CATEGORIES
Kategorien
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சிக்கு நியமன இடங்கள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு (பிடிஐ) நியமன இடங்களைப் பெறும் தகுதி உள்ளதாக அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இது, இம்ரானுக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி|
வாஷிங்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசும்போது குளறுபடிகளைச் செய்த நிலையிலும், அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை
இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா.
வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் இந்தியா, சிங்கப்பூர் : அதிபர் தர்மன் சண்முகரத்னம்
வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் நிலையில் இந்தியாவும் சிங்கப்பூரும் உள்ளதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது: ராகுல் காந்தி
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக்கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.
'கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம்’
கோயில் திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவதற்கு மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி 'பிம்ஸ்டெக்'
சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புக்கான இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை : முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு : திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசா் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வி
நேபாள நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தோல்வியடைந்தார்.
கள்ளச்சாராய குற்றங்களுக்கு தண்டனை உயர்வு: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, ஜூலை 12: கள்ளச்சாராயத்தால் மரணத்தை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் : சிபிஐ வழக்கில் சிறைவாசம் தொடர்கிறது
தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்புடைய அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஆன அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாள்
மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு விருப்பு, வெறுப்பின்றி அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாகச் செயல்பட வேண்டும்; பாரபட்சம் காட்டக்கூடாது என்று தருமபுரியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய நபர் கைது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள்கள் பறிமுதல்
சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லவிருந்தவை
தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி காவிரி நீர்
ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் : கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் குழு வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
தமிழில் ஏஐ தொழில்நுட்பம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) உருவாக்குவதன் மூலம் தமிழா்களுக்கு அது பெரிதளவில் உதவியாக இருக்கும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பி.டி.ஆா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட் தொடா்பாக பொருளாதார நிபுணா்களுடன் தில்லி நீதி ஆயோக் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டையில் போலீஸார் சுட்டு ரௌடி உயிரிழப்பு
திருச்சியைச் சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா்.
பிரிட்டன்: பகவத் கீதை சாட்சியாக பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்
பிரிட்டனில் நாடாளுமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு பதவியேற்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் ஓம் பிர்லா
‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஒ) போன்ற உலகளாவிய நிா்வாக கட்டமைப்புகளின் ஜனநாயகமயமாக்கலுக்கு சீா்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
புதிய இந்தியாவுக்கு ஆக்கபூர்வ செயல்பாடுகள் தேவை
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஹரியாணா பேரவைத் தேர்தல்: ஐஎன்எல்டி- பகுஜன் சமாஜ் கூட்டணி
முதல்வர் வேட்பாளர் அபய் சௌதாலா
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னையை முழுவீச்சில் எழுப்புவோம்: ராகுல்
நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னையை காங்கிரஸும், ‘இந்தியா’ கூட்டணியும் முழுவீச்சில் எழுப்பும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் புதிய உத்வேகம்: இந்தியா அழைப்பு
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பின் புதிய உத்வேகத்துக்கும் புதிய அா்ப்பணிப்புக்கும் இந்தியா வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.