Versuchen GOLD - Frei
கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
Malai Murasu
|April 02, 2025
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!
-

தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்ட கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்றும், அதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அத்துடன் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தது.
ஆனால் மாநில அரசுக்கு தெரியாமலேயே மத்திய அரசு இந்த தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி வலைகளை உலர்த்த அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது நடைமுறையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கையில் இனக்கலவரம் வெடித்த சமயத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பக்கமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழக மீனவர்களும் இறந்தனர்.
ஆகவே கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று தமிழகத்தில் குரல் எழும்பத் தொடங்கியது. இதுதொடர்பாக சட்டசபையிலும் ஏற்கனவே பலமுறை தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு 4-ம் பக்கம் பார்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின விவரம் வருமாறு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர்பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
Diese Geschichte stammt aus der April 02, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்!
விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
நலம் காக்கும் ஸ்டாலின்'...
2 ஆம் நாளன்று \"நலம் காக்கும் ஸ்டாலின்\" மருத் துவமுகாம்களை, சென்னை செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
2 mins
July 31, 2025
Malai Murasu
சிங்கப்பூரில் இந்தியர் அத்துமீறல்: 11 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் 11 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் செல்வசேகரன் (வயது 58), அங்கு மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை!
சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் ( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 mins
July 31, 2025

Malai Murasu
ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்: தேசிய சிந்தனையுள்ள இளைஞர்களை காங்கிரசில் இணைப்பதே தலையாய பணி!
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆர்.அக்ஷய குமார் அறிக்கை!!
1 min
July 31, 2025

Malai Murasu
வண்ணாரப்பேட்டையில் பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது !
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
July 31, 2025

Malai Murasu
பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!
பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!
1 min
July 31, 2025

Malai Murasu
செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு!
மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!
1 min
July 31, 2025

Malai Murasu
ஆனைக் கொலை செய்தப்பட்ட கவின் பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்!
போலீசில் ஐ.டி. பெண் ஊழியர் கதறல்!!
1 min
July 31, 2025