CATEGORIES
Kategorien
கைத்தறி துணி விற்பனை கண்காட்சி
கும்பகோணம் தனியார்மஹாலில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு திமுக நெசவாளர் அணி கிழக்கு மண்டலம் நடத்திய கைத்தறிதுணி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பட்டாசு கடைகளுக்கு 12ந் தேதி வரை அனுமதி
ஆரணி நகராட்சி பகுதியில் இயங்கும் பட்டாசு கடைகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இடம் நெருக்கடி அதிகளவில் காணப்படுகிறது.
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நீதிபதி தாவுதம்மாள் தொடங்கி வைத்தார்
ஆரணியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தாவுத்தம்மாள் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் போதைப் பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.
நெல்லை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த 48 கவுன்சிலர்கள்
நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 கவுன்சிலர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
முன்பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது
தமிழக ஆளுநர் ரவி வெளியேற்றப்பட வேண்டியவர் - கேஎஸ் அழகிரி பேச்சு
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்கமிட்டி சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.
காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலையை மூட கவர்னரிடம் வைத்திலிங்கம் எம்.பி மனு
புதுச்சேரி கவர்னர் தமிழிசைசௌந்தர்ராஜனை, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
கேஸ் சிலிண்டர் ஆய்வுக்கு ரூ.237 கட்டவேண்டுமா? கலெக்டரிடம் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு புகார்
புதுச்சேரி நுகர்வோர்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரிலசந்தித்து ஓர் கோரிக்கை மனு வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள்களம் நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி முன்னிலையில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
தீ விபத்து நிவாரணம் வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சி.மெய்யூர் கிராமத்தைசேர்ந்த முருகானந்தம், சந்திரா ஆகியோரின் இரண்டு கூரை வீடுகள் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
ராமேசுவரம் மீனவர்கள் எல்லை கடப்பதை தடுக்க கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தம்
ராமேசுவரம், நவ.7ராமநாதபுரம் மாவட்டத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.
கமல்ஹாசனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சத்தீஸ்கர், மிசோரத்தில் - விறுவிறுப்பாக தொடங்கியது வாக்குப்பதிவு
சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தில்லியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் என் மண் என் தேசம் தில்லி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாபநாசம் திருப்பாலைத்துறையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் குடியிருப்பவர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகசாலை அமைக்கும் பணி ரூ.75 கோடி மதிப்பில் நடை பெற்று வருகிறது. அதன்படி பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை வரை 11 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது
ஏழை, எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கல்
தமிழ்நாடு பிராமண சங்கத்தின் (பதிவு) தஞ்சை மாவட்ட அமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று ஏழை, எளிய குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன
ஊதிய உயர்வு கோரி ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் 16ந் தேதி பேரணி நடத்த முடிவு
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்கள்
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர்த்திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு உள்ளனர்.
மரக்கன்றுகள் நடும் விழா
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் கீழசித்திரை வீதி மீனாட்சி பூங்காவில் மரக்கன்றுகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்
புதுச்சேரியில் 'மக்கள் தலைவர்' என அழைக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார்
புதுவை மாநில அரசியலில் மூத்ததலைவராக திகழ்ந்த முன்னாள் எம்.பி., கண்ணன், நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மசோதாக்களை ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட்
பஞ்சாப் மாநிலத்தில் 7 மசோதாக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் எனக்கூறி அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.
எந்த சலசலப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் பயப்படும் இயக்கம் தி.மு.க. அல்ல
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி. மு.க. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நேற்று நடந்தது.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி மின்னணு கையெழுத்து இயக்கம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க -கோரி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மின்னணு கையெழுத்து இயக்கத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான, திட்டக்குழு உறுப்பினர் பேரங்கியூர் பி.வி.ஆர்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
காரைக்காலில் சாலை, வடிகால் வசதியை சரி செய்யகோரி நாற்று நடும் போராட்டம்
காரைக்காலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர் செய்யாத சாலை மற்றும் வடிகால் வசதியை உடனே சரி செய்ய வலியுறுத்தி வேட்டைக்காரத்தெரு பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு யாகசாலை பூஜை, மகாதீபாரதனை நடைபெற்றது.
மழைக்கால பிரச்னைகளை தவிர்க்க குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்
நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கனமழை நீடிக்கும் 19 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்”
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரிகளில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.