CATEGORIES
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்-எரிந்த நிலையில் சடலம் மீட்பு
காணாமல் போன தாகக் கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திசையன்விளை அருகே, அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் புகார் அளித்தபெண்ணைக்கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா வின் மூத்த மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எம்எல்ஏ வுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக சிறப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட் டார்.
கால அளவைக் கடந்து ஓடும் அரசுப் பேருந்துகள்!
நிா்ணயிக்கப்பட்ட கால அளவையும் கடந்து இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்' எச்சரிக்கை தளர்வு
கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையாக தேசிய பெருகடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) சனிக்கிழமை தளா்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி
‘நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதிபூண்டுள்ளேன்; அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் அனைவா் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்
‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சாம்பியன் மும்பை சிட்டி
பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை சிட்டி எஃப்சி ஐஎல்எஸ் 2023-24 சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.
அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.
காஸா போர் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வியக்க வைக்கும் வைக்கோல் ஓவியங்கள்!
சென்னை அருகே ஆவடியில் வசிக்கும் மாலா, சிறு வயதிலேயே போலியோ பாதிப்புக்குள்ளானவர். ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டார். ஆனாலும், வைக்கோலைப் பயன்படுத்தி அற்புதமாக ஓவியங்களை உருவாக்குகிறார். அவருடன் பேசியபோது:
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.
ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதகை, தாளவாடியில் பலத்த மழை
கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.
மணிப்பூர் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வெள்ளிக்கிழமையுடன் (மே 3) ஓராண்டு நிறைவு பெற்றது.
மும்பையை முடக்கினார் ஸ்டார்க்
மும்பை, மே 3: ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில்கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியா சத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வென்றது.
இறுதி ஆட்டத்தில் இன்று மோதும் மோகன் பகான் - மும்பை சிட்டி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 62,000 போ் அமரும் வசதி கொண்ட கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
'ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்'
ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த தங்களது ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளாா்.
நிலவில் மாதிரிகளைச் சேகரிக்க விண்கலத்தை அனுப்பியது சீனா
நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டுவருவதற்காக விண்கலத்தை சீனா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.
சேலம் சந்தைக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரிப்பு
கோடைகால சீசனையொட்டி, சேலம் சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஹைதராபாத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.