CATEGORIES
Categories
உக்ரேனில் தொடரும் தாக்குதல்
ரஷ்யா அக்டோபர் 20ஆம் தேதி இரவுநேரத்தில் ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதலைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உருவாகிறது ‘அரண்மனை 5’: தயாராகும் சுந்தர். சி
படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன.
பல்லின ஒற்றுமையை ஊக்குவித்த தீபாவளிக் கொண்டாட்டங்கள்
தீபாவளிப் பண்டிகை குதூகலத்தில் மூழ்கும் வண்ணம் ஏறக்குறைய 103 யூடீ குடியிருப்பாளர்கள் \"ஹேப்பி பஸ்\" (Happy Bus) எனும் பேருந்துச் சிட்டில் இந்தியா வட்டாரத்தை சுற்றுலா மூலம் வலம் வந்தனர்.
உலக வர்த்தகத் தலைவர்களை இணைக்கவுள்ள மாநாடு
11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நவம்பர் 15 முதல் 17ஆம் தேதிவரை கோலாலம்பூர் மாநாட்டு நிலையத்தில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் இம்மாநாடு மலேசியாவில் நடைபெறுவது இது முதல் முறை.
பெய்ரூட்டில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
லெபனானியத் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தோனீசியாவில் ஆகப் பெரிய அமைச்சரவை
இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, திங்கட்கிழமை (அக்டோபர் 21) தமது அமைச்சரவையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்திவைத்துள்ளார்.
பிரிட்டிஷ் மன்னரை எதிர்த்த ஆஸ்திரேலிய செனட்டர்
ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றியதை அடுத்து, அவருக்கு எதிராக சுயேச்சை செனட்டர் ஒருவர் குரல் எழுப்பினார்.
மருத்துவர் உட்பட எழுவர் பலி
இந்தியாவின் காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இலங்கை மலையகத் தமிழர்கள் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா ரூ.60 கோடி நிதி
இலங்கை மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா சார்பில் ரூ. 60 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு: முதல்வர்
தமிழ்நாட்டில் கடந்த மூவாண்டுகளில் ரூ. 6,792 கோடி மதிப்பிலான 7,609 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
90 அணைகளில் 141 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு
கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாள்களில் மட்டும் தமிழகத்தில் இயல்பை விட 6 சென்டிமீட்டர் அளவு அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$32 மி. மோசடி: பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை கோரும் வழக்கறிஞர்கள்
சொகுசு பொருள் விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்ட தாய்லாந்து பெண் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை திங்கட் கிழமை (அக்டோபர் 21) ஒப்புக் கொண்டார்.
சில கடற்கரைகளுக்கு அருகே நீந்த வேண்டாமென ஆலோசனை
ஷெல் எண்ணெய்க் கசிவை அடுத்து தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தல்
நாதன்: பொய்யை ரயீசா தொடர வேண்டும் என்று விரும்பினேன்
உண்மையை ஒப்புக்கொள்வதற்கான முறையான திட்டம் ஏதும் இல்லாததால் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் அவரது பொய்யைத் தொடரவேண்டும் என்று தாம் விரும்பியதைக் கட்சியில் அவருடன் இணைந்து செயலாற்றிய திரு யுதிஷ்திரநாதன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கிழக்கு ஜோகூர் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பலின் 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு
கிழக்கு ஜோகூர் நீரிணையில் நின்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் திடீரென தீச்சம்பவம் ஏற்பட்டது. அக்கப்பலில் இருந்த 22 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர் மிரட்டல்: விமானப் பயண விதிமுறைகளை மாற்ற இந்தியா ஆலோசனை
இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடிப்பது எளிதான செயல் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனீசியக் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் புகழ்பெற்ற கல்வி நிலையங்கள்
இந்தோனீசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வின் நிர்வாகம் கிராமப்புறங்களில் உயர்தரக் கல்வி வழங்கும், விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகளை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெலிகிராமில் அதிகரிக்கும் மோசடி கவலை அளிக்கிறது
கவலை டெலிகிராம் செயலி வழியில் நடைபெறும் குற்றச்செயல்கள், மோசடிகள் அதிகரிப்பதாக உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.
படகுத்துறை மேடை இடிந்தது; குறைந்தது எழுவர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் கரையோரத்தில் படகுத்துறை மேடை ஒன்றின் ஒரு பகுதி சனிக்கிழமை (அக்டோபர் 19) பிற்பகல் இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.
'ரஷ்யத் தாக்குதலில் மீட்புப் பணியாளர் உட்பட 17 பேர் காயம்’
உக்ரேனில் சனிக்கிழமை (அக்டோபர் 19) இரவு ரஷ்யா பரவலாக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இதம் தர வருகிறது ‘எல்ஐகே’
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துவரும் 'எல்ஐகே' (லவ் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி) படம் அடுத்த ஆண்டு கோடைக் காலத்தையொட்டி மே மாதம் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.
காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதலால் 73 பேர் கொல்லப்பட்டனர்: ஹமாஸ் தரப்பு
காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
டிரம்ப்-ஹாரிஸ் கடும் போட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர், இரு வேட்பாளர்களில் எவருக்கும் சாதகமான நிலை இருக்காது எனக் கருத்துக் கணிப்புகள் கூறும் வேளையில், இருதரப்பும் ஒவ்வொரு வாக்குக்கும் கடுமையாகப் போட்டி போடுகின்றன.
இந்திய வான்வெளி பாதுகாப்பானது
இந்திய வான்பரப்பு பாதுகாப்பானது. பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறப்பதற்கு சீமான் கண்டனம்
தீபாவளிப் பண்டிகை காலத்தில் தமிழகம் முழுவதும் கூடுதலாக 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேவநேயப் பாவாணர் மகன் மணிமன்றவாணன் காலமானார்
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் மகன் மணிமன்றவாணன் காலமானார். அவருக்கு வயது 78.
வாய்மொழி வித்தை காட்டுவது நமது வேலை அல்ல: விஜய்
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
முழு ஆற்றலை அடைய இளையர்களுக்கு உதவிக்கரம்
சிங்கப்பூரில் வேலை, கல்வி, பயிற்சி என எதிலும் ஈடுபடாத 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 17,000ஆக இருந்தது.
குறைகடத்தி உற்பத்தித் துறையில் சாதிக்க விரும்பும் லாவண்யா
தொழில்நுட்ப ஆற்றலில் சுழலும் இன்றைய நவீன உலகுக்கு அதிகம் தேவைப்படும் குறைக்கடத்தி உற்பத்தித் (semiconductor manufacturing) துறையில் 27 வயது சி.லாவண்யா தமக்கென ஓர் இடத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியக் காற்பந்து உலகில் கால்பதிக்கும் தர்ஷினி
வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியக் காற்பந்துப் போட்டியை முதன்முதலாகப் பார்த்த தர்ஷினி குணசேலன், அந்த விளையாட்டின்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.