Try GOLD - Free
விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.
Malai Murasu
|March 19, 2025
அவருடன் மேலும் 3 வீரர்களும் வந்தனர்; அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தகவல்!!
-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஸ்டார்லைனர் விண்கலம் பழுதாகி சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலம் மூலம் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடல் பகுதியில் சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் நீண்ட காலம் விண்வெளியில் வசித்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ள நாசா, அடுத்த சில மாதங்கள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் புட்ச் வில்மோர் (வயது 61) இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஜூன் 7ஆம் தேதி பூமியில் இருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
அங்கு ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப வேண்டிய சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளியிலேயே சிக்கிக் கொண்டனர். விண்கலத்தில் லியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உண்டானது. இதனால் 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகும் போயிங் நிறுவனத்தால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 9 மாத காலமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா ஏற்பாடுகளை செய்தது. அதற்கு முன்பாக சிலமுறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தடைபட்டு தாமதமானது.
This story is from the March 19, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025