CATEGORIES
பாலியல் புகார்கள் எதிரொலி : மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் மோகன்லால், நிர்வாகிகள் ராஜிநாமா
மலையாள நடிகா்கள் பலா் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் (ஏஎம்எம்ஏ) தலைவரும் முன்னணி நடிகருமான மோகன்லால் உள்பட அனைத்து நிா்வாகிகளும் செவ்வாய்க்கிழமை தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி
திமுக எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 5 கொலை வழக்குகள்
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தள்ளாடிய சந்தையில் நேர்மறையாக முடிந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இருதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
புதிய அணுசக்தி பேச்சுவார்த்தை: ஈரான் அதிபருக்கு கமேனி அனுமதி
அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியானுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி அனுமதி அளித்துள்ளாா்.
“உக்ரைன் வசம் 100 ரஷிய சிற்றூர்கள்”
ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 சிற்றூா்களைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா, போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
கரானாவுடன் குகேஷ் 'டிரா'
அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் போராடினார்.
ஜோகோவிச், கௌஃப் முன்னேற்றம்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், நட்சத்திரப் போட்டியாளா்களும், நடப்பு சாம்பியன்களுமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
பெண் மருத்துவர் கொலைக்கு எதிரான பேரணியில் மோதல்
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரா்கள், காவல் துறையினா் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.
பிரதமர் மோடியைச் சந்தித்தார் கேரள முதல்வர்
பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தில்லியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.
சமக்ர சிக்ஷா திட்ட நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சமக்ரா சிக்ஷா எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது
கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வடகிழக்கு பருவமழை: நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க அமைச்சர் உத்தரவு
வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் வகையில் நிவாரண மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா்.
ஆகஸ்ட் இறுதிக்குள் இரண்டாயிரமாவது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு தகவல்
திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் இதுவரை 1,983 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் இந்த இலக்கு 2,003-ஐ எட்டும் என்றும் அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.
5 மாதங்களுக்குப் பின்னர் கவிதா ஜாமீனில் விடுவிப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக சிறையில் இருந்த தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
உக்ரைனுடன் பேச்சு: புதினிடம் மோடி வலியுறுத்தல்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.
இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள்!
இந்திய போா்க்கப்பல் ‘மும்பை’ திங்கள்கிழமை இலங்கையை சென்றடைந்தது.
கிருஷ்ண ஜெயந்தி: கோயில்கள், வீடுகளில் உற்சாக கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி தமிழகம் முழுவதிலும் கோயில்கள், வீடுகளில் திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மீண்டும் திறப்பு
உதகை தொட்டபெட்டா காட்சிமுனை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
சூடான்: அணை உடைந்து 60 பேர் உயிரிழப்பு
சூடானிலுள்ள அணை ஒன்று உடைந்ததால் அருகிலுள்ள வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமாா் 60 போ் உயிரிழந்தனா்.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மழை
உக்ரைன் மீது ரஷியா பல மாதங்களில் அளவுக்கு ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
மனிகா பத்ரா அபாரம் புணேயை வீழ்த்தியது பெங்களூரு
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) லீகின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணேரி பல்தானை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது பெங்களுா் ஸ்மாஷா்ஸ்.
ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிர்வகிப்பதில் அர்த்தமில்லை
ஜம்மு-காஷ்மீரை தில்லியிலிருந்து நிா்வகிப்பதில் அா்த்தமில்லை எனவும் அந்தப் பிராந்தியத்துக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
ரூ.116 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பெரியகுளம், நத்தம் பகுதிகளில் 50 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தேனி மாவட்டம், பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு வெடி குண்டுகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக மூவரைக் கைது செய்தனர்.
குரலற்ற சமூகத்துக்கும் ஆதரவுக்கரமாக செயல்பட்டவர் கருணாநிதி - கனிமொழி எம்.பி.
பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமின்றி தொழுநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் போன்ற குரலற்ற மக்கள் சமூகத்துக்கும் ஆதரவுக்கரமாக செயல்பட்டவர் கருணாநிதி என்று திமுக துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி புகழாரம் சூட்டினார்.
வளரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-சிங்கப்பூர் உறுதி
வளா்ந்து வரும் துறைகளான எண்மமயமாக்கம், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள், அதிநவீன உற்பத்திமுறை, இணைப்பு வசதிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.
முதல்வர் இன்று அமெரிக்கா பயணம்
தமிழகத்துக்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக.27) அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.