CATEGORIES
ஏற்காடு மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு: 50 பயணிகள் காயம்
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 5 போ் பலியாகினா்; 50 போ் படுகாயமடைந்தனா்.
ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை
சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை-ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான' பக்கவிளைவு
லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்
சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைதுஏன்?
அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
உதகை, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்'-மே 7 முதல் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்ததுபோல இ- பாஸ் வழங்கும் முறையை மே 7 முதல் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமித் ஷாவின் போலி விடியோ பகிர்வு: தெலங்கானா முதல்வருக்கு அழைப்பாணை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விடியோ போலியாக சித்தரிக்கப்பட்ட நிலையில், அந்த விடியோவை பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மே 1-ஆம் தேதி ஆஜராக தில்லி காவல் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: 4 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப் பதிவு
நெல்லை ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கிறது.
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
சென்னை ஏரிகளில் 57% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 ஏரிகளில் 57 சதவீதம் நீா் இருப்பதால், நடப்பு கோடைகாலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரைத் தேரோட்டம்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சிறப்புக் குழந்தைகளுக்கு இராமச்சந்திராவில் கோடைப் பயிற்சி
சென்னை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கொடைக்கானல் சென்றடைந்தாா்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்றவோ, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையோ அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
குழந்தைகள் உணவில் அதிக சர்க்கரை கலப்பு குற்றச்சாட்டு
குழந்தைகளுக்கான உணவு சா்வதேச தரத்திலேயே தயாரிக்கப்படுகிறது; இதில் ஒரே மாதிரியான குற்றச்சாட்டை தொடா்ந்து கூறுவது துரதிருஷ்டவசமானது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்து தவிர்ப்பு
பிகாரில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பயணம் செய்த ஹெலிகாப்டா் வானில் பறக்க புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.
வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா-டெல்லிக்கு 6-ஆவது தோல்வி
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிட்டல்ஸை தனது மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
அமெரிக்க மாணவர் போராட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளர்களிடையே மோதல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போர் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினரிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகு முதல்வருக்கு கோரிக்கை
சென்னையில் பாவேந்தா் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்து இருப்பதாக அவரது பேரன் இளமுருகன் தெரிவித்தாா்.
வாட்டி வதைக்கும் வெப்ப அலை
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்
அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா்.
காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை
சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?
‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது
‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.