Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!

Malai Murasu

|

April 02, 2025

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!

தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்ட கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்றும், அதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அத்துடன் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தது.

ஆனால் மாநில அரசுக்கு தெரியாமலேயே மத்திய அரசு இந்த தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி வலைகளை உலர்த்த அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டது.

ஆனால் இது நடைமுறையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கையில் இனக்கலவரம் வெடித்த சமயத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பக்கமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழக மீனவர்களும் இறந்தனர்.

ஆகவே கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று தமிழகத்தில் குரல் எழும்பத் தொடங்கியது. இதுதொடர்பாக சட்டசபையிலும் ஏற்கனவே பலமுறை தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு 4-ம் பக்கம் பார்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின விவரம் வருமாறு:

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர்பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

Malai Murasu

Cette histoire est tirée de l'édition April 02, 2025 de Malai Murasu.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Malai Murasu

Malai Murasu Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!

சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

time to read

2 mins

July 27, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!

மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!

டிரம்ப் அறிவிப்பு!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

July 27, 2025