CATEGORIES
Categorías
தாய் இறந்த மறுநாளே பணிக்கு வந்த தூய்மைப் பணியாளர்
தமிழக முதல்வர் பாராட்டு
கோயில்கள் தொடர்பான பேச்சில் சர்ச்சை நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம்
கணவர் சூர்யா அறிவிப்பு
கரோனா வைரஸால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை
தயார் நிலையில் விமானங்கள், கடற்படை கப்பல்கள்
சுந்தர்பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.2,144 கோடி
ஆல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர் வருமானமாக வழங்கியுள்ளது. இந்திய ரூபாயில் இது2,144 கோடி ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நிர்வாகிகளில் ஒருவராக சுந்தர்பிச்சை உள்ளார்.
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப்.28 வரை டைட்டன் ‘நெபுலா தங்க வாட்ச்களுக்கு 20% வரை தள்ளுபடி
டைட்டன் நிறுவனம் ‘நெபுலா' என்ற பெயரில் 18 காரட் தங்கத்திலான கைக்கடிகாரங்களை வடிவமைத்து வருகிறது. ரூ.28 ஆயிரம் முதல் இது கிடைக்கிறது. தங்கத்தால் ஆனவை, ரத்தினக் கற்கள் பதித்தவை என பல வகைகளில் இது கிடைக்கிறது.
ரேபிட் பரிசோதனை கருவிகளை திருப்பி அனுப்புங்கள்
மாநிலங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம்
ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு குடும்பத்தினருடன் நடந்தே புறப்பட்ட கூலித் தொழிலாளி
பெரம்பலூர்: மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டம் மஹால்புரி பகுதியைச் சேர்ந்தவர் ஜாதவ் உத்தவ் சகாரம்(67), கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என 10 பேருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக திருச்சி வந்தார்.
ஊரடங்கிலும் தொடரும் 'கரோனா கொண்டாட்டம்'
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கரோனா கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பலர் சமூக விலகலை கடைபிடிக்காமல் அசைவ விருந்து நடத்தி வரு கின்றனர்.
இது 20:20 செஸ்!
விஸ்வநாதன் ஆனந்த், கோனேரு ஹம்பி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா,பி. அதிபன், டி.ஹரிகா ஆகியோர் செஸ்டாட்காம் இணையதளத்தின் வழியாக ஒரே வேளையில் பலருடன் செஸ் விளையாடி, கரோனா பேரிடருக்காக பிரதமர் நிவாரண நிதிக்குரூ.4.5லட்சம் தொகையைத்திரட்டித் தந்துள்ளனர்.
ஜனவரி மாதம் சுற்றுலா வந்த போது இந்தியாவில் தவிக்கும் சீன இளம்பெண்
அடைக்கலம் கொடுத்த தொண்டு நிறுவனம்
3-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கான கிடங்கு வாடகை, சந்தை கட்டணம் விலக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் பல டன் நெல் நனைந்து சேதம்
விரைவாக கொள்முதல் செய்ய கோரிக்கை
சென்னையில் சூறைக்காற்றுடன் திடீர் மழை
பல இடங்களில் மின் தடை மரங்கள் வேரோடு சாய்ந்தன
பரிசோதனைகளை அதிகரித்தால் மட்டுமே கரோனா அச்சுறுத்தலை வெல்ல முடியும்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் 5 மாநகராட்சிகளில் வீடுகளில் முடங்கிய மக்கள்
அனைத்து கடைகளும் மூடல், சாலைகள் வெறிச்சோடின்
கரோனா நோயாளிகளுக்கு உதவ ரெனால்ட் நிஸ்ஸான் உதவியுடன் இந்துஸ்தான் பல்கலை. உருவாக்கிய 'செவிலி' ரோபோ
தமிழக அரசின் கரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழ கத்தின் (HITS) ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (ANRO), செவிலி' என்ற பெயரிலான சேவை ரோபோவை வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
போதிய விலை கிடைக்காததால் விளாத்திகுளம் பகுதியில் பருத்தி செடிகள் அழிப்பு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரம் வரை விலை போனது.
மதுரை, கன்னியாகுமரியில் பலத்த மழை
மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நிலவின் தரைப்பகுதிகளை காட்டும் புதிய வரைபடம்
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வெளியீடு
நடிகர் சங்கத்தை சேர்ந்த 1,000 உறுப்பினர்களுக்கு ரஜினி சார்பில் நிவாரண உதவி பொருட்கள்
இன்று முதல் 3 நாட்கள் விநியோகிக்கப்படும்
கரோனா தடுப்பு, நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி எம்ஆர்எப் நிறுவன நிர்வாகக் குழு முடிவு
பிரபல தொழில் நிறுவனமான எம்ஆர்எப் சார்பில் கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக ரூ.25 கோடியை அளிக்க, அந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.எம். மாமென் தலைமையிலான நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.
மன அழுத்தத்தைப் போக்க ஆதரவற்றோர் முகாமில் எம்.ஜி.ஆர். திரைப்படம்
ஊரடங்கு அமலில் உள்ளதால் திருநெல்வேலியில் சாலைகளில் திரிந்த ஆதரவற்றோர், வெளியூர் களுக்குச் செல்ல முடியாமல் தவித்தோர் என 107 பேர் மீட்கப்பட்டு கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆதரவற்றோருக்காக முக கவசம் தயாரித்த குடியரசுத் தலைவர் மனைவி சவிதா
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாட்டின் முதல் பெண்மணியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் மனைவியுமான சவிதா கோவிந்த்தும் பங்கேற்று, டெல்லி ஆதரவற்றோர் இல்லங்களுக்காக முக கவசம் தயாரித்தார்.
அதிபர் உடல்நிலை பாதிப்பு, கரோனாவால் வடகொரியாவில் பதற்றம் உணவு பொருட்கள் தட்டுப்பாடு
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அலை மோதுகின்றனர்.
மேற்கு மண்டல மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி செல்வதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதைக் கண்காணிக்க, காவல்துறை அதிகாரிகள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண் காவல் ஆய்வாளருக்கு வாணியம்பாடியில் கரோனா கொற்று உறுதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அண்ணா சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் நடமாடுவதை தடுக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையின் ஒருபுறம் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.