CATEGORIES
Categories
மாசுபாட்டை குறைக்கும் 'பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு - மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
துணைவேந்தர் தேடுதல் குழு: யுஜிசி புதிய விதிக்கு முதல்வர் கண்டனம்
துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எச்எம்பிவி தொற்று: அச்சம் தேவையில்லை
எச்எம்பிவி தொற்று வீரியம் குறைந்தது என்பதால் அதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தனியார் பள்ளி விடுதி மாடியிலிருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு
நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
அமைதி வழியில் போராட அனுமதி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்
திருச்சியில் விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் மன்மோகன் சிங் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழகத்தின் கனவுகளை மதித்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; மத்தியில் அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உறவினரின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு, கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பிரார்த்தனை கூட்டம்
புத்தாண்டு ஆசிர்வாதமாய் அமைய சென்னையில் இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
நாளை ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு இஸ்ரோ தகவல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (ஜன.9) நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு; தென்னாப்பிரிக்க இளைஞர் கைது
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி, பெண் எஸ்.ஐ. கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டதற்கான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுறுத்தல்
இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.
போகி: நெகிழி எரிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்
போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிர்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கட்டடக் கழிவுகளை அகற்ற 59 வாகனங்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டடக் கழிவுகளை அகற்ற 59 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மேயர் ஆர்.பிரியா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டு அலகுகளிலும் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்
கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என வனத் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
புத்தகக் காட்சியில் புதியவை
லக அளவில் அனைத்து நாடுகளும் அச்சத்துடன் எதிர்நோக்கும் பிரச்னை சுற்றுச்சூழல் பாதிப்பு.
தேடிச் சுவைத்த தேன்!
யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' எனும் நூலை தேடி விரும்பிப் படித்துள்ளேன். இந்நூலாசிரியர் 'இந்தியா' பத்திரிகையை நடத்திய மண்டையம் ஸ்ரீனிவாச அய்யங்காரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிப் பிணி போக்குவதே தமிழ் இலக்கிய மரபு
பசிப்பிணியைப் போக்குவதே தமிழ் இலக்கிய மரபாக இருந்துள்ளது என மதுரை வானொலி நிலைய முன்னாள் அதிகாரி சண்முக. ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
பிப். 5-இல் தில்லி பேரவைத் தேர்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; 126 பேர் உயிரிழப்பு
சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் புனித நகரமான ஷிகாட்ஸேவில் செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்தனர்; 188 பேர் காயமடைந்தனர்.
கனடா பிரதமர் ட்ரூடோ ராஜிநாமா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள்
மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தேர்தல் என ஜனநாயக திருவிழாக்களின் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்து சென்றது 2024-ஆம் ஆண்டு. 2025-இல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தில்லி, பிகார் ஆகிய 2 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்கள் மட்டுமே நடைபெறவுள்ளன. எனினும், மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜகவுக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை அந்தஸ்தை தக்க வைக்க போராடும் காங்கிரஸுக்கும் நிகழாண்டில் காத்திருக்கும் சவால்கள் குறித்து பார்ப்போம்.
வாலிபால்: டான் போஸ்கோ பள்ளி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற சூசையா பீட்டர் மற்றும் லூர்து அம்மாள் நினைவுக் கோப்பை வாலிபால் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ஆனது.