CATEGORIES
فئات
அஜித் குமாருடன் என்ன தகராறு?
சூர்யா நடித்த 'காக்க காக்க', 'கஜினி', எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூ' போன்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அஜித் குமார் தவற விட்டார்.
கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஒரு சேவல் விலை 77 லட்சம்
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டியில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி 10வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. கண்காட்சியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் செவலை, மயில் சேவல், நூலான் கிரி, கொக்கு வெள்ளை, கருங்கீரி உட்பட பல்வேறு வகையான 350க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
சினிமா படப்பிடிப்பிற்கு வந்த கங்கை அமரனுக்கு உடல்நலம் பாதிப்பு
சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்
வெளிநபர்கள் வாக்கிங் செல்ல தடைவிதிப்பு உணவு டெலிவரி ஊழியர்கள் உள்ளே வரக்கூடாது
விடுமுறை தினத்தையொட்டி புத்தகக் காட்சியில் அலைமோதிய வாசகர்கள், பொதுமக்கள் கூட்டம்
புத்தகக் காட்சியில், விடுமுறை தினத்தையொட்டி நேற்று வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருத்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை மாரத்தான் ஓட்டத்தில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி வீரர்கள் சாதனை
சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) பயிற்சி மேற்கொண்டு வரும் இளம் அதிகாரிகள் பலர் பங்கேற்று சாதனைபுரிந்துள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025ல் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்?
டிஎன்பிஎஸ்சி மூலம் எவ்வளவு பேர் தேர்ந்தெடுக்கப்படஉள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் 4 பொங்கல் சிறப்பு ரயில்களிலும் 5 நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 பொங்கல் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான (2025) முதல் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய் பரிசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது எனவும் பெருமிதம்
சென்னை டூ கொச்சி பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சென்னையில் இருந்து 89 பேருடன் கொச்சி செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் வானில் பறக்காமல், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பிரிவில் பணியாற்றுபவர் துஷார் சிங் பிஷ்த் (23).
போபால் விஷவாயு கசிவு கழிவுகளை எரிக்கும் மபி ஆலை மீது கல்வீசி தாக்குதல்
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போபாலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 5479 பேர் உயிரிழந்தனர்.
டைரக்டர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் பட கதாநாயகி மருத்துவமனையில் அட்மிட்?
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர்.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் இயக்கம்
இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் மரணம்
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் மும்பையில் நேற்று காலமானார்.
மணிப்பூரில் நடந்த திடீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்பி படுகாயம்
மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்பி மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
சந்தை மதிப்பை குறைத்து காட்டி சொத்து வாங்கிய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி சொத்து குவித்த விவகாரம் மீது விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2012 முதல் 2014 வரையிலும், தேனி மாவட்டத்தில் 2014 முதல் 2016 வரையிலும் கலெக்டராக பணியாற்றியவர் வெங்கடாச்சலம்.
3 வேளாண் சட்டங்களை விட மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை, வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு வருவாய் 33 சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு மூலம் கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்கேஜி மாணவி பலியான விவகாரம் பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 3 பெண்கள் அதிரடி கைது
பள்ளியில் எல்கேஜி மாணவி பலியான விவகாரத்தில் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வகுப்பாசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒப்பந்தாரருக்கு பில் கிளீயர் பண்ண லஞ்சம் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை
ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 65 கிடா வெட்டி அறுசுவை விருந்து
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டியில் பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலில் விவசாயம் செழிக்கவும், உலக நலன் வேண்டியும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நேற்று நடைபெற்றது.
நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக உறைபனி தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், கடும் குளிர் நிலவி வருவதால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு அண்ணாமலை மீது கமிஷனர் ஆபீசில் புகார்
சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பியூஸ் மனுஷ், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்ஐ சீருடையை இழுத்து கொலை மிரட்டல்
ராமநாதபுரத்தில் பாஜ ஊர்வலத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்ஐயின் சீருடையை இழுத்து கீழே தள்ளியதோடு, கொலை மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகி கைதானார்.
சாத்தூர் அருகே பயங்கரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்.