CATEGORIES
Categories
ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்
நடிகர் சல்மான்கான் (படம்) மீதான கொலை முயற்சியை கைவிடுவதற்கு 5 கோடி ரூபாய் கேட்டு புதிய மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரின் குடும்பத்தை விமர்சித்த கர்நாடக பாஜக எம்எல்ஏவுக்குக் கைதாணை
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சைக் கருத்து கூறியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வராத பாஜக எம் எல்ஏவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாறியது நெஞ்சம், மாற்றியது காலம்!
“கட்சி தொடங்கி 40 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் தமிழகத்தில் நம்மால் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே” எனச் சில மாதங்களுக்கு முன் தன்னைச் சந்திக்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர நிர்வாகிகள் தொண்டர்களிடம் மனம் புழுங்கினார் அக்கட்சித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பல்வேறு மோசடிகள்: 300 பேர் கொண்ட கும்பலில் இளையர்
சிங்கப்பூரில் பல்வேறு மோசடிச் சம்பவங்களில் தொடர்புடைய தாக நம்பப்படும் ஏறக்குறைய 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு கைது; 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கேலாங் சாலையில் இருக்கும் கேளிக்கை விடுதியில் பாதுகாவலராகப் பணிபுரிந்த 55 வயது லீ ஹேங் வோங், ஆடவர் ஒருவரின் தொடைப் பகுதியில் இருமுறை கத்தியால் குத்தினார்.
புதுப்பிக்கப்பட்ட தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்சுக்கு மாறும் மெண்டாக்கி
தஞ்சோங் காத்தோங் காம்ப்ளெக்ஸ் கட்டடம் புதுப்பிக்கப்பட்ட பிறகு 2029ஆம் ஆண்டில் மெண்டாக்கியின் தலைமையகம் அங்குச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 17 வயது சிங்கப்பூரர் தடுத்துவைப்பு
குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் யாராவது தீவிரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டால் உடனடியாக அதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்து உள்ளார்.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்; ‘முடிவின் தொடக்கம்' என்கிறார் இஸ்ரேலில் பிரதமர் நெட்டன்யாகு
காஸா போர் முடியும் வரை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிடிபட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அக்டோபர் 18ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
$648 மி. மதிப்பில் விநியோகச் சங்கிலி நடுவம்
துறைமுகச் செயல்பாட்டு நிறுவனமான பிஎஸ்ஏ, துவாசில் $647.5 மில்லியன் மதிப்பிலான சேமிப்புக் அதன் புதிய கிடங்கை நிறுவவிருக்கிறது.
சாய் பல்லவியை நேரடியாகத் தாக்கும் நித்யா மேனன்
தனுஷுடன் நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு, அண்மையில் அந்த விருதினை அதிபர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார் நித்யா மேனன்.
தயாரிப்பாளருடன் சுற்றுலா சென்ற திரிஷா
தான் நடித்த 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச் சனா கல்பாத்தியுடன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றிருக்கிறார் திரிஷா.
பட்டிமன்றத்துடன் கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அப்துல் கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடின.
லெபனானிய நகராட்சி மன்றக் கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல்
மாண்டவர்களில் தென்லெபனானில் உள்ள முக்கிய நகரம் ஒன்றின் மேயரும் அடங்குவார்.
இந்தியா - கனடா உறவு மேலும் மோசமடைகிறது
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தீபாவளி: 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டம்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஏதுவாக மாநிலம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் ரயில் விபத்து: மனித சதியே காரணம் எனத் தகவல்
அண்மையில் தமிழகத்தின் திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நேர்ந்த ரயில் விபத்திற்கு மனித சதிதான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைத்த முதல்வர்
கனமழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மக்கள் பாராட்டு
சிறார் வளர்ச்சியில் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு முக்கியம்: கல்வி அமைச்சர் சான்
சிறார்களின் கல்விக்கான முக்கிய அடித்தளம் சமூக, உணர்வுபூர்வ மேம்பாடு என்றும் வலுவான சமூக உணர்வு சார்ந்த மேம்பாடு இல்லையென்றால், எஞ்சியிருக்கும் கல்விப் பயணத்தைக் கட்டமைப்பது கடினமானதாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
ஏற்றுமதி மூன்றாவது மாதமாக வளர்ச்சி
சிங்கப்பூரின் அடிப்படை ஏற்று மதி, ஆண்டு அடிப்படையில் மூன்றாவது மாதமாக செப்டம் பரிலும் ஏற்றம் கண்டது.
குடியிருப்புக் கட்டடங்களை எழுப்ப நான்கு நிலப் பகுதிகள் வெளியீடு
சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குரிய அர சாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் நான்கு குடியிருப்பு நிலப் பகுதிகளை நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வெளியிட்டு உள்ளன.
மனிதநேயத்துடன் பிறர்நலம் பேணும் அன்புள்ளங்களுக்கு விருது
இறுதிகட்டப் பராமரிப்பிலிருக்கும் (palliative care) நோயாளிகளுடன் மரணத்தை எதிர்நோக்கும் வேதனையைப் பகிர்ந்து, அவர்களது இறுதிப் பயணம்வரை பக்கபலமாக இருந்துவருகிறார் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தாதிமை மேலாளர் நரிந்தர்ஜீத் கோர், 62.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தோர்மீது நடவடிக்கை: இந்திய அரசு உறுதி
அண்மைய நாள்களில் இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், புரளியைக் கிளப்பியவர்களுக்கு
பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார் லோ பெய் யிங்
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் நீதிமன்ற விசாரணையில் திடீர் திருப்பமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் உதவியாளரும் முன்னாள் உள்வட்ட உறுப்பினருமான (cadre member) திருவாட்டி லோ பெய் யிங் பொய்யுரைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 5,000 வீடுகள் விற்பனை
காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ், ஈசூன் வட்டாரங்களில் கட்டப்படும்
தீபாவளிக்கு ஜெயம் ரவியின் 'பிரதர்’
ராஜேஷ் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் 'பிரதர்' படத்தை விளம்பரம் செய்து வருகிறார் ஜெயம் ரவி.
சிங்கப்பூரில் கூகலின் ‘புரொஜெக்ட் ரிலேட்’ தொடர்புச் செயலி
மாறுபட்ட பேச்சுமுறை, பேச்சுக் குறைபாடு உள்ளோர்க்கு உதவும் விதமாக 'புரொஜெக்ட் ரிலேட்' எனும் தொடர்புச் செயலியைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது கூகல் நிறுவனம்.
ஜப்பான் பொதுத்தேர்தல்: 314 பெண்கள் போட்டி
அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஜப்பான் பொதுத் தேர்தலில் சாதனை அளவாக 314 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்படும் தடை சட்டம்
ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தடை நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறது.
டாடாவுக்கு 'நெஞ்சார்ந்த' நன்றி
இந்தியாவின் முன் னணித் தொழிலதிபராகவும் வள்ளலாகவும் மதிப்புமிக்க மனிதராகவும் திகழ்ந்த திரு ரத்தன் டாடா அண்மையில் தமது 86ஆவது வயதில் காலமானார்.
காஷ்மீர் முதல்வரான உமர் அப்துல்லா
காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார்.