CATEGORIES

மதுரையில் தடையை மீறி பாஜக மகளிரணி பேரணி முயற்சி
குஷ்பு உள்பட 400 பேர் கைது
புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசு
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தலைமை காவலர் மீது வழக்குப் பதிவு
திருவாரூரில் ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தில்லை கங்கா நகர், எலியம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கும்பலிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை அரும்பாக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் இருவரை கைது செய்தனர்.

பெரம்பூர் தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு
சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநர் ஜெனரல் மருத்துவர் மன்சிங் திறந்து வைத்தார்.
காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவர் கைது
சென்னை யானைக்கவுனியில் காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிகள் நல உதவி மையம் திறப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

தொழிற்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தொழிற்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.
சென்னையில் தொழில் வணிக மாநாடு
ஜனவரி 9-இல் தொடக்கம்

தீவுத் திடல் பொருட்காட்சியில் 46 அரங்குகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
ஜனவரி 13 முதல் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா
கலை நிகழ்வுகளை மக்களின் முன் காட்சிப்படுத்தும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஜன. 13-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
புத்தகக் காட்சியில் புதியவை
சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?

தேடிச் சுவைத்த தேன்!
பள்ளிநாள்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைத் தேடி விரும்பி வாங்கிப் படித்தேன். சரித்திர நாவலான அதில் வரும் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி போன்ற கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. சரித்திரமும் புனைவும் கலந்து வாசகர்களை வியக்க வைத்திருப்பார் கல்கி. நாவலில் வரும் வர்ணனைகள் அற்புதமாக இருக்கும். நான் எழுத்தாளனாவதற்கு பொன்னியின் செல்வன் முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

கற்ற நூல்களின் கருத்துகளைச் செயல்படுத்துவது முக்கியம்
வாசகர்கள் நூல்களைக் கற்பது முக்கியமானது என்பது போலவே கற்ற நூல்களின் கருத்துகளைச் செயல்படுத்துவதும் முக்கியமானது என்று மேடைப் பேச்சாளர் சுகிசிவம் கூறினார்.

மீண்டும் ரூ.58 ஆயிரத்தைக் கடந்தது தங்கம்: 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
சென்னையில் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனையானது.
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்
இந்தியா கடும் கண்டனம்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான டி.எம்.கதிர்ஆனந்த் வீடு உள்பட தொடர்புடைய 4 இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'
அமெரிக்க காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுர் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.

ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ் சாலா தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
4 பேருக்கு 'கேல் ரத்னா'; 32 பேருக்கு 'அர்ஜுனா'
விளையாட்டுத் துறை விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி
நாட்டின் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபர்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக முயற்சி
கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே

ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
'ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களே அனுமதித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இலங்கை காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.
ஃபேஸ்புக் காதலியை கரம்பிடிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்!
ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.