ஆளுநா்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
பருவமழைக்கு முன்பே சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்
பருவமழைக் காலத்துக்கு முன்பே, சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு விட்டார்.
பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகள் செல்லாது
போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் 2 புதிய சட்டப் பிரிவுகள் செல்லாது; அவை ரத்து செய்யப்படுகின்றன என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கைக் கடற் படையின் அத்துமீறல்களைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
அரசியல் சாசனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்
தமிழக மாணவர்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்துகொண்டால் தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவர்களுக்குப் புரியும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்
சென்னை அண்ணாசாலையின் அடையாளமாக உள்ள மேம்பாலத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உயர் கல்வி: அரசுப் பள்ளி மாணவர் வெளிநாட்டு பயணச் செலவு ஏற்பு
உயர்கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேர்தல் நிதிப் பத்திர திட்டம்: சிறப்புக் குழு விசாரணை இல்லை
தேர்தல் நிதிப் பத்திர திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்) ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இன்று குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு
குடியரசுத் தலைவா் திரௌபதி முண்மு தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடங்குகிறது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீவிரப்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொளத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.
எல்லை பாதுகாப்புக்கு உயர்தொழில்நுட்பம் - சீன அதிபர் ஷி ஜின்பிங்
சீன எல்லைப் பாதுகாப்பில் புதிய சவால்களை எதிா்கொள்ள உயா் தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஹமாஸ் ராணுவப் பிரிவு தலைவரும் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது டேயிஃப் தாங்கள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது.
துப்பாக்கி சுடுதலில் துளிர்த்த சாதனை
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3-ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதலிலேயே வெண்கலமாக வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-வியத்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் - இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பில் முடிவு
இந்தியா-வியாத்நாம் உத்திசாா் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் தில்லியில் நடைபெற்ற இருநாட்டு பிரதமா்கள் சந்திப்பில் இறுதி செய்யப்பட்டது.
பண்பாட்டைத் தேடும் 100 அயலகத் தமிழர்களின் பயணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் பொருள்கள் - சேலத்தில் தொடங்கியது
நியாயவிலைக்கடை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக சேலம், சீரங்கப்பாளையம் நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை தொடங்கியது.
உயிரிழந்த மீனவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை தேவை
இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உயர் கல்வியின் பொற்கால ஆட்சி - முதல்வா மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உயர் கல்வியின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்தியாவுக்கு 3-ஆவது வெண்கலம்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் வென்றார்
பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல் வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.
இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
இலங்கைக் கடற்படை ரோந்துப் படகு மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர்
இலங்கைக் கடற்படை படகு மோதி, தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படை படகு மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு
ஒருவர் மாயம்; இருவர் மீட்பு
வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள்
உயிரிழப்பு 300-ஐ நெருங்கியது
பிரிட்டன் கத்திக்குத்து தாக்குதல்: மசூதியைக் குறிவைத்து கலவரம்
பிரிட்டனில் சிறுவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட சரமாரி கத்திக் குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர வலதுசாரி அமைப்பினா் மசூதியைக் குறிவைத்து கலவரத்தில் ஈடுபட்டனா்.
ஹமாஸ் தலைவர் ஈரானில் படுகொலை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே (62) ஈரானில் படுகொலை செய்யப்பட்டாா்.
இந்தியா முன்னேறுகிறது
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், 5-ஆவது நாளான புதன்கிழமை துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சந்தித்தது.
மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு : மேலும் 7 மாநில ஆளுநர்கள் பதவியேற்பு
மகாராஷ்டிரத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றாா். தெலங்கானா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் உள்பட 7 மாநிலங்களின் புதிய ஆளுநா்களும் புதன்கிழமை பதவியேற்றனா்.
வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தது
கேரள மாநிலம் வயநாட்டில் மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : பிரதமரிடம் கர்நாடக துணை முதல்வர் கோரிக்கை
மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
‘தமிழ்ப் புதல்வன்' திட்டம் கோவையில் ஆக. 9-இல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை கோவையில் ஆக. 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.