CATEGORIES
Kategorien
முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்
நாட்டில் மதவன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% வரை உயரும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
‘என்இபி 2020’ திட்டமும் ஆலோசனைகளும் தொடரும்: ஆ.ராசா எம்.பி.க்கு அமைச்சர் ஜெயந்த் சௌதரி பதில்
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) - 2020 மறுஆய்வு செய்யப்படுமா? என்று மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு, அத்திட்டமும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌதரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடிக்காக 'சபர்மதி ரிபோர்ட்' சிறப்புக் காட்சி
புது தில்லி, டிச. 2: நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால யோகி அரங்கத்தில் திங்கள்கிழமை மாலை திரையிடப்பட்ட 'சபர்மதி ரிபோர்ட்' திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார்.
பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை
நாகபுரி, டிச. 2: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தி அடையாதவர்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மத்திய அரசைக் கண்டித்து டிச.10-இல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: டி.ராஜா
மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து டிச.10-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் டி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாஞ்சோலை மக்கள் வெளியேற்ற புகார்: நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி உத்தரவு
புது தில்லி, டிச.2: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்-சிங்கம்பட்டி வனப் பகுதி மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதாகக் கூறப்படும் புகாரில், அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் இடையூறு இல்லாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
புது தில்லி, டிச. 2: அதானி விவகாரம் மற்றும் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதம் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாளை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வாகிறார்
புது தில்லி, டிச. 2: மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை (டிச. 4) நடைபெறுகிறது. இதில் இப்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவர்) தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இரு நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீர்மானம்
ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவியேற்றது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, டிச. 2: போக்குவரத்துத் துறையில் வேலைக்குப் பணம் பெற்ற முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவி ஏற்றது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!
தரமான கல்வி மூலம்தான் அறிவு வளரும். அறிவு, கூரிய சிந்தனைக்கு வழிவகுக்கும். கூரிய சிந்தனை ஆழ்மனதில் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர உதவும். படைப்பாற்றல் மூலம் அதனைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் உதயமாகும். புதிய தொழில்கள் செழிக்கும். இந்தச் சுழற்சிக்கு அடிப்படை, தரமான கல்வி.
மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கைச் சிறகுகள்!
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இடதுகால் போலியோவினால் பாதிக்கப்பட்டு வெறும் இரண்டு கிலோ எடையுடன் பிறந்தது.
வானிலை மைய முன்னெச்சரிக்கைகளை அரசு மதிக்காததால் வெள்ள பாதிப்பு
மழை பாதிப்பு, வானிலை ஆய்வு மையம் தந்த முன்னெச்சரிக்கைகளை அரசு மதித்து தேவையான நடவடிக்கை எடுக்காததால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்க நேர்ந்தது என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை: தண்டனையை நிறுத்திவைத்தது நீதிமன்றம்
சென்னை, டிச.2: பெரியார் ஈ.வெ.ரா. சிலை குறித்து சர்ச்சை பதிவு மற்றும் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு தொடர்பான வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச மாதிரித் தேர்வு பயிற்சிகள்
சென்னை, டிச.2: ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச மாதிரித் தேர்வு டிச.7,8,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பழங்குடியினரின் கலை-கலாசாரத்தை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை
பழங்குடியின மக்களின் கலை மற்றும் கலாசாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
2026 பேரவைத் தேர்தல் வாழ்வா, சாவா போராட்டம்
எதிர்வரும் 2026 பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா, சாவா போராட்டம் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
போலி சான்றிதழ்: 46 பேர் மீது சட்ட நடவடிக்கை
சென்னை, டிச.2: முதுநிலை மருத்துவப் படிப்புக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 46 பேர் போலி தூதரக சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மீது மருத்துவக் கல்வி இயக்குநரகம் சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை, டிச. 2: ஊத்தங்கரையில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ரயில் பாலத்தை மூழ்கடித்தது.
மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை, டிச.2: சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நாளை தொடக்கம்
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் டிச.4-இல் தொடங்கி டிச.6 வரை நடைபெறுகிறது என மாநாட்டுக் குழுவின் தலைவர் சி.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.
எண்ம பரிவர்த்தனையில் பயணச்சீட்டு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விருது
எண்ம பரிவர்த்தனையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.
மாநகராட்சி பூங்காக்கள் மீண்டும் திறப்பு
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'ஃபென்ஜால்' புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் சனிக்கிழமை மூடப்பட்டன.
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வட சென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு
சென்னை, டிச.2: வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வரின் கணினித் தமிழ் விருது: டிச. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி, டிச.2: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
புயல் சேதம்: ரூ.2,000 கோடி தேவை
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
2,163 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்