CATEGORIES
நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடியும் சில கதைகளும்
'தனிமையின் நூறு ஆண்டு'களை எழுதி முடிப்பதற்குப் பதினாறு வருடங்களுக்கு முன், பின்பனிக் காலத்துக்குப் பின்னான, வெப்பமண்டல நிலத்தின் கோடையில் மார்க்கேஸ் மகாந்தோவில் இருந்த ஒரே தெருவின் வடக்கு எல்லையில் ஒருவீட்டினைக் கட்டினார் மார்க்கேஸ். உயரமான வாசலையும் மிகப்பெரிய சன்னல்களையும் கொண்ட அந்த வீட்டின் முன்கதவு சூரியன் மறைவதற்கு முன் தாழிடப்பட்டதாக நினைவுகள் யாரிடமும் இல்லை. அந்த வீட்டுக்குள் யார் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்; விசாலமாகவும் குளிர்ச்சியுடனும் இருக்கும் அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம். சில சமயம் ஓய்வு எடுக்கலாம். மார்க்கேஸ், அந்த வீட்டைப் புயேந்தியாக்களுக்காகக் கட்டினார்.
தீராத பயம்
தெருக்கதவை வளியில் சாத்தி விட்டு 'மூக்குக்கும் வாய்க்கும் சேர்த்து கைக்குட்டையை இறுக்கிக் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் பெண்ணும் பையனும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நெடுவழி விளக்குகள்
தலித் எழில்மலை (1945-2020)
வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்
பலரும் சொல்லி வருகிறார்கள்:இந்த வைரஸ் பேதம் பார்ப்பதில்லை. உயர்ந்தவன் X தாழ்ந்தவன், பெரியவன் x சிறியவன், நல்லவன் x கெட்டவன், உள்ளவன் x இல்லாதவன் எல்லோரும் அதற்கு ஒன்றுதான். உண்மைதான்போல.
வீடடைந்த கதை
'மார்ச் 21 நள்ளிரவுக்குப் பிறகு தனது ஆகாய வெளியில் பறக்க எந்த வெளிநாட்டு விமானத்துக்கும் அனுமதி இல்லை' என இந்திய அரசு அறிவித்தது. யோசிப்பதற்குக்கூட அவகாசம் இல்லை.
கடிதங்கள் என்னும் கண்ணாடி
இந்தியப் பிரதமராகப் 1966-1977, 1980- 1984 ஆகிய இரு காலகட்டங்களில் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம் எப்படி நினைவில் வைத்திருக்கிறோம்?
தென்னாப்பிரிக்காவில் தமிழ்ப் பௌத்தம்
1990களிலேதான் தமிழகத்தில் அயோத்ததாசர் மீட் டுக்கப்படுகிறார். அயோத்திதாசரின் எழுத்துகள் வெளிவந்த போது தான் ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் சமூக, அரசியல், வரலாறு, பண்பாடு குறித்து முற்றிலும் புதிய சிந்தனை தோன்றியது தெரியவந்தது. தமிழ்ப் பௌத்த முன்னெடுப்புகளைப் பற்றித் தகவல்கள் வெளியாகின. அவையனைத்தும் வெவ்வேறு அளவிலான விவாதத்துக்குள்ளாயின. இருந்த போதும் 20 ஆம் நூற்றாண்டின் தாடக்கத்தில் எத்தனை பேர் அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தத்தைப் பின்பற்றினார்கள்? அவர்கள் வாழ்வுமுறை எப்படியிருந்தது? ஏன் அது அடுத்த கட்டத்திற்குப் போகாமல் தேக்கமடைந்தது போன் ற கேள்விகளுக்குத் தளிவான பதில் இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் அயோத்திதாசரின் தமிழ் பளத்தம் குறித்து 1979இல் தென்னாப்பிரிக்காவில் ஆய்வுகள் நடைபெற்றமை பிரதானமாகிறது. இந்தக் கேள்விகளுக்குத் தென்னாப்பிரிக்காவிலிருந்து நமக்கு கிடைக்கும் பதில் தமிழகச் சூழ் நிலையைப் பொருத்திப்பார்க்க உதவக்கூடும்.
மழை கருவுற்றிருந்த வெயில்காலம்
அழகனும் அல்லியின் சின்னண்ணனும் எழவுக்குப் போட்ட கீத்துப் பந்தலில் முழித்திருந்தார்கள். அல்லி சேப்பாரங்குட்டக்கி ஒதுங்குவது போல போக்குக்காட்டிகருப்படியான் காட்டுக்குள் புகுந்தாள்.
கடைக்குட்டி
முருகேசு தன் அப்பனுடன் பேசுவதே இல்லை. எந்த வயதில் பேச்சு நின்றுபோனது என்றும் தெரியாது.
இரட்டைக் குமிழி
வேதவல்லியிடமிருந்து பத்திரிகை வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு ஸ்ரீரங்கத்தில் கல்யாணம். கல்லூரி நாட்களில் வேதத்துடன் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், கடைசி நாளில் ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கட்டடமாக ஏக்கமாக நின்று பார்த்தபடி, என் நெருங்கிய தோழிகளுடன் கல்லூரியைச் சுற்றிவந்தபோது, எங்கள் குழுவுக்குச் சம்பந்தமே இல்லாத வேதமும் சேர்ந்து வந்தாள்.
கொரோனா காலத்து ஜனநாயகம்
கொரோனாப் பிணிக் காலம், மனிதர் பங்கேற்கும் எல்லாத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதியின் 'தமிழ்க் கதாபாத்திரங்கள்'
பெங்களூர் பன்னாட்டு மையம் உருவாவதற்குக் காரணமாக இருந்த ஆளுமைகள் தற்போது அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள்.
திகிலுறச் செய்யும் இரட்டைத் தலைச் சர்ப்பம்
நான் லார்வின் புரூ' , 'நான் கிரி நமகானோ' என்று இருவரும் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டு கையைக் குலுக்கிக் கொண்டார்கள்.
மகத்தான பெருந்தொற்று நாவல்கள் நமக்குப் போதிப்பவை
கடந்த நான்கு வருடங்களாக ஒரு சரித்திர கநாவலை எழுதி வருகிறேன்.
பெடரேஷன் என்னும் ஒடுக்கப்பட்டோர் இயக்கம்
பெடரேஷன்காரர்கள் என்று சொல்வதை நம்மில் யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா? அது ஒரு கட்சியின் பெயர்.
இயாம்: கொள்ளைநோய்க் கிராமம்
'வெல்லிங்டன்' என்ற என்னுடைய நாவலின் முதற் பகுதி உதகமண்டலம் எவ்வாறு மலைநகரமாக உருவானது என்பதைப் பற்றியது.
கொரோனா பூனை
வெண் துகில் வெயில் வேய்ந்த முற் கோடைக்காலம்.
இந்திய யானைகளின் கதை
ஆடம்பரமும் கலை அழகும் மிக்க, மிகமிகத் தூய்மையான கட்டடம் அது.
அரண்
இயாம் பரிசுத்த லாரென்ஸ் பாரிஷ் தேவாலயத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரெக்டர் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸனின் சரீரம் குளிர்ந்து நடுங்கியது.
கொரோனா எனும் உருவகம்
இந்தியாவில் கொரொனா, வெறுப்பு 3 அரசியலின் போர்வாளாக மாறியுள்ளது.
ஏன் இப்படிச் செய்தீர்கள்?
உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரஸின் தயாரிப்பாளர் சீனா என்றால், அதன் விநியோகஸ்தர் முஸ்லிம்கள் என இந்துத்துவச் சக்திகள் பரப்புரையை மேற்கொண்டிருந்தன.
சர்வதேசப் பரவலும் பூட்டப்படலும்
தொற்றுநோய்க் கிருமியின் திடீர்ப் பிரசன்னம் பற்றியும் அது சீனாவில் தான் உருவாகும் என்று ஆருடமாகச் சொன்ன இரண்டு நாவல்கள் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.
அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' அபாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். "அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா.
அன்புள்ள இஸ்லாமியர்களே...
யமுனையையும் கங்கையையும் ‘மதக் கழிவால் நிரப்பிச் சுற்றுச்சூழல் கேடு என்ற வடிவத்தில் தீங்கு விளைவித்ததிலும் சரி, அடர்த்தியான மக்கள் தொகையும் நெரிசலும் கொண்ட நிஜாமுதீன் பஸ்தியை ஒரு இஸ்லாமியக் கூடுகைக்காக கோவிட்- 19 ஆபத்துப் பகுதியாக மாற்றியதிலும்சரி உலகத்துக்கும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மதங்கள் பல சமயங்களில் தீங்கு விளைவித்துள்ளன.
மூகாப்பாட்டியின் கனவுகள்
(ஞானபீடப்பரிசு பெற்ற சிவராம காரந்தர் நாவலின் திரைப்பட வடிவம்: நாவல் வெளியான ஆண்டு: 1968, திரைப்பட வெளியீடு: நவம்பர் 2019: திரைக்கதை, இயக்கம்: பி.சேஷாத்ரி)
புனித தோமாவின் திருவிதாங்கோடு அறப்பள்ளி
இந்தியாவிற்கும் மேற்கத்திய மற்றும் பிற நாடுகளுக்கும் இடையிலான பண்டையக்கால வணிகக் கலாச்சாரப் பண்பாட்டு உறவுகளைத் திராவிடப் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் தமிழ் சங்க இலக்கியங்கள், எரேபியம், கிரேக்கம் போன்ற மொழிகளிலுள்ள கிறித்தவ மறைநூற்கள், ஆரியவேத இலக்கியங்கள், புத்தஜாதகக் கதைகள் போன்றவை அறியத்தருகின்றன.
விந்தியாவின் சுதந்திரப் போர்
நான் 'The Face Behind the Mask' நூலுக்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது நாற்பதுகளில் எழுதிய பல எழுத்தாளர்களைப் பட்டியலிட்ட போது விந்தியாவின் பெயரும் பட்டியலில் இருந்தது.
சுதந்திரப் போர் (நான்காம் பாகம்)
தேய்ந்த கனவு
வைக்கம் போராட்டம் வரலாற்றுச் சாதனை
ஆய்வு, பதிப்பு, கட்டுரையாக்கம் ஆகிய துறைகளில் தொடர்ந்து செயல்படுபவர் பழ.அதியமான்.
நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை
தூங்கி முடியமுன் ஒரு கனவு. ஓர் இளம் ஆணின் முகம்.