CATEGORIES
புத்தனின் உலகில் மொழிகளில்லை
ஓர் இயக்குநர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படம் நான் பார்வையாளனுக்கு முன்வைக்கும் கேள்வியின் வடிவம். என் கண்ணோட்டம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அது குறித்து அவர்களோடு உரையாடவே விரும்புகிறேன். -கிம் கிடுக்
பனிப்பாறை
இஸ்தான்புல் விமான நிலையத்தில் தான் அவளைப் பார்த்தாள் சபாமஜீத். மிக உயரமாகவோ குட்டையாகவோ இல்லாமல் சாதாரண உயரத்தில் இருந்தாள்; அதே போலத்தான் அவளுடைய உடல் நிறமும்: மாநிறம். கண்டிப்பாக இவளொரு இந்தியப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த சபா அந்தப் பெண்ணுடன் உரையாடத் துடித்தாள். அவளோகைப்பேசிக்குள் மூழ்கியிருந்தாள்.
கடவுளின் கை, களிமண் கால்கள்
'கடவுளின் கை என்னவென்று உதைப்பந்தாட்டத்தை அரைத்தூக்கத்தில் பின்பற்றுகிறவர்களுக்கும் தெரியும்; இவை சமீபத்தில் மறைந்துபோன டீயோகோ மரடோனா சொன்ன வார்த்தைகள்.
கார்ப்போரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்ற சொலவடை விவசாயிகள் அடிக்கடி தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வது. "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்ற நிலை சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் உண்மையாக இருந்திருக்கலாம்.
இனவாதக் கொரோனா
உலகளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள உயிரிழப்புகளுடனும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையுடனும் ஒப்பிடும்போது இலங்கை குறைந்த அளவு தாக்கத்தினையே இதுவரை கண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் இந்தத் தொற்றின் தாக்கம் முற்றுமுழுதாகக் கட்டுக்குள் வந்துவிடவில்லை. நோய்த் தொற்றுக்குள்ளாகுபவர்களும் மரணங்களும் பொதுமுடக்கமும் அங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நிலையில் கொரோனாவுடன் சேர்ந்த, மற்றுமொரு புதிய வைரஸ் இனவாத வைரஸ்' பரவிவருகிறது. இலங்கையின் அரசியல் சமூகச் சூழலில் இது ஆழமாகப் பரவி, சடலங்களைக் கட்டாயப்படுத்தி எரிக்கும் இனவாத நோக்கிலான அரசியலாக மாறி எரிந்து வருவதைக் காண்கிறோம்.
அறிக்கை-நியாய உணர்வு கொண்டோர் அனைவருக்கும்...
கோவிட் 19 நம் சமூகங்களுக்கான சோதனையாக உள்ளது, கொரோனா வைரஸுக்கு எதிர்வினையாற்றுகையில் நாம் கற்றுக்கொள்கிறோம்; மாற்றிக் கொள்கிறோம்.
கற்றனைத்து ஊறும் அறிவு
அருந்ததிராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம்' (Walking with the comrades) என்னும் நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கியப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2017ஆம் ஆண்டு முதல் வைக்கப்பட்டிருந்தது.
பாரதியும் 'கற்பக'மும்
பாரதி எழுதிய கவிதைகள் அவர் வாழ்ந்த காலத்தில் பெரிதும் பத்திரிகைகளின் வாயிலாகவே வெளிப்பட்டன.
தோட்டத்தின் அந்தம்
அந்த இடத்தைக் கடக்கும்போது தரைத்தள சாளரத்திலிருந்து உதவி கோரி ஒரு பரிதாபக் குரல் கேட்டது.
மொழியியல் நோக்கு: இலக்கணமும் இலக்கண மரபுகளும்
இலக்கணம், இலக்கண மரபுகள் பற்றி நம் மத்தியில் பலவகையான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் பல அறிவியல்ரீதி அற்றவையாகவும், மொழிமாற்றம், மொழிவளர்ச்சிகளுக்கு எதிரானவையாகவும் உள்ளன.
திராவிட இயக்க மீட்பு: சொல்லாடல்களின் மாற்றங்கள்
1990களில் தமிழில் பெரியார் குறித்துப் புதிய கவனம் உண்டானது. ஒரு கழகத்தின் சித்தாந்தத்தின் அடையாளமாக அறியப்பட்டிருந்த அவரை அதிலிருந்து விலக்கிப் பரந்துபட்ட சிந்தனையாளராக எழுதும் கவனம் என்று அதைக் கூறலாம்.
புதிதினும் புதிது காண்பார்
அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன் (1944 - 2020)
மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்
"ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!”இது பராசக்தி (1952) படத்தின் நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம்.
இரும்புக் கோட்டையைத் தாக்கும் இந்துத்துவ ஈட்டி
தமிழகத்தில் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் வியூகங்கள் நெடுங்காலமாக அதனை உள்ளே நுழைய விடாத மாநிலமான தமிழ்நாட்டில் அசாதாரணமான அரசியல் அழுத்தம் தந்து மாநில அரசியலில் தீவிர தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
மான் புக்கர் பரிசு 2020: டக்ளஸ் ஸ்டூயர்ட்டின் ஷகி பெயின்
மொழிபெயர்ப்பாக இல்லாமல் நேரடியாக ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு நாவலுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் மான் புக்கர்' பரிசு, இந்த ஆண்டு இந்தியப் பூர்வீகத்தைக் கொண்ட அவ்னி தோஷி (Avni Doshi)க்குக் கிடைக்கும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், ஸ்காட்லாந்துக்காரர் டக்ளஸ் ஸ்டூயர்ட் (Douglas Suart) டுக்குக் கிடைத்திருக்கிறது. ஆயினும், அவரின் நாவலான ஷகி பெயின் (Shuggie Bain) குறும் பட்டியலில் இடம்பெற்ற மற்ற ஐந்து நாவல்களைவிட எவ்விதத்திலும் தரத்தில் குறைந்ததன்று.
உரை-அயர்விலாப் பெருந்தொண்டர்
கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களுக்கு எண்பத்தேழாவது வயதில் ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ண ஐயர் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அல்லாடும் அமெரிக்க ஆன்மா
அயலிருந்து பார்ப்பவர்களுக்கு இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அமெரிக்க அரசியல் அழகான காட்சியல்ல. உலகம் முழுக்க ஜனநாயகம், மக்கள் தேர்வு, நாடாளுமன்றச் சம்பிரதாயங்கள் பற்றி உபதேசித்தவர்கள் போதித்ததைக் கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
7.5% கூர் இருளில் மின்மினி வெளிச்சம்
சில புதிர்கள் எளிமையானவையாய்த் தோன்றும். அணுகி அவிழ்க்க முயலும்போது அவற்றின் வீரியம் புரியும். மூத்தது முட்டையா? கோழியா?' என்பது அப்படியானதொரு புதிர்.
நாணலின் கானம்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ்ச் சூழலில் அதிகூடிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பதினாறுமொழிகளிலும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல் களைப் பாடியவர், மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தவர், திரைப்படங்கள் சிலவற்றில் நடிகர், இசையமைப்பாளர், இரவல் குரல் கலைஞர்;இவற்றால் மாத்திரம் தோன்றியதல்ல இந்த அதிர்வலை.
மதிப்புமிக்கது இவ்வாழ்வு
பெருந்தொற்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்திருக்கிறது. பலர் நீண்ட காலம் கட்டாய இற்செறிப்புக்கு ஆளானபொழுது என்னைப் போன்ற மருத்துவப் பணியாளர்கள் இடைவிடாத பணிச்சுமைக்கு ஆளானார்கள்.
புலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்!
ஆதிதிராவிடர் அடையாள அரசியல் விவாதத்தின் ஒரு முக்கிய குரலான கோ, ரகுபதியின் கட்டுரை இவ்விதழில் இடம்பெறுகிறது. இக்கட்டுரைக்கான எதிர்வினைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பாம்புப் பிடாரனின் கதை
அவனுடைய வித்தை புதிரானது ரகசியமானது, சாதாரணமானவாகளுக்குக் கைவராதது. சொல்லப்போனால், பாம்புப் பிடாரர்களில் மிகச் சிலரே அந்தத் திறமையைப் பெற்றிருந்தனர். பாம்புகளைப் பிடித்து வித்தை காட்டும் நுட்பத்தைக் கைவரப் பெற்றிருந்த ஜம்புரா போன்ற சிலரால் மட்டுமே மாயாஜாலங்களை நிகழ்த்த முடிந்தது. அந்த ஜாலங்களை நம்ப வேண்டுமானால் நீங்கள் சூதுவாது புரியாதவர்களாகவோ அல்லது உறுதியான கடவுள் நம்பிக்கை கொண்டவராகவோ அல்லது அம்மாதிரியான பாம்புப் பிடாரர்களை நம்புபவராகவோ இருக்க வேண்டும்.
புதியன புகுமா?
கொரோனா முடக்கக் காலகட்டம் தொடங்கி ஏழுமாதங்கள் முடிந்துவிட்டன. அன்றாட வாழ்க்கை ஏதோ ஒருவகையில் இயல்பாகிவிட்டது.
பதிவு-மதுவந்தி
ஓவியர் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தீட்டிய ஓவியங்களின் கண்காட்சி அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதிவரை 'Soul Spice' கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது. ஓவியர்கள் ரவி தனபாலும் நரேந்திரபாபுவும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தகுதியா தந்திரமா?
பல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் படக விவாதங்களுக் குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் புதியன. பார்வைத்திறனற்றோர் யானை பார்த்து விளக்கம் சொன்ன கதையாக அவரவர் கோணங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். அவ்விவகாரங்கள் தொடர்பான உண்மை சார்ந்த தேடல்கள் சில புதிர்களுக்குள்ளும், சில அதிர்ச்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கின்றன.
வீடு திரும்புதல்
தரைத்தளத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இருந்த உணவகம்.
கருவாடு
முருகேசுவைக் கடப்பைக்கல் இரண்டு எடுப்பதற்காக அந்தக் கடைக்குக் கூட்டிப்போனார் மேஸ்திரி. அங்கே அவனைப் பார்த்தான். முதலில் அவன் 'கருவாடு' தானா என்று சந்தேகமாக இருந்தது. பார்த்துப் பலவருசமாகிவிட்டது.
உன்னால்தான் எல்லாம்
பாலூ என்று உன்னை நான் அழைப்பதற்கு, நீயும் நானும் நேரில் அறிந்துகொண்ட நண்பர்களோ உறவுக்காரர்களோ அல்ல. ஆனால் உன்னை எனக்கு 69ம் வருடத்தி லிருந்து பழக்கம்.
இலக்கிய வழிப்போக்கர்
கி.அ. சச்சிதானந்தம் (1937-2020) என்ற சச்சியுடனான என்னுடைய பழக்கத்துக்கு ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளின் நீட்சியுண்டு. இவ்வளவு நீண்டகாலப் பழக்கம் அவரிடமிருந்து வலுவான எதையும் பெற்றுத்தரும் நட்பாக ஏன் மாறவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது. அவரது மறைவையொட்டிய நாட்களில் இந்தக் கேள்வி திரும்ப மனதுக்குள் அலைமோதியது.
இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்து மீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள் தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம் வந்தது.