CATEGORIES
Categories
அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை
பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சில் இந்தியா உறுதி
'மாலத்தீவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்க தயாராக உள்ளது' என்று அந்நாட்டு அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை உறுதியளித்தார்.
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்: விசாரணையை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிறு விவசாயிகள் வளர்ச்சியில் பயிர் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு - பிரதமரின் முதன்மைச் செயலர்
சிறு விவசாயிகளின் வளர்ச்சியில் வீரிய ஒட்டுரக பயிர் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீர்ப்பு
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் மீதான கொலை வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
அஸ்ஸாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: சடலமாக ஒருவர் மீட்பு
அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர், கவிஞர் பிரீதீஷ் நந்தி மறைவு
மூத்த பத்திரிகையாளரும் கவிஞரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரீதீஷ் நந்தி (73) மும்பையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடர்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆந்திரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - கூட்டணித் தலைவர்களுடன் வாகனப் பேரணி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூட்டணித் தலைவர்களான மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி புதன்கிழமை வாகனப் பேரணியில் பங்கேற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைப்பு
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் 371 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
டங்ஸ்டன் சுரங்கம்: ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம்
மதுரை அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்
சட்டப்பேரவைக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க நடவடிக்கை -துணை முதல்வர் உதயநிதி தகவல்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
அதிமுக இரு முறை வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பில் கணினி தொழில்நுட்பம்!
ரு நாட்டின் சட்டம் - ஒழுங்கு, குற்றவி யல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் தமிழக காவல் துறை, நீதித் துறை போன்றவை போதிய கணினித் தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட வேண்டும். குற்றங்களை விரைவில் கண்டறிவதற்கும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் உதவும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரிக்க வேண்டும்.
நாகை மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் இலங்கை நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டெல்டா மாவட்டங்களில் ஜன.11-இல் கனமழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் ஜன.11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான விதிகளை யுஜிசி திருத்தம் செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் கொள்கைகளைத் திணிக்கும் முயற்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் - அமைச்சர்கள் கடும் விவாதம்
அண்ணா பல்கலை. விவகாரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு
தமிழகத்தில், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று சமவெளிப் பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எச்எம்பி தீநுண்மி அச்சம் தேவையில்லை
எச்எம்பி தீநுண்மி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் கூறினார்.
ரௌடிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை: 51 பட்டாக்கத்திகள் பறிமுதல்
சென்னையில் ரௌடி நாகேந்திரனின் சகோதரர், கூட்டாளி வீடுகளில் போலீஸார் சோதனை செய்து, 51 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.
பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்
பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டுமென எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்ததுள்ளது. தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பங்குச் சந்தை மோசடி: ரூ.56 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஆவடி பகுதியில் இணையதளம் மூலம் பங்குச் சந்தை மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி செய்யப்பட்ட ரூ.56.43 லட்சத்தை உரியவர்களிடம் காவல் ஆணையர் கி.சங்கர் புதன்கிழமை ஒப்படைத்தார்.
சென்னையில் ‘காவல் கரங்கள்’ மூலம் 3 ஆண்டுகளில் 7,712 பேர் மீட்பு
‘காவல் கரங்கள்’ திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் சென்னையில் 7,712 ஆதரவற்றோர் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சாரங்-2025 கலாசார விழா: சென்னை ஐஐடி-இல் இன்று தொடக்கம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாசார விழாவின் 51-ஆவது ஆண்டு சாரங்-2025 கொண்டாட்டம் சென்னை ஐஐடி-இல் வியாழக்கிழமை (ஜன. 9) முதல் ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வீதிகள் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தமிழின் சங்க இலக்கியம் பிரமிக்க வைக்கிறது!
புலிட்ஸர் பரிசு பெற்ற கவிஞர் பீட்டர் பாலாக்கியன்