நானோ 'எல்லா தடங்கல்களையும் ஒருபடியாகக் கடந்து பயணத்தைத் தொடங்கிவிட்டேன், அப்பாடா!' என பெருமூச்சு விட்டேன். பக்கத்திலிருந்த என் எட்டு வயது மகனின் நெற்றியில் முத்தமிட்டு. “குகன் குஞ்சு, நாங்கள் நாங்கள் இன்னும் பத்து மணித்தியாலத்தில் பாங்கொக் போய் இறங்கிவிடுவோம்.' " "அம்மா அப்போது இரவு ஏழரை மணியாகிவிடுமே?" எனக் கேட்டான்.
"ஓமடா ஆனால் நீ மறந்திட்டியா, சிட்னியில் சூரியன் உதித்து மூன்று மணி நேரத்திற்கு பின்தான் பாங்கொக்கில் சூரியன் உதிக்கும் ஆகையால் மாலை நாலரை மணியாகத்தான் இருக்கும்." என்றேன்.
விமானம் மேலே எழுந்து பறக்கவும் குகன் ஜன்னலின் ஊடாக வெளியே தெரிந்த காட்சிகளைப் இரசித்தபடி அமர்ந்திருந்தான். விமானப் பணிபெண் குகனுக்கு கலரிங் புத்தகமும் பென்சில்களும் கொடுத்தாள். அவன் ஆவலோடு கலர் பண்ணத் தொடங்கவும் என் இருக்கையைச் சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.
என் கடந்த கால வாழ்க்கை மனக்கண் முன் திரைப்படமாக ஓடியது.பன்னிரண்டு வயதில் என் பெற்றோருடன் 1988 ஆம் ஆண்டில் போரினால் பாதிக்கப்பட்டுச் சிதைந்த எமது தாய் நாடான சிறிலங்காவை விட்டு சகல வாய்ப்புகளும் நிறைந்த சிட்னி நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம். இங்கு பள்ளிக்கூடம் போகும் போது மேலே பறக்கும் வானுர்திகளிலிருந்து ஷெல் அடிக்கிறார்கள் என உயிருக்குப் பயந்து பங்கர்களுக்குள் ஓடத் தேவையில்லை. நிம்மதியாகப் படிப்பிலே கவனம் செலுத்தக் கூடியதாவிருந்தது. பள்ளிக்கூடத்தின் இறுதி ஆண்டு பரீட்சையில் உயர்ந்த மார்க்கோடு தேறியதால் எனக்கு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகமும் நிதியும் படிக்க இடம் கிடைத்தது. நான்கு வருட முடிவில் தனிச்சிறப்புடன் தேறியதால் எனக்கு வெளிவிவகாரமும் வர்த்தகமும் துறை இலாகாவில் வேலையும் கிடைத்தது.
அங்கு வேலை செய்யும் போது அந்த இலாகாவின் பரிந்துரையினால் பகுதிநேரமாகச் சர்வகலாசாலையில் படித்து சர்வதேச உறவில் முதுகலைப் பட்டமும் பெற்று அதே இலாகாவில் பதவி உயர்வும் கிடைத்தது.
هذه القصة مأخوذة من طبعة February 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.