CATEGORIES
فئات
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று (28.12.2020 காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மெரினா கடற்கரையில் அலைகளை ரசிக்க மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தனிப் பாதை
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
15-18 வயதினருக்கான கரோனா தடுப்பூசி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்
இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த "தேவைப்பட்டால் ஊரடங்கு விதிக்கலாம்” - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போது ஆணையம் பரிந்துரைகள் அளிப்பதா?
சீதாராம் யெச்சூரி கண்டனம்
குழந்தைகள், பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு வாகனம்
குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 51 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி ஒருவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அந்த நோயாளிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் இருவர் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்தப் பயனும் இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு
பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை. அவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கருநாடகாவில் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு
கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கருநாடக அரசு முடிவு செய்துள்ளது.
15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை கிண்டி, மடுவின்கரையில் நேற்று (26.12.2021) நடந்த கரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுக்குப் பிறகு. அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தந்தைபெரியார் நினைவு நாள் - நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியார் நினைவு நாளில் பெரியார் நினைவிடத்தில் அணி அணியாக அனைத்துக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார் பெரியார் சமூகவலைதளங்களில் அவதூறுப் பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் - நீதிமன்றம் அதற்கு எதிராக செயல்படுவதா?
திராவிடர் கழகம் முறையாக இதனை எதிர்கொள்ளும்! - செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
தந்தை பெரியார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவு நாள் (24.12.2021) தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம்
அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது
திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும் வீரமணி அறிவிப்பு
பெரியார் மறைந்துவிட்டாலும், அவர் வழியில் திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும் என்று, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி அறிவித்தார்.
பெரியாருக்குக் கிடைத்ததைப் போன்ற உயர்ந்த மரியாதை வேறு எவருக்கும் கிடைத்ததே இல்லை
பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. சிலை வழிபாட்டு மட எதிர்ப்பாளர். காங்கிரசின் முதல் எதிரி திராவிட அரசியலில் எப்பொழுதும் பேசப்படுபவராக இருந்தார். அனைத்துப் பொது மக்களிடமும் நன்மதிப்புப் பெற்றிருந்தார். பல்வேறுபட்ட அரசியல் கருத்துடையவர்களும் அவரைப் பாராட்டினார்கள்.
கரோனா வைரஸ் குறித்த கூடுதல் தரவுகள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை
கரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும் என சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பு; அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு
கரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
பிரியங்கா காந்தியின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு: ஒன்றிய அரசு விசாரணை
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பதாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் ஒன்றிய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி போடவில்லையா? ஊதியம் கிடையாது: பஞ்சாப் அரசு உத்தரவு
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
விவாதத்தையே ஏற்காத நாடாளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பாம்!
விவாதம் எதையுமே ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கி அவையை நடத்தும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு சாதனம் அய்சிஎம்ஆர் வடிவமைப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ( அய்சிஎம்ஆர் ) புதிதாக பரவிவரும் ஒமைக்ரான் வைரஸை கண்டுபிடிக்கும் மருத்துவ சாதனத்தை வடிவமைத்துள்ளது. இத்தகைய மருத்துவ உபகரணத்தை வணிக ரீதியில் உற்பத்தி செய்வதற்கு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
19 மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (21.12.2021) வெளியிட்டார்.
சென்னை, கோவையை அடுத்து மதுரையில் 'எலும்பு வங்கி' திறப்பு
வாகன விபத்துகளில் கை, கால்களில் முறிவு ஏற்படுவோருக்கும், எலும்பு புற்றுநோய் மற்றும் பல்வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளை மாற்றுவதற்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த தமிழ்நாடு அரசின் 'இன்னுயிர் காப்போம் திட்டம்- நம்மைக் காக்கும் 48'
ரூ.40 லட்சத்து 93 ஆயிரத்து 800 மதிப்பில் உடனடி சிகிச்சை அளிப்பு: 456 பேர் பயன்பெற்றனர்
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 40 லட்சம் பேர் பயன்
தமிழ்நாட்டில் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 40 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்தத் தயங்குவது ஏன்? ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்த ஒன்றிய அரசு தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்கவில்லை - வைகோ குற்றச்சாட்டு
பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கின்றது. அவர்களுடைய 6 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துகொண்டு போயிருக்கின்றனர். 1980-களில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சுட்டு கொன்றுவிட்டது.
சக்தி வாய்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு ஆளுநர் புகழாரம் .
சக்தி வாய்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், அவரது சாதனை என்பது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால்தான் சாத்தியமானது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற கடவுச்சீட்டு அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.